Advertisement

முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கல்

சூலுார்:முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதைக் கண்டித்து, பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.சூலுார் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு, 300க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், முறைகேடாக ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை, பேரூராட்சி அலுவலகத்தை, 20 பெண்கள் உட்பட, 50 பேர் முற்றுகையிட்டனர். பின், பாப்பம்பட்டி பிரிவு ரோட்டுக்கு வந்து திடீரென மறியல் செய்தனர்.தகவல் அறிந்து, சூலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'குடிநீர் இணைப்பு கேட்டு, 300க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். ஆனால், வரிசைப்படி இணைப்பு தராமல், சமீபத்தில் பணம் கட்டியவருக்கு, பேரூராட்சி நிர்வாகம் இணைப்பு கொடுத்துள்ளது. அதைக் கண்டித்து மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் செய்தோம்' என்றனர்.மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, புதிதாக வழங்கப்பட்ட இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement