Advertisement

பதவியா பெரிசு: பாடம் கற்று தந்த கலெக்டர்

திருவனந்தபுரம்: கேரளாவில், தான் யார் என்று கூறாமல், யாருக்கும் தெரியாமல் 10 நாட்களுக்கு நிவாரண பணிகளை செய்த கலெக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கேரளாவில் பிறந்தவர்மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே இருக்கும் சிறிய யூனியன் பிரதேசம் தாத்ரா மற்றும் நகார் ஹவேலி. இங்குள்ள சில்வாசா என்ற மாவட்டத்தின் கலெக்டர் கண்ணன் கோபிநாதன். கேரளாவில் பிறந்தவர். இவர், ஆக., 26ம் தேதி தான் பணியாற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அளித்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்தார்.

அதன் பிறகு தனது சொந்த ஊரான கோட்டயம் அருகே உள்ள புத்தபள்ளிக்கு செல்வில்லை. அதற்கு பதில் அரசு பஸ்சில் பயணித்து, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பத்தினம் திட்டா பகுதிக்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாமுக்கு சென்ற கண்ணன், தான் ஒரு கலெக்டர் என்பதை யாரிடமும் கூறவில்லை. அங்கிருந்தவர்கள் கண்ணனிடம், 'பையை ஓரமாக வைத்து விட்டு நிவாரண பணிகளில் ஈடுபடுங்கள்' என, அதட்டலாக கூறினர். நிவாரண பணியில் தன்னையும் இணைத்து கொண்டார். லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கினார். பிற மீட்பு பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிரமாக கள பணியாற்றினார்.

அடையாளம் தெரிந்தது எப்படி?அவர் கலெக்டராக பணியாற்றும் இடத்தில் இருந்து கிளம்பும் போதே விடுமுறைக்கான கடிதத்தை அளித்து விட்டு தான் வந்து இருந்தார். எனவே, அவர்களும் இவரை தேடவில்லை. நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருந்த சிலர், கண்ணனை சில நேரம் கடுமையாக பேசியுள்ளனர். அப்போது கூட அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.

எனினும், கொச்சியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற போது அவரை சிலர் அடையாளம் கண்டு கொண்டனர். எனினும் ஒன்றும் சொல்லவில்லை. இறுதியாக எர்ணாகுளத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற போது, எர்ணாகுளம் மாவட்ட கலெக்ர் முகமது ஒய் சபிருல்லா, கண்ணனை அடையாளம் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அதன் பிறகு தான் கண்ணன் ஒரு கலெக்டர் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

அதன் பிறகு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு புறப்பட்டு சென்று, வழக்கம் போல் கலெக்டர் பணிகளில் ஈடுபட தொடங்கினார். அவர் கொடுத்த விடுமுறை கடிதத்தை யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்காமல் தொடர்ந்து பணி புரிந்த நாட்களாகவே அறிவித்து விட்டது.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

  நம் திருவள்ளுவரின் வாக்குப்படி, உங்கள் தாய் பெருமை கொள்ளும் நேரம் சகோதரா

 • nicolethomson - bengalooru,இந்தியா

  கடுமையாக பேசிய கயவாளிகள் இப்போ செல்பி எடுக்காம போயிட்டமே என்று வருத்தப்பட்டிருப்பார்கள்?

 • Achchu - Chennai,இந்தியா

  மெரிட் மெரிட்டுன்னு எதோ சொல்றாங்களே இதுதாங்க மெரிட் நான் பெரியவன் என்று நினைக்கும் போது நாம் சிறியவராகிப் போகிறோம்.நாம் ஒன்றுமில்லை என்றறியும் போது நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள்.ஒரு மனிதராக இருப்பதன் அழகே அதுதான்.- சத்குரு

 • Achchu - Chennai,இந்தியா

  அந்த காலத்தில் க்லெக்டரைக் கண்ட நினைவு ஏனோ நினைவில் நிழலாடுகிறது நம்மைக் நேராக பார்க்கக் கூடாதுன்னு கொள்கை எங்கேயோ பார்த்துக் கொண்டு உம்மென்று வெறுப்பை உதட்டில் துருத்திக் கொண்டு இந்த நாட்டையே தலையில் சுமக்கும் ஒரு முக பாவனை உம் என்றால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்து விடும் எனவே நோ சொல்லியே பழக்கப் படுத்தியே வளர்த்திருப்பார்களோ என்ற ஐயத்துடன் வெளியேற வேண்டியானது

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இப்படி இருப்பவர்களை மறைத்தே விடுவார்கள் அரசியல்வாதிகள் ..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவரைப் போல ஒரு சிலர் இருப்பதால்தான் இந்தியா இன்னும் இயங்குகிறது. வாழ்க நீ வளர்க உங்கள் தொண்டு உங்கள் பணி இளைஞர்களுக்கு ஊக்கமாக இருப்பதாக.

 • Srinivasan S - chennai,இந்தியா

  Hats off to him, god bless him, interestingly, Govt., has not considered as absent, rather they have given attendance, great, all politicians should learn from him..all they have to maintain their white dhoties,,,

 • செந்தில் - ,

  அரசு அதிகாரிகள் இவர் போல ஒரு சிலர் இருந்தால் போதும். சுபிட்சமாகும்

 • J Padmanabhan - Chennai,இந்தியா

  நம்ம ஊர் அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே?

 • SB.RAVICHANDRAN -

  Greetings collector Sir.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பதவி வந்தது உடன் பணிவும் வந்தது... எல்லாவற்றையும் விட மனித நேயம் அபரிமிதமாக வந்தது.,..

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Such an officer should be honored during national festivities instead of cine celebrities and so called 'kalvith thanthai' category people Hats off to the blessed soul The u.t. To be appreciated for the gesture of treating his leave as on duty

 • s t rajan - chennai,இந்தியா

  சும்மா வேட்டியை மடிச்சுக் கட்டி தலையில் முணடாசுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்து அலையும் ஆளும் எதிர்கட்சி அரசியல் தாதாகளுக்கும், அகங்காரத்தின் உச்சியில் தன் பைஜாமா மண்ணைத் துடைக்க சொல்லி குத்தாட்டம் போடும் மந்தி(ரி) களுக்கு நடுவே இப்படி ஒரு கண்ணன் இருப்பது நமக்கு பெருமிதம் தான்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இதற்கு எதற்கு இவ்வளவு பில்டப்? கலெக்டர் என்றால் கொம்புள்ளவர் என்று நினைத்து கொள்வது ஏன்? வளர்ந்த மேலை நாடுகளில் மாநில முதல்வர் என்ன, நாட்டு தலைவன் கூட சாதாரணமாக தான் நடந்து கொள்கிறார்கள்.. ஆனால் இந்தியாவில் தான், அரசு அதிகாரி என்றால், அரசியல்வியாதி என்றால் ஆட்டம் எக்கச்சக்கமாக இருக்கும். மாறுதலாக நம்மூரில் கேரளா முதல்வரே சர்ச் வாசலில் தரையில் உட்கார்ந்து மதநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  ராயல் சல்யூட் கலெக்டர் சார். உங்களை போன்ற மனிதாபிமானம் கொண்டவர்களாக இப்போதிருக்கும் இனி வரும் ஆட்சிப்பணி புரிபவர்கள் மாறினால் நாட்டுக்கு நல்லது.

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  பாராட்டுவோமே.

 • a.s.jayachandran - chidambaram,இந்தியா

  நீங்கள் தான் உண்மையான அரசு ஊழியர் வாழ்த்துக்கள் .

 • Ganesh - chennai,இந்தியா

  Great sir Hats off. Great that the govt decided to reject the leave decision.

 • Siva - Aruvankadu,இந்தியா

  வாழ்த்துக்கள் கலெக்டர் அவர்கள்... வாழ்க வளமுடன்.....

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் எனும் குறளும் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் எனும் குறளும் இவருக்கு முற்றிலும் பொருந்தும் . அதே போல இவரை அடையாளம் கண்ட திரு முகம்மது அவர்களும் எளிமையானவர் . ஆட்சியர் அலுவலகத்திற்கு மிதி வண்டியில் வருபவர் . இவர்களுக்கு எளிமையும் மக்கள் பணியும் மட்டும் தான் ஆடம்பரம் .

 • rajan. - kerala,இந்தியா

  மனதார இந்த அதிகாரியை வாழ்த்துகிறோம்.

 • yila - Nellai,இந்தியா

  நம்ம கட்சிகளின் தலைவர்கள், தலைவிகள் ........?

 • ருத்ரா -

  பாதுகாப்பு அதிகாரிகளையே அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்தும் விதமே எங்களை பாதித்தது. நீங்கள் கலக்டராக இருந்தும் பணிவோடு பணி செய்தது Really great. தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம். பாராட்டுக்கள் சார்.

 • mv murugan - coimbatore,இந்தியா

  மாண்புமிகு கலெக்டர் கண்ணன் கோபிநாத் அவர்களின் பாதத்தை மனதால் தொட்டு வணங்குகிறேன்.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  சபாஷ். நல்ல மனிதர். கூடவே அவரது விடுமுறை நாட்களை வேலை நாட்களாக மாற்றிய அந்த யூனியன் பிரதேச அரசுக்கும் பாராட்டுக்கள்.

 • R.SUBRAMANIAN -

  எங்கள் மாநிலத்தில் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டே கொள்ளையடிப்பார்கள்

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  யூனியன் பிரதேசம் லீவு நாட்களை பணிபுரிந்த நாட்களாக அறிவித்தது மிகவும் பாராட்ட தக்கது.

 • spr - chennai,இந்தியா

  பாராட்டுகள் வாழ்த்துகள் "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே." என்பது இவர் போன்றவருக்காகவே சொல்லப்பட்டதோ

 • கார்த்திக் சுப்பிரமணி - Coimbatore,இந்தியா

  வாழ்த்துக்கள், இருந்தாலும் கலெக்டர் என்று சில கொள்கைகள் உள்ளன.. யார் யார் எந்த வேலை செய்ய வேண்டுமே அதுவே அவர்கள் செய்யணும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  தன்னடக்கத்துடன் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர் பணி செய்த விதம் பாராட்டுக்குரியது ..,வாழ்த்துக்கள் ..

 • madhavan rajan - trichy,இந்தியா

  நிறைகுடம் தளும்பாது. பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா. இவரை தியாகச் செம்மல் என்று அழைப்பது பொருத்த்தமாக இருக்கும்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  இவரை மாதிரி ஆட்கள் இருக்கிறதினால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது . வாழ்த்துக்கள் தலைவரே

 • Shiv - Coimbatore,இந்தியா

  இவர் மாதிரி எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதனால் தான் இந்த உலகம் இப்போதும் நன்றாக இயங்கி கொண்டுள்ளது.

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  பரந்த பாலைவனத்தில் ஒரு பாலைவன சோலை. கலெக்டருக்கு சபாஷ்.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  சூப்பர் கலெக்டர் (இந்த மாதிரி தன்னார்வலர்கள் கிடைப்பது அரிது)

 • vigneshh - chennai,இந்தியா

  அபிநந்தன்கள், பாராட்டுக்கள், Congratulations

 • Lakshminarayanan Subramanian - Chennai,இந்தியா

  There are still some gems in India This country cannot be defeated until such great and REMARKABLE souls are there My BLESSINGS to you collector sir

 • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  புல்லரிக்க வைக்கும் சேவை வாழ்த்துக்கள் கோடி அவருக்கு

 • skr - tamil nadu,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  நீடூழி வாழ்க. இவரது நற்பணி தொடரட்டும்

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "Nirai Kudam Thazhumbadhu" so as this great man.The people who got this gentleman as their collector are blessed by God.They will get good and satisfactoryy services from this great man to their district without any doubt.May God bless him and his family with good health and long lives forever.

 • HSR - Chennai,இந்தியா

  சூப்பர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement