Advertisement

கடும் சரிவில் ரூபாய் மதிப்பு : 72 ஐ கடந்தது

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (செப்.,5, காலை 9.15 மணி நிலவரம்) ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து 71.38 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 71.58 ஆக இருந்தது. ஆனால் 11 மணியளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிய துவங்கியது. இதுன் விளைவாக 21 காசுகள் சரிந்து 71.79 என்ற நிலையை எட்டியது.

பின்னர் 11.20 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் சரிந்து 72.06 என்ற நிலையை எட்டியது. இதனால் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் 11.40 மணியளவில் ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்ந்து 71.75 ஆனது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருந்தால் ருபாய் மதிப்பு 100 ஆகி இருக்கும்.

 • அரசு -

  மோடிஜி, விட்ராதீங்க நம்ம எப்படியாவது டாலரின் இந்திய மதிப்ப 100 ரூபாய்க்கு கொண்டு வரணும். அதுக்கப்புறம் இந்த பெட்ரோல் இருக்கு பாருங்க, அதையும் 100 ரூபாய் கொடுங்க. அப்பதான் நாம வளர்ச்சியடைந்து இருக்குன்னு சொல்ல முடியும். நீங்க சிறப்பாக ஆட்சி நடத்துவதற்கு இந்த ஒரு குறியீடு பிரமாதமான சான்று. இந்த கிறுக்கு பிடிச்ச பசங்க இந்த விஷயத்தையே பேசிகிட்டு இருக்காங்க.. வேற ஏதாவது ஒரு டாபிக்க டிரெண்டிங்கில் விடுங்க ஜி.. அப்பத்தான் இத மறப்பாங்க. ஒருவேளை சோபியா விஷயம் அதனாலதான் நேஷனல் டிரெண்டிங்கில் போச்சோ ? செம்ம ஜி செம ஜி

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஹையா ஜாலி, ஜாலி. வெகு விரைவில் 100 ஐ தொட்டு விடுவோம். ("என்னாது, இது வளர்ச்சி இல்லையா? நான் கூட இது இமாலய வளர்ச்சியாக்கும் என்று நினைத்து விட்டேன்). இந்த மாத சம்பளத்தில் எப்படியும் "திருவோடு" வாங்கி விட வேண்டும்.

 • mohan - chennai,இந்தியா

  இதெற்கெல்லாம் மொத்த காரணம் இந்திய மக்கள்...

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வக்கிர காவிகளின் ஆட்சியில் வீழ்ச்சிக்கு மறுபெயர் தான் வறட்சி வளர்ச்சி ... வீழ்ச்சியில் வளர்ச்சி அபாரம் காவிகள் கூமுட்டைகள்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இந்த காவியாட்சியை மஸ்தான் மோடியை ஆதரிப்பவர்கள் கூமுட்டைகள்

 • Gopi - Chennai,இந்தியா

  நாம் டாலரில் சார்ந்து அதிகப்படியான அளவில் ஒரே வஸ்துவை (கச்சா எண்ணெய் ) இறக்குமதி செய்து அதனை 135 குடிமக்களும் பயன்படுத்துவதை ஆதாயமாக கொண்டு வரிவிதித்து நடத்து எந்த அரசாங்கமும் இது போன்ற அசாதாரண நேரங்களில் தீர்க்கமான எதிர்கால சிந்தனையுடன் முடிவு எடுக்க வேண்டும். ஜிம்பாப்வே, இரான் மற்றும் வெனிஸுவேளாவில் என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்த்தோம். பல லட்ச உள்நாட்டு பண மதிப்பிற்கு ஒரு டாலர் என்ற விகிதாச்சாரம் வந்ததை அறிவோம். அது அவர்கள் கச்சா என்னை ஏற்றுமதி அல்லது எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளை நம்பி இருத்தல் அல்லது முறையான அரசாங்க அமைப்பு இல்லாததினால் (ஜிம்பாப்வே) ஏற்பட்ட கொடூரம். நாம் ஆதில் விழக்கூடாது. ராணுவ கட்டமைப்போடு கீழ்வரும் செயல்களை செய்யவேண்டும் : 1 அதிக பேட்டரி அமைப்பு பொருந்திய அரசு இயக்கும் பொதுமக்கள் வாகனம் துரித கதியில் பயன்பாட்டு வரவேண்டும். அதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்க வேண்டும் 2 தனியார் வாகனங்கள் உபயோகத்தை வரன்முறை செய்யவேண்டும் 3 மெட்ரோ மற்றும் இதர அரசு பொது போக்குவரத்து வாகனங்களில் டிக்கெட் விற்பனை முறையில் தற்போது விமானங்களில் உள்ளது போல family package கொண்டு வந்து அதிக பயனியர்களை வரவழைக்க திட்டம் தீட்ட வேண்டும். அதுபோல் சீசன் டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட் எடுக்கும் நபர்களுக்கு மாதம் ஒருமுறை குலுக்கல் முறையில் பயண சலுகைகளும் அறிவிக்கவேண்டும். இதிலும் கார் வைத்திருப்போருக்கு இருமடங்கு சலுகை அறிவிக்கவேண்டும் 4 ராமர் பிள்ளை போன்றோர் கண்டுபிடிப்புக்கு ஆதரவு தரவேண்டும் இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து ஆய்வு குழுக்கள் மூலம் இதன் பயன்பாட்டை அங்கீகரிக்கவேண்டும் (எத்தில் ஆல்கஹால் அல்லது ஜெட்ரோபா கலந்து எரிபொருள் விற்பனையை கொண்டுவரவேண்டும் ) 5 அதிகப்படியான ஜெட்ரோபா (இயற்கை டீசல் ) செடிகளை வங்கிகள் முத்ரா மூலம் வேலையில்லா நிலமில்லா பட்டதாரிகளுக்கு கடன்கொடுத்து , அரசு புறம்போக்கு நிலங்களில் பயிரிட ஆவணம் செய்யவேண்டும். இதை சார்ந்த மற்ற கட்டமைப்பு வேலைவாய்ப்புகளை வரிச்சலுகை வழங்க வேண்டும். 6 . சாராயம் , மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு மட்டுமே இருக்கும் வரி சார்பு கொள்கையை படிப்படியாக மத்திய மாநில அரசுகள் கைவிட்டு வேறு வழிகளில் வரி கட்டமைப்பை உருவாக்கவேண்டும்

 • கார்த்திக் சுப்பிரமணி - Coimbatore,இந்தியா

  முட்டாள் வாசகர்கள்.. முட்டாள் மக்கள்.. முட்டாள் கமெண்ட்ஸ்... உலகம் முழுக்கவே டாலர் விலை கூடி கொண்டே செல்கிறது.. எல்லா நாட்டு கரன்சிக்கும் இது பொருந்தும். இதில் காங்கிரஸ் இருந்தாலும் இதான், BJP இருந்தாலும் இதான்.. சும்மா மோடி குறை சொல்லணும் சொல்ல கூடாது.. இப்படி ஒரு தலைவன் கிடைக்க நாம் தவம் செய்துருக்க வேண்டும். மோடி 4 நேரம் தான் தூங்குறார்.. 20 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கிறார்.. 72 ஆன என்ன 100 ஆனால் தான் என்ன? மற்ற விலைகள் கூடுகின்றனவா? பெட்ரோல் தவிர.. சும்மா எல்லாம் குறைய சொல்லாதீர்கள். முட்டாள் மக்களாக இருக்காதீர்கள்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  பணத்தை அளவுக்கு அதிகமாக அச்சடிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உழைக்காதவனிடம் பணம் கொட்டுகிறது. அரசியல் கட்சி தலைவர்களிடம் 5000 கோடி 10000 கோடி என்று பணம் புரளுகிறது.CBI ரைடுகளால் எந்த பலனும் இல்லை.

 • தனசேகர் - சென்னை ,இந்தியா

  naade sarinju thaan kidakku.. poviyo...

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  முட்டாள் ஆட்சியின் முடிவு கவிதைதான் இது

 • விமர்சகன் - kovai,இந்தியா

  காங்கிரசு ஆட்சியில் இருக்கும் போது இது போல் ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்படும்போது தங்க இறக்குமதிக்கு அதிகம் வரி விதித்து (அதிகமான டாலர் தங்கம், பெட்ரோல் க்கு செலவழிப்பதால் ) ஓரளவு சாமாளித்தது. மோடிக்கு நாளை என்ன உடை உடுக்கலாம் அடுத்த வாரம் எந்த வெளிநாடு செல்லலாம் என்பதை யோசிக்கவே நேரம் சரியா இருக்கு போல. சர்வதேச பிரச்சனை என்கிறார்கள் . இதை சொல்லவா பாஜகாவை ஆட்சியில் வைத்தார்கள். இதற்கு அதிகாரிகளே நாட்டை நிர்வாகம் செய்யலாமே ஏன் அரசியல் கட்சி. நாளை புயல் வந்தால் கூட இது விண்வெளி பிரச்னை என்று காரணம் கூறுவார்களா.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வெறுமனே ஐயோ, அய்யயோ என்று கத்துவது போல இருக்கின்றது இந்த மீடியாக்களின் செய்கை, இதற்கு மீட்பு வழி என்ன என்று யாரும் சொல்வதாகக் காணோம். தீர்வு-எல்லா அரசியல்வாதிகளின் கறுப்புப்பணம், வெளிநாட்டு வங்கி சேர்ப்பு எல்லாம் இந்தியாவிற்கு திரும்பி வந்தால் போதும்- நம் உலக வங்கி கடன் ஒழியும், மித மிஞ்சி நம்மிடம் பணம் இருக்கும். அப்போது ஒரு டாலர் ஒரு ரூபாய் ஆனாலும் ஆகலாம்??? அரசியல்வாதிகள் அப்படியே லேசில் விட்டு விடுவார்களா என்ன இதற்கு????

 • Meenu - Chennai,இந்தியா

  எப்படியும் ஆட்சி முடிவதற்குள் ஒரு டாலர் மதிப்பை நூறு ரூபாயை தொட வச்சுடுவார் நம் மோடி ஐயா. வாழ்க மோடி ஜி.

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  இதுவும் கடந்து போகும்

 • Siva - Aruvankadu,இந்தியா

  இந்திய தேசத்தில் எவன் மூன்று வேளை சாப்பிடாமல் உள்ளான்... அவனவன் இடத்தில் வாழும் அனைவரும் அறிந்ததே... பேராசையால் பணம் தேடி தன் சொந்த மண்ணில் இருந்து வெளி வந்தவன் தான் புலம்புகிறான்... என்ன வளம் இல்லை இந்த நாட்டில்.. ...... எதுக்கும் மனதில் இருக்கட்டும்.. எரிபொருள் இத்தனை உயர்ந்தும் வாகன விற்பனை என்ன என்று பாருங்கள்... வெளிநாட்டு பிச்சை காரர்கள் மற்றும் முகவரி இல்லாத அனாமத்துகளுக்கு இந்திய அரசின் செயல்பாடு தெரியுமா..

 • AR -

  இறக்குமதியைக் குறைக்காமல் அந்நியச்செலாவணி மதிப்பைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் நமக்கோ கடத்தல் தங்கமோகம். பெட்ரோல் அஞ்சு பைசாவுக்கு வேணும். ஆப்பிள் சாம்சங் செல் போன்தான் வேணும்.  வெளக்கமாறுகூட சீனத்  தயாரிப்புதான் வேணும். நாடு உருப்பட சாதாரணப் பொதுமக்களின் பொறுப்பு மிகஅதிகம்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏனுங்க இதுக்கு துருக்கி துனிசியா உஸ்பெஸ்கிஸ்தான் அசுக்குபுசுக்குஸ்தான் அப்படி இப்படி நாடுகள்தான் காரணம்ன்னு போடலியே.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  சீக்கிரம் 100 ஐ தொட்டுவிடும் ?

 • mthahir - Kuwait,குவைத்

  நாட்டில் அந்நிய முதலீட்டை அதிகரித்தால் இதுதான் நிலை. ஏதாவது ஒரு காரணத்தால் டாலர் மதிப்பில் பெறும் மாற்றம் வரும்போது, அந்நிய முதலீட்டை திரும்ப பெறுவதால் நம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. அதனால் நம்முடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

 • Power Punch - nagarkoil,இந்தியா

  ரூபாயின் மதிப்பு 1000 ம் ஆனாலும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1000 ம் ஆனாலும் அடுத்த பிரதமர் மோடிதான்... நாளைக்கு கருத்து கணிப்பு வரும் பாருங்க...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  2019 தேர்தல் வரை மக்களுக்கு நித்திய கண்டம் ..பூரண ஆயுள்...அம்புட்டுதேன்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பிஜேபிக்கு திறமைக்கும் சம்பந்தம் இல்லை .

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  ஆப்கி பார் மோடி சர்கார்.... 100 ஆக வாழ்த்துக்கள்......

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  அச்சா தின் ஹே மேக் இன் இந்தியா ஹே டிஜிட்டல் இந்தியா ஹே இது எல்லாம் புஸ்ஸா

 • yila - Nellai,இந்தியா

  ரூபாய் மதிப்பு மற்றும் பெட்ரோல் டீசல் விலைகள் "வளர்ச்சி" அடைந்து 100 ரூபாயை எட்டியதும், வெடி வெடித்து அர்த்த ராத்திரியில் கொண்டாடுவார்களோ? அவர்கள் காத்திருப்பதை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  பொய் அன்று முதல் இன்றுவரை ஆர் எஸ் எஸ் வகையாறாக்களுக்கு அது கைவந்த கலை. காந்தியை கொன்ற கோட்ஸே காந்தியை சுட்டுவிட்டு , முஸ்லீம் மீது பழிபோட தனது கையில் முஸ்லீம் பெயரை எழுதி இருந்தான் . ஆக பொய் சொல்லுவதில் , மக்களை ஏமாற்றுவதில் ,ஆர் எஸ் எஸ் , வி ஹெச் பி , ஜனசங் , பாரதிய ஜனதா , மோடி ஆகியோருக்கு கைவந்த கலை

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  NRI களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்றாலும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. இன்னமும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று. டாலர் ஏறும் விதத்தை பார்த்தால் நான்கு ஆறு வாரங்களில் ஒரு டாலருக்கு 75 ரூபாய் கிடைக்கும் போல தெரிகிறது. இன்றைய மதிப்பில் சிறிது அளவிற்கு அனுப்பலாம், பொறுத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பலாம். இவ்வளவு ஏறிய டாலர் மதிப்பு உடனைடியாக குறையாது என்பதால் எப்படியும் எழுபது ரூபாய்க்கு மேல் கிடைக்கும். ஆகையால் தாராளமாக பொறுத்திருந்து 75 வரும் வரை சில வாரங்கள் காத்திருந்து இல்லையேல் டிசம்பர் வாக்கில் அனுப்பலாம். நாங்கள் பணம் அனுப்புவதை நிறுத்தி பல மாதங்கள் ஆகின்றன. வெறும் ஆறேகால் ருபாய் மட்டுமே வட்டி என்ற விகிதத்தில் யார் வங்கிகளில் நிரந்தர வைப்பில் பணம் டெபாசிட் சேருவார்கள். இதற்கு முன்பெல்லாம் எட்டரை சதவீத வட்டி இருந்தது. இப்போது வெறும் மியூச்சுவல் பண்டில் மட்டுமே பணம் செலுத்த சொல்கிறது அரசு. அதை நிர்வகிப்பவர் எப்போது வேண்டுமானாலும் பெரிய நிறுவனங்கங்களுக்கு சகாயம் செய்யும் வகையில் நமது பணத்தை நஷ்டத்தில் முதலீடு செய்து விடலாம். நேரடியாக நிலம் வேளாண் நிலங்களில் எல்லாம் தொடர்ந்து முதலீடு செய்வதோ அல்லது வேளாண் நிலங்களை வாங்குவதோ NRI களுக்கு இயலாத நிலை. சென்செஸ் கூடி கொண்டே இருக்கிறது டாலரும் கூடுகிறது. இரண்டும் மாறி அல்லவா இருக்கவேண்டும். உள்ளோரின் யாரையும் சேமிக்க விடாமல் சேமிப்பிற்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதித்து அதுவும் அதிகபட்ச வரி விதித்து சேமிப்பை அவர்கள் சிறுமை செய்கிறார்கள். தங்கத்தில் முதலீடு தான் பிடித்த முதலீடு அதை இவர்கள் எதிர்க்கிறார்கள். தங்கம் இறக்குமதி கூடாதாம். அதனால் வரும் லாபங்களை நீண்ட கால பயன்களை சமூகமும் பெண்களும் நன்கு அறிந்திருந்தாலும் அரசு மட்டும் அதை எதிர்க்கிறது கார்பொரேட் களுக்கு லாபம் இல்லையாம் அதனால். இவர்கள் பெட்ரோல் டீசலுக்கு ரேஷன் கொண்டுவரலாம் அதை ஏன் செய்வது இல்லை. அதன் மூலம் தான் கொள்ளை கொள்ளையை கம்பனிகளுக்கு மத்திய மாநில அரசிற்கும் வருமானம் என்பதால் அதை செய்வது இல்லை. தங்கத்தால் குடும்பங்கள் சேமித்து வளம் பெரும் அதனால் கார்பொரேட் காரர்களுக்கும் அரசிற்கும் லாபம் இல்லை. அதை உணர்ந்தே இவர்கள் இறக்குமதி வரியை தீர்மானிக்கிறார்கள். அது தவறு. எரிபொருள் இறக்குமதியை பாதியாக குறைக்கலாம். அதனால் சுற்றுசூழல் பாதிப்பு குறையும் பொருளாதாரம் பெருகும். தனியாக செல்வோர் இணைந்து செல்வர் வாகனங்களில். பொது வாகங்னளை பயன் படுத்துவர். போக்குவரத்து துறை லாபமடையும். செய்வார்களா? ஒன்று மட்டும் தெரிகிறது, ஒரே ஆட்சி தொடர கூடாது. மாறி கொண்டே இருந்தால் தான் நலம்.

 • hasan - tamilnadu,இந்தியா

  திரும்பவும் பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் ஆப்ரிக்க நாடுகள் போல் ஆகிவிடும் , தயவு செய்து பி ஜே பி க்கு வாக்களிப்பவர்கள் சிந்தியுங்கள் , பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாத , வளர்ச்சி என்ற வெற்று கோஷத்துடன் ஆட்சிக்கு வந்து உள்ளதையும் புடுங்கிக்கொண்டு நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கிய பி ஜே பி யினரை மண்ணை கவ்வ வையுங்கள் ,

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  பொருளாதார மேதைகள் டாக்டர் மோடி & jaitley வாழ்க. இதோ பார் உச்ச கட்ட வளர்ச்சி பெட்ரோலிலும், ரூபாய் மதிப்பீட்டிலும். வளர்ச்சி வளர்ச்சி டிஜிட்டல் இந்தியா ஹை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த புள்ளிவிவரங்கள் பொய் என்று தோன்றுகிறது... நமது ஆளும் கட்சி பொருளாதாரம் மிகவும் வளர்ந்து விட்டதாக சொல்லுகிறதே...

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  இந்திய ரூபாய் மதிப்பு பழைய பேப்பர் விலைக்குப் போகும் அளவுக்கு தினம் தினம் மதிப்பு கூடிக்கொண்டிருக்கிறது. இனி ஒரு கிலோ கத்தரிக்காய்க்கு ஒரு கிலோ ரூபாய் நோட்டு கொடுத்தாக வேண்டும் என்கிற நிலைமை விரைவில் வரும்.இனியும் மோடி பதவியில் ஒட்டிக்கொண்டிருக்காமல் தானாக ராஜினாமா செய்துவிட்டு இறங்குவதே உத்தமம்

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  இந்தியா உச்சக்கட்ட வேகமாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. பெட்ரோல் 100 ஐ நோக்கியும், காஸ் 1000 ஐ நோக்கியும், $ 100 ஐ நோக்கியும், ஆட்சி 5 ஆண்டை நோக்கியும் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தொடரட்டும் வெற்றி. ஆண்டி இந்தியன் புலம்பல்களை மதிக்க வேண்டாம்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  மத்திய அரசாங்கம் பணத்தை மக்களிடம் இருந்து புடுங்குறதுக்குத்தான் லாயக்கு .கேட்டால் ரகுராம் மேல் பழிபோடுவது ஈரான் துருக்கி மேல் பழி போடுவது. பெட்ரோல் டீசல் உள்ள வரி எல்லாம் எங்கே போகிறது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஒரு புல்லட் ட்ரெயின் இந்தியாவில் தயாரிக்க தெரியாமல் ஜப்பான் இடம் கையேந்துகிறோம். என்னமோ கெட்டதில் நல்லது நடக்கிறமாதிரி வெளி நாட்டில் வேலை செய்பவர்களுக்கு பணம் வீட்டுக்கு அனுப்பும் பொழுது லாபம் தான் .

 • ஆப்பு -

  மார்க்கெட்டில் எல்லோரும் ரூவாய டாலரா மாத்திக்கிட்டிருக்காங்க....ஒரு நாளைக்கு 3000 கோடி அச்சடிச்சு வெளியேவுட்டா யாரு மதிப்பாங்க?

 • Christopher -

  உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது, திரும்பவும் பாஜக ஆட்சி அமைத்தால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement