Advertisement

பெட்ரோலுக்கு மாற்று வேண்டும் : நிதின் கட்காரி

புதுடில்லி : பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் போன்ற எரிபொருள் இந்தியாவுக்கு அவசியம் தேவை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால், எரிபொருளுக்கான இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கே இது மிகப் பெரும் சவாலாக இருப்பதால் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நான் பெட்ரோல், டீசலுக்கு எதிரானவன் இல்லை. இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அதனை முன்னெடுக்கவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  பெட்ரோல் விலை உயரும்போது எத்தனால் மெத்தனோல் கலப்பது ஒரு வழி.. சூரியமின்சார உற்பத்தி ,காற்றாலைகள் மூலம் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்து மின்சார மோட்டார்கள் இயக்குவது இரண்டாவது...

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ராமர் பிள்ளை பித்தலாட்டம் ஏதும் செய்ய வில்லை. அவர் மூலிகைகளை கொண்டு ஒரு எரி பொருள் கண்டு பிடித்தார். அதை மூலிகை பெட்ரோல் என்று எல்லோராலும் திரித்து கூறப்பட்டது . ஒரு பாமரர் கண்டு பிடிப்பை ஏற்றுக்கொள்வதா என்று காழ்ப்புணர்ச்சி கொண்ட சில விஞ்ஞானிகளும் சில அரசியல் வாதிகளும் கண்டு பிடிப்பை இன்னும் மேல் நிலைக்கு கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.. பல மடங்கு மலிவான விலையில் அவர் தயாரித்த எரிபொருளை ஊக்குவித்து நம் நாட்டு முன்னேற்றத்துக்கு பயன் படுத்த அரசுகள் தவறி விட்டன.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ராமர் பிள்ளை மாதிரி இந்நாட்டு வளங்களை உபயோகப்படுத்த முயல்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அதானி மின்சார கார் தயாரிக்க போறாரா? அதுக்கு வரி சலுகை கொடுத்திட்டீங்களா? அந்த குந்தாணிகளும் பேப்பரில் பத்து லட்சம் மின்சார கார் தயாரிக்க தேவையான தொழில் துவங்குவதாக சொல்லி பல ஆயிரம் கோடி மானியம் வாங்கிக் கொண்டானுங்களா? இனிமே வரும் செய்திகள்..

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  மேலை நாடுகளில் உள்ளது போன்று சரக்கு போக்குவரத்திற்கு தனி மின் ரயில் பாதை இருந்தால் டீசல் பயன்பாடு வெகுவாக குறையும்.

 • arvind - coimbatore,இந்தியா

  ஐந்து வழிகள் உண்டு 1) எத்தனால்.. 2) பேட்டரி கார் (கர்நாடகாவில் 50 பஸ் ஓடுகிறது.. சென்னையில் 20).. 4000 பேட்டரி சார்ஜ் மையம் உருவாக்குகிறார்கள் (முடிந்த உடன் அந்த இடங்களில் பெட்ரோலுக்கு ரேஷன் வையுங்கள்).. 3) டிராபிக் ஒழித்தால் 10% சேமிக்கலாம்.. (வழித் தடங்களை தனியார் பஸ் ட்ரைவர்களை கலந்து முடிவு செய்யுங்கள்.. உடனடியாக 5% சேமிக்கலாம்) 4) நாமும் நம்மால் முடிந்த வரை போக்குவரத்தை தள்ளி வைக்கலாம்.. (மத்திய அரசுடன் தயவு செய்து ஒத்துழையுங்கள்) 5) இல்லையேல் இருக்கவே இருக்கிறது - DEMONITATION

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏனுங்க பெட்ரோல் விலை இன்னும் நாலு நாளில் குறைஞ்சுடும்னு போன மாசம் சொன்ன அமீத் பாஷா இதுக்கு ஒரு வழி இன்னும் கண்டுபுடிக்கலியா?

 • srikanth - coimbatore,இந்தியா

  பெட்ரோலுக்கு மாற்று வேண்டும் : நிதின் கட்காரி பிஜேபி கு மாற்று வேண்டும் : கஷ்டப்படும் மற்றும் யோசிக்க தெரிந்த மக்கள்

 • Krishnamoorthy -

  Anga orutharu mooligai petrol pathi kathi kathi thonda varandu poi irukkaru. Avara vittanunga.... British petroleum is controlling world petroleum market. They have the stakes of Indian oil and hindustan petroleum. Avanga Okay solra varikkum ivenunga katha sollite iruppanga. Aana entha stepum eduka maatanga

 • Nathan - Bengaluru,இந்தியா

  இந்த நிதியாண்டில் இது மேலும் உயரும்... மத்திய அரசு இவற்றை கட்டுப் படுத்த எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை... வெறும் அறிக்கைகளோடு முடிந்து விட்டது இவர்களுடைய பொறுப்பு....

 • RAMESH - CHENNAI,இந்தியா

  I am really wondering.. Govt have so many research team like C-DAC (Centre for Developing Advance Computing) and SPACE research team.. IIT, etc etc.. why the govt ask them to find the native for Petrol and Dissel? Surely BJP govt will not come again due to this petrol and dissel price hike.. The DMK missed to win at the time of 2011 election the main issue is Power as well the BJP going to loose them victory due to this huge petrol and gas price hike

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பெட்ரோல் விலை இவர்கள் பில்டப்பு கொடுக்கும் அளவிற்கு ஏறவில்லை. மன்மோகன் ஆட்சியில் 74 ரூபாய் இருந்தது இதனை ஆண்டுகளில் தற்போதுதான் 82 ஆக ஏறி இருக்கிறது. அதற்கும் சர்வதேச காரணங்கள் உண்டு (டாலர் விலை ஏற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ) சில நாட்களில் இது சீரடையும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உண்மையான பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை கேட்டு செயல்படலாம் மத்திய அரசு , டெல்லியில் ஆட்சியை மாற்றி அமைத்தது போல் பெட்ரோல் ஆட்சியை மாற்றி அமைத்து விடும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஏற்கனவே 2030 பின் பெட்ரோல் வண்டிகள் கூடாது என அறிவித்து பாட்டரி வண்டிகளை ஆய்வுகளை முடுக்கிவிட்டு தொலைநோக்கோடு செயல்படும் பாஜகவுக்கு பாராட்டுக்கள் கரும்பு சக்கையில் கிடைக்கும் எத்தனால் 5 முதல் 25 சதம் வரை பெட்ரோலோடு கலந்து பயன் படுத்தலாம் என்கிறார்களே அந்த முயற்சியை உடனடியாக செய்யுங்கள்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  அதற்க்கு உங்களை போல உள்ள அமைச்சர்களை சாமானிய மாணவன் தொடர்பு கொள்ள வேண்டும், எங்கள் ஐயா அப்துல் கலாமை தொடர்பு கொள்ள முடிந்தது போல இருக்க வேண்டும், சும்மா அப்போ ஹிந்தி அது இது என்று சொல்லிக்கிட்டு தெரிஞ்சா என்ன செய்யிறது?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏனுங்க ராமாயணத்துல பெட்ரோலுக்கு மாத்துன்னு சூர்ப்பனகை சொல்லி இருக்குன்னு நம்ம பிப்லாப்பு குமாரு சொல்லி இருப்பாரே. அதுல எதுனாச்சும் எங்கயாச்சும் தேடிப்பார்க்கலாமே.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதே போன்று அரசியல் கட்சிகளுக்கும் ஊழல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மாற்று இருந்தால் அதையும் செய்யுங்கள், ஜனநாயகம் உருப்படும், வந்தே மாதரம்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "மவாபாரதத்துல" Petrol லுக்கு மாத்துன்னு எதுனா சொல்லிருப்பானுங்களே.... அது என்னெ....?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கண்டிப்பா செய்யிவானுங்க...

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  மற்ற மாநிலத்தில் சொல்றது சரிதான் அறுபது ஆண்டுகள் நாறுனது போதாது, இங்கு கருத்து எழுதும் ...கள் வரலாறு தெரியாத கூமுட்டைகள் காவிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் ஒரு புனிதமான வார்த்தையை எங்கு உபயோகிக்கவேண்டும் என்று தெரியாதவர்கள் எப்படி நாடு உருப்படும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கான் கிராஸ் ஆட்சி காலத்தில் உலக சந்தை விலை விண்ணை எட்டும் அளவு உயர்ந்திருந்தபோது செலவழியாத அந்நிய செலாவணி இப்போது உலக சந்தையில் விலை பாதிக்கும் கீழே குறைந்துவிட்ட போது இவர்களுக்கு செலவழிகிறதாம். கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியும் என்பது கிராமத்து சொல் வழக்கு . அப்போது கான் கிராஸ் ஆட்சியில் பார்லிமென்ட் ரகளை பிரதமர் வீடு முற்றுகை கல்லெறி போராட்டம் எல்லாம் நடத்திய போது அவை எல்லாமே தக்காளி சட்னியாக இருந்ததாம். இப்போது ரத்தமாக மாறுகிறதாம். அடிப்பது கொள்ளை. அதை நியாயப்படுத்த ஊளை குரல்கள்.

 • MurugeshsivanBjpOddanchatram -

  டீசல் பெட்ரோல் விலையை உடனடியாக குறையுங்கள்...இல்லாவிடில் மபி,ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் அடி விழுவது உறுதி..

 • MurugeshsivanBjpOddanchatram -

  நாம் தோற்றால் அதுக்கு பெட்ரோல் டீசல் விலை முக்கிய பங்கு வகிக்கும்

 • Pandiyan - Chennai,இந்தியா

  மெத்தனால் எரிபொருளுக்கு போங்கள் அய்யா ..அது குப்பைகளில் இருந்தும் தயாரிக்கலாம் ..நமது நாட்டிலும் ஒருசில நிறுவனம் (ENERTEK ..ENERKEM .. ) குப்பையில் இருந்து தயாரிக்கிறது ..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எதனால் போட்டால் கார் பஸ் லாரி எல்லாம் ஓடாது சார். மக்கள் மங்கா மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போது நாட்டில் இருக்கிற எந்த வண்டியும் எதனால் போட்டால் ஓடாது. எத்தனாலில் ஓடும் வண்டிகளை இன்னும் எந்த நாடும் - ரிப்பீட்- எந்த நாடும்- தயாரிக்கவில்லை, தயாரிக்கவும் இயலாது. அறிவியல் ஆசிரியர்கள் நண்பர்களாக இருப்பின் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 85 % எதனால் 15 % - பெட்ரோல் கலந்து சோதனை ஓட்டம் செய்து பார்த்தார்கள். வெற்றியடைந்தது என்று சொல்ல இயலாது. எஞ்சினை ஸ்டார்ட் செய்ய பெட்ரோல் தான் வேண்டும். தனி டேங்க் அண்ட் டியூபிகள் வேண்டும். ஸ்டார்ட் ஆனா பிறகு எதனால் -பெட்ரோல் கலப்பை உபயோகிக்கலாம், ஆனால் கரும்புகை வருது/ ஸ்பீட் இல்லை/ பிக் அப் இல்லை. இவை தான் ஆராய்ச்சி முடிவுகள். இந்த ஆட்சிக்குத் தான் உடனே மாற்று வேண்டும். நல்லா இருந்த நாடும் நாலு பிஜேபி தலைகளும். நிலைமையில் இருக்கிறது தேசம்.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  பெட்ரோலுக்கு மாற்று வேண்டுமோ இல்லையோ, இந்த மக்கள் விரோத, ஊழல் குவிந்த, கொடுங்கோல் ஆட்சிக்கு உடனே மாற்று வேண்டும். பெட்ரோல் விலை ஏற்றப்பட்டதற்கே மாற்று வேண்டும் என்றால் ஒரு நாட்டையே சீரழித்து சின்னாபின்னமாக்கிய உங்கள் ஆட்சிக்கு உடனே மாற்று வேண்டுமே...

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  ராமர் பிள்ளை என்று ஒருத்தர் மூலிகை பெட்ரோல் என்று சொன்னாரே அதை ஆராச்சி செய்வதை விட்டு விட்டு உள்ளே தூக்கி போட்டு விட்டர்கள்.மாற்று வழி எதாவது கண்டு பிடித்தேர்கள் என்றால் அம்பானி அதானி உங்களை மாற்றி விடுவார்.எதனால் மெத்தனால் என்று சொல்லியே காலத்தை ஓட்டி விடுவீர்கள் .

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  நாஙக மாறணும்.. நீங்க 3000 கோடியில் படேலுக்கு, 20 ,000 கோடியில் சிவாஜிக்கு எல்லாம் சிலை வையுங்க.. எங்களிடமிருந்து கொள்ளை அடித்து....

 • மணிமாறன் - trichy,இந்தியா

  முதலில் பிஜேபி க்கு மாற்று வேண்டும்....எங்களை " மாத்து" மாத்து" என்று மாத்துகிறீர்களே..அதற்கு முடிவு கட்ட வேண்டும்...

 • KesavanHema -

  ஏன் ராமர் பிள்ளைக்கு அவரது மூலிகை பெட்ரோல் இக்கு வாய்ப்பு kodukalamey

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  These people were sleeping till now and now only woke up to give such suggestion while their tenure is going to .Very soon this suggestion will be accepted by the people and instead of Petrolukku Matru the present Aatchi Matru will be done in 2019 Lokh Sabha election.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  மாற்று வந்தால் உங்க கஜானாவுக்கு என்ன செய்விங்க...பீலா விடாதீங்க ....தற்போது கூட மோடி நினைத்தால் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்கலாம்...

 • Kounder Bell - Kodambakkam

  எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

 • முடியட்டும் விடியட்டும் - TAMIL NADU,இந்தியா

  என்னைகேட்டால் பண்டாரங்களுக்கு மாற்று வேண்டும் ஆட்சிக்கு வருமுன் என்னவெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு இப்போ பெட்ரோலுக்கு மாற்று வேணுமாம் அப்போ இந்த நான்கு வருடங்கள் நீங்க என்னதான் கழட்டிநீங்க கார்போர்டே காரன் கஷ்டப்படாம பார்த்து கொண்டீர்கள் மோடி ஆட்சிக்கு வருமுன் அதானி சொத்துமதிப்பு என்ன இப்போ எவ்வவலு இந்த நான்கு வருடத்தில் உயர்ந்துள்ளது ஆக உங்களை மாற்றுவதே சிறந்த மாற்றம் ஆகும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மாற்று என்ன , பெட்ரோலில் கொள்ளையடிக்கும் அரசுக்குத்தான் மாற்று அரசுவேண்டும் . காவிகள் அகன்று ஜனநாயகம் மக்கள் நல அரசுவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement