Advertisement

தலைமையாசிரியை காலில் விழுந்து வணங்கிய கலெக்டர்

சேலம்: அரசு பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில், தலைமையாசிரியை காலில் விழுந்து கலெக்டர் வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் ரோகிணி, ஆசிரியர்கள், மாணவியருடன் சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ரோகிணி, தலைமையாசிரியை தமிழ்வாணியின் காலில் விழுந்து வணங்கினார்.

பின் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:இன்று, நான் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள்தான். மாணவியரான நீங்கள், நாளை மேடைக்கு வர காரணமாக இருப்பதும் அவர்களே. அதனால் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெற மட்டுமல்ல, நல்ல பழக்க வழங்கங்களை கற்றுக்
கொள்ளவும் ஆசிரியர்கள் உதவுகின்றனர். அவர்களின் அறிவுரையை கேட்டு, சிறந்த முறையில் கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.நான், ஆரம்ப கல்வி முதல் உயர்
கல்வி வரை அரசு பள்ளியில்தான் படித்தேன். தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி உயர் லட்சியத்துடன் தயாராவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (35)

 • மாரிமுத்து.க - சென்னை,இந்தியா

  என்னடா இந்த கலெக்டர் அம்மா கொஞ்ச நாலா நியூஸ்ல வரலேன்னு பார்த்தேன்... இந்தா வந்துட்டாங்கல்ல...

 • மாரிமுத்து.க - சென்னை,இந்தியா

  என்னடா இந்த கலெக்டர் அம்மா கொஞ்ச நாலா நியூஸ்ல வரலன்னு பார்த்தேன்... இந்த வந்துட்டாங்கல்ல...

 • சீனி - Bangalore,இந்தியா

  ஒரு நல்ல பெண், ஒரு நல்ல அதிகாரி, ஒரு நல்ல குடிமகள், ஒரு மரியாதையான பெண். எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து, தமிழ் கற்று , கலெக்டருக்கு உரித்தான் கெட்டப்பில் என்ன ஒரு தன்னம்பிக்கியோட பேட்டி கொடுக்குது இந்த பாரதி கண்ட புதுமைப்பெண், இவர மாதிரி நம் ஊர் பெண்கள் ஒரு அதிகாரியாகி வேலைக்கு வர முயற்சி செய்யவேண்டும். இப்போதைக்கு தற்கொலை செய்துகொண்டது, விமானத்தில் சண்டைபோட்டது தான் நமக்கு எதோ பெரிய சதனையாளரா அரசியல்வாதிகள் காட்டுவது மிக துரஷ்டவசமாது. நல்லவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் பெண்களே, அவர்கள் தான் உன் ரோல் மாடல்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  கலெக்டராக உயர்ந்தாலும் ஆசிரியர்தான் உயர்ந்தவர் என்று கருதி தலைவணங்கிய அவருக்கு வந்தனம். மேலும் வயது முதிர்ந்தவர் தலைமையாசிரியர். அதிலும் தவறில்லை.

 • Mdmubarak Knr - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தாய் தந்தைக்கு பின்பு ஆசிரியர் தான் கலெக்ட்டர் செய்தது ஒன்னும் மிகப்பு இல்லை குணம் ஆன இப்படி கலெக்ட்டர் கிடைப்பது அரிதிலும் அரிது

 • bal - chennai,இந்தியா

  எந்த ஒரு பெரியவர்களை கண்டாலும் இது போல் மரியாதை கொடுப்பது என்பது இப்போதெல்லாம் இல்லாமல் போனதில் இது மாதிரி ஒரு சம்பவம் பெருத்த முன் உதாரணம்...நன்றி பெண்மணி....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சிலருக்கு மட்டுமே ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களின் ஆசிர்வாதம் கிடைக்க இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என்பேன். அதில் இந்த கலெக்டர் ஒருவர். தலைப்பை மாற்றி எழுதவேண்டும். ஆசிரியர்த தினத்தன்று லைமை ஆசிரியரிடம் ஆசிர்வாதம் பெற்ற கலெக்டர் என்று எழுத வேண்டும். காலில் விழுவது என்று தவறு போல மாறிவிட்டது. காலில் விழுந்து வணங்குவது தமிழர் பண்பாடு, உயர்ந்தவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் காலில் விழுந்து சேவித்து அவர்களின் அறிவுரை ஆசிர்வாதத்தை பெற்று கொள்வது என்பது மிகச் சிறந்த பண்பல்லவா. அவர்கள் சிறப்பாக இருப்பதற்கு வாழ்த்துவார்கள் நிச்சயமாக. திருமண மான பெண்ணை தீர்க்க சுமங்கலியாய் நீடூழி வாழ் என்றும் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்றும் நாவில் சரஸ்வதி நடமாடட்டும் என்ரீல்லாம் வாழ்த்துக்களை பெற்றது தவறானதாகி போனதா அரசியல்வாதிகள் குற்றமிழைந்து மன்னிக்கவேண்டி காலில் விழுந்த மரபால். ஆசீர்வாதம் பெறுவதற்கு காலில் விழுவது உயர்ந்தவர்கள் பெரியவர்கள் காலை தொட்டு வணங்குவது தமிழர் அப்நபாடு நாகரிகம் தானே. சிறு குழந்தை பருவத்தில் காஞ்சி மகா பெரியவாள் ஆசிர்வாதம் கிடைக்க பெற்றதால் தான் எனக்கு இன்று சிறப்பான அமைதியான வாழ்வு எனக்கு. ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது வரவேற்கத்தக்கது. அவ்வாறு செய்ய மறுப்பது தான் தவறு. .

 • bal - chennai,இந்தியா

  என்ன ஒரு பண்பு..இது மாதிரி நல்ல பண்புள்ளம் நம்மை நமது கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது...இப்போதெல்லாம் யாரும் (பையன், பெண்கள்) அம்மா, அப்பா, ஆசிரியர், பெரியோர் என்று யார் வந்தால் கூட வணக்கம் கூட தெரிவிப்பதில்லை..கேட்டால் முன்னோடி எண்ணம்....நாமெல்லாம் பழமை....இதிலென்ன பிரச்னை....என்றெல்லாம் கேள்வி...

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும் சகோதரி பிறர்க்கு எடுத்துக்காட்டாக இதுபோல இன்னும் நிறைய நல்ல செய்திகள் வரணும்....

 • spr - chennai,இந்தியா

  செய்ததிலோ, சொன்னதிலோ குறையெதுவுமில்லை குறியெதிர்ப்புமில்லை பாராட்டலாம் இது போன்ற செய்திகளை வெளியிட்ட தினமலருக்கும் பாராட்டுகள் 1965 - தமிழக மாணவர்களை மொழி என்றொரு கருவியால் ஆசிரிய மாணவ உறவுகளை பாதித்த வருடம். இன்னமும் தன்னலம் பாராமல், சீரிய பணியாற்றும் ஆசிரிய பெருந்தகைகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் வணக்கம்

 • baskaranmuthusami - erode,இந்தியா

  அண்ணே சும்மா ஒரு விளம்பரம்...

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  I studied in Village school and Village teachers are even today dedicated , Government should give them more pay and not to College teachers and Professors who do strikes

 • murali - Chennai,இந்தியா

  இது போன்ற ஆசிரியை, இது போன்ற கலெக்டர் கிடைப்பது அரிது, திராவிட ஆட்ச்சியில்தான் ஆசிரியர் மதிப்பு குறைந்தது.

 • Kailash - Chennai,இந்தியா

  விளம்பர பிரியர்.. தனியார் தொலைக்காட்சிகள் முழுவதும் இவர் செய்வதைத்தான் காண்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. வேறு மாவட்ட கலெக்டர்கள் ஒன்றும் செய்யாமல் வீட்டில் தூங்கி கொண்டா இருக்கிறார்கள்?

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள். எந்த பதவியில் இருந்தாலும் நமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை வாழ்நாளில் மறக்க கூடாது. ஆட்சியரின் செயல் மிகுந்த போற்றுதலுக்குரியது.

 • A.Venkatesan - Tirunelveli,இந்தியா

  மாதா, பிதா, குரு, தெய்வம். நாம் வாழ்க்கையில் முன்னேற ஏணிப்படிகளாய் இருக்கிற ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  நிச்சயம் பாராட்டலாம் .இவர் முன்பு ஆத்தூரில் ஆசிரியர் இல்லா வகுப்பறையில் பாடம் எடுத்தார் .

 • abhinandan jain - chennai,இந்தியா

  குருவை மதிபத்தின் காரணமாகத்தான் தங்கள் உயர்ந்தபதவில் இருக்கிறீர்கள்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பாராட்டுக்கள்.

 • Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா

  இது போன்ற செய்திகள் பெரிய அளவில் பேசப்படுவதில்லை.மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டால் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களின் மதிப்பு கூடும்.

 • Natrajan Natarajan - Rasipuram,இந்தியா

  எனது இனிய நல் வாழ்த்துக்கள். மாதா, பிதா. குரு, தெய்வம்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  A very nice example to the students.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மாதா பிதா குரு தெய்வம்

 • Praveen - Chennai,இந்தியா

  munmadhiriyana collector. Vazhthukkal

 • metturaan - TEMA ,கானா

  நன்றி மறவாத குணம் ... ஆசிரியரை வணங்குதல் ... பாராட்டுக்கள் ..கலெக்டர் ரோகினி அவர்களே .உங்களின் பதவியை தாண்டிய எளிமை மற்றவர்க்கு பாடம் நீங்களும் ஆசிரியாரானீர்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நல்ல ஆசிரியர் மூலமாகத்தான் நல்ல ஆட்சியர் உருவானார் , வாழ்த்துக்கள்

 • kalyanasundaram - ottawa,கனடா

  GOD BLESS SUCH VERY SINCERE TEACHERS

 • nicolethomson - bengalooru,இந்தியா

  வாழ்த்துக்கள் சகோதரி

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  எளிமையானவர் .....

 • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

  Roginy talking true...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement