Advertisement

இந்தியா வருவதை நீதிபதி முடிவு செய்வார் : விஜய் மல்லையா

லண்டன் : 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. இதற்கிடையில் அமலாக்கத்துறையும் மல்லையாவின் சொத்துக்களை முடங்கியுள்ளது.

எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்படலாம் என்ற நிலை இருந்த போதிலும் லண்டனின் டென்னீஸ் போட்டி, பார்முலா ஒன் கார் பந்தயம்,குதிரை பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை பார்வையிட்டு லண்டனில் பொழுதை கழித்து வருகிறார் மல்லையா. இந்நிலையில் லண்டனின் ஓவல் நகரில் நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண மல்லையா வந்தார்.

அப்போது, நீங்கள் இந்தியா வருவீர்களா என ஏஎன்ஐ செய்தி நிறுவன செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மல்லையா, நான் இந்தியா வருவது பற்றிய நீதிபதி தான் முடிவு செய்வார் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • ஆப்பு -

  குடிமக்களை கேவலமாக நடத்த இங்கிலாந்து ஒண்ணும் இந்தியா அல்ல. அங்கே தப்பு பண்ணாத வரை மல்லையா நல்லவன் தான் அவிங்களுக்கு....

 • Darmavan - Chennai,இந்தியா

  இவனை அனுப்பாவிட்டால் இருதரப்பு உறவு பாதிக்கும் என்று இங்கிலாந்துக்கு சொன்னால் நடக்குமா?

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  பணத்தை திருடி தப்பி ஓடிய திருடனுக்கு "ர்" மரியாதை செலுத்தும் தினமலர். ஹலோ தினமலர் உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

 • siriyaar - avinashi,இந்தியா

  No judges are abovr money, so he can be only punished by god.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  திஹாரில் களி என்று எழுதுவது எத்தனை மடத்தனம் என்று தெரிகிறதா? ஐரோப்பிய தரத்தில் சிறையின் மூன்று அறைகள் தயாராகின்றன. ஜெயிலரின் கீறல் விழுந்த மேசை/ சிறை அலுவலர்களின் உடை மாற்று அறை மற்றும் டைனிங் ரூம் தரம் உயர்த்த நிநி இல்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆண்டுக்கு ஆண்டு சொத்து மதிப்பு உயராமல் இருக்கும் அரசியல் வாதியை யாராவது பார்த்து இருக்கிறீர்களா ??

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  அரசியல் சேவை என்பது போய் தொழில் என்று மாறியதால் வந்த வினை

 • Anand - chennai,இந்தியா

  ஏன் இந்தியாவின் ரா உளவு அமைப்பு மூலம் இப்படிப்பட்ட ஆட்களை இரண்டு மூன்று பேரை போட்டு தள்ளக்கூடாது?அப்படி செய்தால் இந்தமாதிரி பேசுவானுங்களா? ஓடாமல் மூடிட்டு இங்கேயே இருப்பானுங்க. இதே இஸ்ரேலா இருந்தா, தங்களின் உளவு அமைப்பான மொசாட் மூலம் கண்டிப்பாக அரங்கேற்றியிருப்பார்கள். நமக்குத்தான் இன்னும் பயிற்சி தேவை.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  It shows our government's inability , inefficient and incapable of arresting the cheats and looters of our nation's banks.Our Senior officers were already agreed about their inability and difficult of arresting the another Cheat and looter Mehel Kockchi who is taking shelter in an Island Antiquewa and now this great Cheat tells his arrest will be decided by his judge shows his head strong speech and don't care activity.These chests and looters are playing hide and seek games with our country without any shame or fear and very soon God will give them punishments and also to the Politicians who helped them to escape to foreign countries very easily.

 • Natarajan - Hyderabad,இந்தியா

  பணம் பாதாளம் மட்டும் பாயும்

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  வா தல ..எப்படி இருக்க ?

 • Karthik - ,

  இவனை இந்தியாவுக்கு கடத்தி தூக்கில் போட வேண்டும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நம்மை முன்பு சுரண்டிய நாடு இப்போது சுரண்டுபவர்களை ஆதரிப்பது ஆச்சர்யமில்லை .அன்றும் இன்றும் காலிஸ்தான் போன்ற பயங்கரவாதிகள் வளரஉதவுவதும் தான் இதெல்லாம் சமாதானத்தின் தேவனின் உத்தரவு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement