Advertisement

 சென்னை மாவட்ட ஆட்சியருக்கு 8 வாரம் கெடு நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடும் குற்றம்!  நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என விளாசல்  கடமை தவறிய அதிகாரிகளுக்கு, 'கிடுக்கிப்பிடி'

சென்னை:'சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, எட்டு வாரத்தில் அகற்ற, சென்னை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கற்பகவள்ளி உள்ளிட்ட, 10 பேர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:அயனாவரம், குளப்பகுதியில், 25 முதல், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மின் இணைப்பு போன்ற வசதிகளை, அரசு வழங்கி உள்ளது.எங்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி, அதிகாரிகளிடம் முறையிட்டோம்; ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரினர்.

இந்த வழக்கு, நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனுதாரர்கள் பட்டா கேட்கும் இடம், அரசுக்கு சொந்தமான குளம். இதனால், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடியாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த, 2008ல் அறிவிக்கப்பட்ட, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டுமனை வழங்கும் திட்டத்தை, 10 ஆண்டுகளுக்கு பின், தற்போதும் தொடர முடியாது.அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமை. எனவே, இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது.

மெத்தனம்


தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், அரசு புறம்போக்கு நிலங்களை, ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டால், குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றுகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
அரசு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, அதிகாரிகளின் கடமை. இவ்விவகாரத்தில், அதிகாரிகள் கடமை தவறிவிட்டனர்.சிறிய மழைக்கே, சென்னை நகரம் வெள்ள பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு, மனிதர்களின் தவறு தான் காரணம் என, நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.இதற்கு பின்னும், அதிகாரிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்பு கொடும் குற்றம்.

இதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போதாது; சம்பந்தப்பட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்நிலைகளை ஆக்கிரமித்து, வீடு கட்டியிருப்போருக்கு, வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தமிழக வருவாய் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும்.இரண்டு வாரங்களில், மாவட்ட ஆட்சியர், ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

அறிக்கை

சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, எட்டு வாரங்களில் அகற்ற, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையையும், சென்னை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய பாதுகாப்பை, போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். உத்தரவை அமல்படுத்தியது குறித்து, 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  இது புதுவைக்கு பொருந்தும்

 • kalyanasundaram - ottawa,கனடா

  mr. srinivasan your confirmation is a confirmed . but bribe received by concerned cannot be retrieved. it is an unfortunate happening

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  இனி யார் ஆக்ரமிப்பு செய்யப்போகிறார்கள் - அதான் எல்லாம் செம்மையாக ஆக்ரமித்து அலங்காரம் செய்துகொண்டு வாழ்கிறார்களே சாலைகள், வீதிகள், தேசிய நெடுஞ்சாலைகள், நீர்நிலைகள், நதிக்கரையில் என்று எல்லாம் செம்மையாக ஆக்ரமிப்பு செய்தாகிவிட்டது அதன் உச்சகட்டமாக அண்ணா நினைவிடம் தமிழ் தேசிய சொத்து அதையும் ஒருவர் ஆக்ரமித்துக்கொண்டார் தன் வாழ்நாளில் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் கருப்பு கண்ணாடியால் ஒளிந்துகொண்டு அவருக்கு ஆக்கிரமிப்பில் பயனடைந்தோர் - அண்ணா நினைவிடத்தையும் ஆக்ரமித்து கொண்டு அவருக்கு பதில் பயன் கொடுத்துவிட்டார்கள் வரலாறு சார் இது

 • TSRSethu - Coimbatore,இந்தியா

  Court has to closely monitor this till the orders are uted and implemented

 • Vasu - Mumbai,இந்தியா

  கூகுளை மேப் 2015 -2016 மற்றும் 2017 , 2018 துரைப்பாக்கம் பல்லாவரம் ரெடியால் ரோடு பார்க்கவும். எவ்வளவு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்று தெரியும். நிறைய குடியிருப்பு கட்டுமானம், IT பார்க், ஹோட்டல், ஒரு மத நிறுவனம், நீர் நிலைகளை மூடி அதன் மேல் கட்டுமானம் செய்துள்ளது. தயவு செய்து நீர் ஆதாரங்களை காப்பாற்றவும்.

 • Vasu - Mumbai,இந்தியா

  உடனே கணம் நீதியரசர் மற்றும் கலெக்டர் சென்னை தொரைப்பக்கம் பல்லாவரம் ரெடியால் ரோடு சென்று ஆய்வு செய்ய கேட்டு கொள்கிறேன். பத்து பெரிய நீர் நிலைகள் இருந்த idathil, வணிக வளாகம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பும் உள்ளது. தயவு செய்து நீர் நிலைகளை காப்பாற்றவும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த நீர்நிலைகல் பெருமளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது... அப்போ எல்லாம் இந்த நீதிமன்றங்கள் என்ன செய்தது...? மு க ஜெ ஆகியவர்களை எதிர்க்க பயமா...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  ரெண்டு வருஷமா ஒண்ணும் பண்ணாத அதிகாரிகளா ரெண்டு மாசத்துல நடவடிக்கை எடுக்கப் போறாங்க...???

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  இங்கு எல்லாமே அரசியல் தான்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement