Advertisement

நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிமுதல்?

சென்னை:'நடிக்க வாங்கிய முன் பணத்துக்கு, நடிகர் சிம்பு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால், கார், மொபைல் போன் மற்றும் வீட்டு பொருட்களை முடக்கி வைக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில், 'பேஷன் மூவி மேக்கர்ஸ்' தாக்கல் செய்த மனு:நடிகர் சிம்பு நடிப்பில், அரசன் என்ற பெயரில், படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சிம்புவுக்கு, 1 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முன் பணமாக, ௫௦ லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஆனால், ஒப்பந்தப்படி, சிம்பு செயல்படவில்லை. எனவே, முன் பண தொகையை, வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி, சிம்புக்கு உத்தரவிடவேண்டும். விசாரணை முடியும் வரை, சிம்புவின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி கோவிந்தராஜ் முன், விசாரணைக்கு வந்தது.சிம்பு தரப்பில், 'உரிய நேரத்தில் படப்படிப்பு துவங்கப்படவில்லை. இதனால், முன் பணத்தை விட்டு கொடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.

மனுவை விசாரித்த, நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:வாங்கிய முன் பணம், 50 லட்சம் ரூபாய் மற்றும் வட்டியாக, 35.50லட்சம் ரூபாய் என, மொத்தம், 85.50லட்சம் ரூபாய்க்கு, நான்கு வாரங்களில், சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இல்லையென்றால், அவரது வீட்டு பொருட்களான, பிரிஜ், சலவை இயந்திரம், கட்டில், சோபா, குளிர்சாதன பெட்டி, 'டிவி' உள்ளிட்டவற்றை முடக்க நேரிடும். மேலும், அவரது கார், மொபைல் போனும் முடக்கி வைக்கப்படும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement