Advertisement

பா.ஜ., எம்எல்ஏ., நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு

புல்தனா : மகாராஷ்டிர பா.ஜ., எம்எல்ஏ.,வான ராம் கதம், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்க தான் உதவி செய்வதாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்காக தனது மொபைல் எண்ணை அவர் வெளிப்படையாக அறிவித்தார்.


ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வெளியோகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தான் மன்னிப்பு கேட்பதாக மற்றொரு வீடியோவை வெளியிட்டார் ராம் கதம். இருந்தும் ராம் கதமிற்கு எதிராக மகளிர் அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன. ராம் கதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., தலைமையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், காங்., தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி, பா.ஜ., எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். பெண்களை கடத்துவேன் என அவர் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். ராம் கதமின் பேச்சிற்காக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  இங்கு தமிழ்நாட்டிலும் சில அரசியல் வியாதிகளின் நாக்கை வெட்டினால் நாடு உருப்படும். இதற்கு சன்மானம் எல்லாம் கிடையாது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதுபோன்ற அறிவில்லாத மனிதர்கள் பொதுசேவையில் ஈடுபட தகுதி இல்லாதவர்கள். இருவரையும் அந்தந்த கட்சிகள் வெளியேற்றவேண்டும்.

 • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

  Is it a democratic way challenging to cut the tongue of a man as is being discussed in the TV channels quoting democracy? Where is the judges / advocates gone who are voluntarily taking cases to the Court of Law? Can any man talk any thing as he wish In a democratic Country like India? The M.L.A. should be suspended and his salary withheld (if he is a sitting M.L.A).till he get apology from public. The Govt. should take immediate action on this subject.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வன்முறைக்கு வன்முறை சரியாகிவிடுமா ??

 • HSR - Chennai,இந்தியா

  வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல்..இவனை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

 • hasan - tamilnadu,இந்தியா

  பி ஜே பிக்கு நாக்குலே சனி

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பீஜேபீ MLA 2 நாட்கள் முன்னால் சொன்ன ஆபத்தான கிரிமினல் அறிவிப்பை அனைவரும் கண்டித்த நிலையில் அதுபற்றி எதுவுமே சொல்லாத மகாராஷ்டிரா அரசு/ பீஜேபீ யாரும் எதுவும் சொல்லவோ/ கண்டிக்கவோ/ வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. அதிலிருந்து திசை திருப்ப இந்த காலாவதியானவரைப் பிடித்து காசு கொடுத்து இப்படி சொல்ல சொல்லி யிருக்கலாம்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆக மொத்தம் நம்ம அரசியல்வாதிங்க எந்த கட்சியாயிருந்தால் என்ன அதே அசுத்த ரத்தம் தான் ஓடுகின்றது.

 • I love Bharatham - chennai,இந்தியா

  எதோ ஒருவன் சொன்னதுக்காக ....ஒட்டு மத்த கட்சியையும் குறை சொல்வது அர்த்த மற்றது .....கருத்து எழுதுவோர் முத்தலில் தர் பரிசோதனை செய்து நல்ல மனிதர்கள் மற்றவர்களை குறை கூறவும் .....பிஜேபி வந்தாலே கருத்து சிங்கங்கள் குகை விட்டு வெளியே வந்து விடும்

 • வினோத்,அறந்தை.. -

  அடிங்க.. .தன் பாலின உறவே இந்தியாவுல சரி என்று உச்ச நீதி மன்றமே சொல்லிருச்சி...இத பெருசு பண்றானுக....

 • Sri Ra - Chennnai,இந்தியா

  காட்டுமிராண்டி பசங்கள இருக்காங்க.

 • Vijay - Chennai,இந்தியா

  கருத்து சுதந்திரம்

 • J.Isaac - bangalore,இந்தியா

  சமூகநீதி , ஒழுக்கம் , உடை கட்டுப்பாடு , பேச்சு கட்டுப்பாடு ,மனித நேயம் பற்றி பேசுவோம் . ஆனால் செயல் படுத்த மாட்டோம்.

 • chails ahamad - doha,கத்தார்

  பா ஜ எம் எல் ஏ பேசியது தவறான வார்த்தைகளே , ஆண்கள் விருப்பப்பட்டால் என்னிடம் வாருங்கள் , உங்களை விரும்பாத பெண்ணாக இருந்தாலும் தூக்கி வந்து கலியாணம் செய்து வைக்கின்றேன் என்று சொன்னது தவறே , அவரை கண்டிக்க வேண்டிய கடமை தார்மீகமாக பா ஜ தலைவர்களுக்கு உண்டு என்றாலும் , அந்த விவகாரத்தின் விபரித தன்மைகளை உணரும் அளவில் அந்த கட்சியின் தலைவர்கள் இல்லை என்பதே நாம் அறிந்த வரைக்கும் உண்மை நிலைகளாகும் , ஆட்சி அதிகார மமதையில் எதையும் பேசலாம் , எதையும் செய்யலாம் என்ற சிந்தைகள் அந்த கட்சியினரிடம் தலை தூக்கியுள்ளதால் , நாம் கேள்விப்படும் பெரும் பாலான அத்துமீறல்கள் பா ஜ கட்சியினர் சார்ந்ததாகவே உள்ளதால் , மஹாராஷ்டிரா பா ஜ எம் எல் ஏ யின் பேச்சு அவர்களது இயல்பான சுபாவங்களே , காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பா ஜ எம் எல் ஏ யின் நாக்கை வெட்டுபவர்களுக்கு சன்மானம் தருவதாக சொன்னதும் தவறே, சாக்கடைக்கும் பூக்கடைக்கும் ஏகப்பட்ட வாடைகள் வித்தியாசம் உள்ளதால், சாக்கடையை சார்ந்த பா ஜ எம் எல் ஏ க்கு, பூக்கடையை சார்ந்த காங்கிரஸ் தலைவர் மிரட்டல் பதில் கூறி இருக்க கூடாது என்பதே பெரும்பாலோர் கருத்தாக இருக்க முடியும் ,

 • பிரபு - மதுரை,இந்தியா

  இவரு நெறையா சினிமா பாக்குறாருன்னு நெனைக்கிறேன்.

 • sahayadhas - chennai,இந்தியா

  பசு வதைப்பதை விரும்பாத உங்களுக்கு மனுசன வதைக்க எப்படி தோணுது கத்திய தீட்டாத உன் புத்திய தீட்டு

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  //செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முன்னாள் அமைச்சரும், காங்., தலைவர்களில் ஒருவருமான சுபத் சவ்ஜி, பா.ஜ., எம்எல்ஏ ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு நான் ரூ.5 லட்சம் பரிசு வழங்குவேன். //அந்த MLA பேசியது தவறு. நாக்கைவெட்டினால் ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசிய அந்த காங்கிரஸ் தலைவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது சாபக்கேடான இது போன்ற செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சியின் இது போன்ற செயல்களால் தான் நாடு இன்னமும் பல துயரங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது

 • SB.RAVICHANDRAN -

  தமிழ்நாடு பக்கம் வந்து தர்மக்கோல் ராசுவை பாக்காதிங்க பழகாதிங்க சொன்னா கேட்கனும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நுணலும் தன் வாயால் கெடும் இது அனைவருக்கும் பொருந்தும்.

 • MurugeshsivanBjpOddanchatram -

  காங்கிரஸ் கலாச்சாரம் அருமை

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இத்தனைக்கும் மகாராஷ்டிரா நல்லாவே முன்னேற்றம் அடைஞ்ச மாநிலம். எங்கே தமிழ் நாட்டை கேவலமாக நினைக்கும் பகோடாஸ்.... குறைஞ்சது காங்கிரஸ் ஆள் பண்ணுனது தப்புன்னாவது சொல்லுங்கப்பா...

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  பாஜக எம்பி மற்றும் எம் எல் ஏக்களில் தொண்ணூறு விழுக்காடு இவரைப்போலத்தான் இருக்கின்றனர்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கட்சியை விட்டு இரண்டு அறிவாளிகளையும் தூக்க வேண்டும்...

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  சபாஷ்...சரியான போட்டி........

 • Kounder Bell - Kodambakkam

  இதுபோன்ற பேச்சுக்கள் அது எவராக இருந்தாலும் எந்தக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கண்டிக்கப்படத் தக்கது

 • நக்கல் -

  தமிழ்நாட்டுல சோப்பியாவுக்கு கெடச்ச ஆதரவ பாத்துட்டு கருத்து சுதந்திரத்துல என்ன வேணாலும் பேசலாம்ன்னு நெனச்சிட்டார் போல இருக்கு.. அவருக்கு தெரியாது தமிழ்நாட்டுல கருத்து சுதந்திரம் BJPக்கு எதிரா மட்டும்தான்னு..

 • இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்க ஊர்லயும் தான் மாதர் சங்கங்கள் இருக்கு ஆனா தகரமுத்துவிற்கும், குரங்கு புத்திரனுக்கு எதிரா ஒன்னும் பொங்கவில்லை..

 • ஆப்பு -

  ரெண்டு பேரையும் பதவி நீக்கம் செஞ்சு, 20 வருஷம் உள்ளே போடுங்க... இதையெல்லாம் நீதியரசர்கள் கண்டுக்கவே மாட்டாங்களா?

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  நாக்கை வெட்டலாம் தப்பில்லை ஆனா சொன்னவாறே அதை செய்ய வேண்டியது தானே எதுக்கு தைரியமில்லாமல் ஒளிந்து கொண்டு அடுத்தவனை ஏவி விடுறான் (மானங்கெட்ட வன்)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பி ஜெ பி ஆட்சி கசாப்பு கடை ஆட்சி மாதிரி இருக்கிறது...

 • tamil - coonoor,இந்தியா

  பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒழுக்கத்தை பற்றி பேசியிருந்தார், ஆனால் நாட்டில் இதுபோன்ற வன்முறை வெறியை தூண்டும், ஒழுக்கக்கேடான பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது, ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது எந்த ஒரு இயக்கமும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவில்லை

 • chander - qatar,கத்தார்

  நாக்கை நீங்க போய் வெட்டவேண்டியது தானே மக்களை ஏன் தூண்டுகிறீர்கள் நீங்கள் அரசியல் வாதிகளா ரவுடிகளா

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  காதல் ஜோடி தஞ்சம் புகுந்தார் காவல்நிலையத்தினர் திருமணம் செய்து வைக்கின்றனர். அதைத்தான் அந்த உறுப்பினர் வெளிப்படையாக சொன்னார்‌ இதில் தவறேதுமில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement