Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

புவனேஸ்வர்: அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை கூடி வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அவர் கூறுகையில், அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக, சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ரூபாய் நோட்டு வீழ்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (48)

 • Darmavan - Chennai,இந்தியா

  விவரம் அளிக்காமல் ஏறுகிறது/ இறங்குகிறது என்றால் நம்ப முடியவில்லை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.....நீங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்த நாளில் இருந்துதான் தினம் தினம் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.. மக்கள் கட்டாயம் உங்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்...சம்ஜெயீ

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது..it is now only.

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அமைச்சர் கூறியுள்ளது போல Trump ஆட்சியில் அமர்ந்தது முதல் போட்டி நாடுகளை பொருளதார ரீதியாக ஒடுக்கும் முயற்சியில் USA ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக பல நாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துருக்கி அர்ஜென்டினா போன்ற நாடுகள் தடுமாறுகிறது ஆனால் இந்தியா சீனா போன்ற நாடுகள் சமாளித்து வருகிறது விரைவில் வெற்றி கிடைக்கும்

 • VOICE - CHENNAI,இந்தியா

  Reliance போன்று தனியார் எண்ணெய் நிறுவனம் வருமானம் பார்ப்பதற்கு எண்ணெய் விலை குறைவாக இருந்த சமயத்தில் அநியாய விலைக்கு மக்களுக்கு விற்றது மற்றும் காற்றாடிக் கொண்டிருந்த ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையத்தில் தற்போதிய மத்திய அரசு ஆட்சியில் தான் அங்கு பலர் பெட்ரோல் போடுவதை காணமுடிகிறது. முழுக்க முழுக்க மத்திய அரசை ஆளுவது அரசு இல்லை . Reserve வங்கி தலைமை பொறுப்பு உட்பட கார்பொரேட் கையில் கொடுத்துவிட்டு வருடம் முழுக்க சுற்றுலா அனுப்பி வைக்க படுவதாக தெரிகிறது கார்பொரேட் கொள்ளையர்களால். எரிபொருள் விலை குறைவாக இருந்த காலத்தில் ஞாயமா சிறிதளவு விலை ஏற்றாமல் அநியாயவிலை ஏற்றி கொள்ளையடித்துவிட்டு இப்பொழுது எரிபொருள் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும் நிலையில் அமெரிக்கா குறை சொல்லிக்கொண்டு குயோ முயோ என்று கத்துவதால் என்ன பயன் ? இத விட கொடுமை ஒருவர் கேட்ட RTI கேள்விக்கு கொடுத்த பதில் இந்திய லிட்டர் 36 ரூபாய்க்கு சில நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்கிறது. அப்படி என்றல் இவர்கள் வாங்கும் அடக்கவில்லை விட எவ்வளவு அதிகமா மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மத்திய அரசன் செயல்பாடு சில குறிப்பிட்ட தனியார் கார்பொரேட் கம்பெனியின் கைகளில் நாட்டை கொடுத்துவிட்டார்கள் என்று என்னும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பொருளாதார வீழ்ச்சி எல்லாத்துக்கும் காரணம் காங்கிரஸ் ராகுல் நேரு இந்திரா என்று பேசி இப்போ அமெரிக்கா மேலைய குண்டு போட்டாச்சு . அடுத்து ஆபிரகாம் லிஙகன் எலிசபெத் ராணி இழுத்து விட்டு காலத்தை ஓட்டிவிடலாம் .

 • jagan - Chennai,இந்தியா

  "அமெரிக்காவின் தவறான கொள்கை காரணமாக, சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது" - ஹா ஹா ஹா ..சிரிப்பு மந்திரி

 • விஜய்,மலேசியா -

  சரி அப்ப நீங்க எப்படி வெளிநாட்டிற்கு 34 ருபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்கிறீர்கள்?.. 🤔🤔🤔

 • NaushadBabjohn -

  நம்மிடமிருந்து பெட்ரோல் வாங்கி விற்க்கும் நேபாளத்திற்க்கு அமெரிக்க பொருளாதாரத்தால் பிரச்சனை இல்லையா அங்கு எப்படி முப்பத்தாறு ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.இங்கு கார்பரேட்களுக்கு மக்களிடமிருந்து பிடுங்கி தரப்படுகிறது.

 • a.s.jayachandran - chidambaram,இந்தியா

  மற்ற நாடுகளில் இல்லாத விலை இந்தியாவில்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு கோடிப் பேருக்கு இலவச சமையல் வியு தந்த பீஜேபீ மீது தப்பில்லை. த.நாட்டில் தான் இலவசம் தப்பு.அடப் போங்க சார்..சொந்த மாநிலம் சொந்த மொழி சொந்த இனத்தையே அவமான ப்படுத்திக்கறதுல என்ன கிடைக்கிறதோ.

 • rajan. - kerala,இந்தியா

  க்ளோபலைசேஷன் உலக பொருளாதாரமயமாக்கல் எனும் போது டாலர் பரிவர்த்தனையில் அமெரிக்காவின் ஆர்ம்ஸ் ட்விஸ்டிங் என்பது எல்லா நாட்டையும் சிக்கலுக்குள்ளாகும் என்பது தவிர்க்க முடியாது குறிப்பாக மக்கள் ஜனத்தொகை கூடிய இந்திய சீனா அதிக பாதிப்புக்குள்ளாகும். நமது பொருளாதாரம் சார்ந்த பயணம் இந்த இக்கட்டையும் தாண்டி வரவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. இது ஒரு உலக பொருளாதார சைக்ளோன் என்பது உண்மையே. மக்களும் சமுதாயமும் ஒருங்கிணைந்து இந்த சவாலை எதிர்நோக்கியே ஆகவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். இங்கு தீர்வு என்பது நம் கையில் மட்டும் இல்லை.

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  நீங்க வீட்டுக்கு போனாதான் விலை குறையும்.

 • Viswanathan - karaikudi,இந்தியா

  இந்த பாஜக இன்னொரு திமுக . இவர்களை பேச விட்டு கேட்டால் புள்ளி விவரத்தோடு நன்றாக கதை சொல்வார்கள் . இதில் வேடிக்கை என்ன என்றால் வரும் தேர்தல் , அதன் தொடர்ச்சியான தேர்தல்களில் இவர்களை தேர்ந்தெடுத்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அவர்கள் மீண்டு விடுவர் .

 • ravisankar K - chennai,இந்தியா

  ரூபாயின் மதிப்பு இந்த ஆட்சியில் மட்டுமல்ல , எப்போதுமே வீழ்ச்சியடைந்து தான் வருகிறது . எந்த ஆட்சியில் அதிகம் வீழ்ந்தது என்று வேண்டுமானால் போட்டி வைக்கலாம் . முதலில் மக்களுக்கு அறிவு வந்து உழைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் . அப்போதுதான் ரூபாய் மதிப்பு கூடும் . தமிழ் நாட்டில் உள்ளது போல டாஸ்மாக் மற்றும் இலவசங்களுக்கு விலை போனால் ரூபாய்க்கு என்றும் வீழ்ச்சிதான் .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  அதனால் மோடியை அமெரிக்காவுக்கு அதிபராக்கிவிடலாம் . எல்லாம் சரியாகிடும் . 143 % வரிபோட்டால் பெட்ரோல் விலை எகிறதான் செய்யும்

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் இதே பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசின் தோல்வி என்று மோடியும், காஸ் சிலிண்டர் உடன் அமர்ந்து போராட்டத்தை நடத்திய ஜெட்லி இப்போது தங்கள் ஆட்சியில் நடந்தவுடன் முட்டு கொடுக்கிறார்கள். தனக்கு வந்தா மட்டும் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.

 • chails ahamad - doha,கத்தார்

  ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம் என்பதை நினைவூட்டுவதை போல் , நாடாள தெரியதவர்கள் கையிலே ஆட்சி அதிகாரம் , அறிவுக்கு எட்டாதது உலக பொருளாதாரம் , இவர்களுக்கு எட்டியது எல்லாம் மக்களை பிரித்தாளும் தந்திரங்களாம் , அதுவும் மதவாத உணர்வுகளாம் , பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கூறும் காரணம் அமெரிக்காவின் தவறான கொள்கையாம் என்பதை ஒப்பு கொள்ளும் வேளையில் , உலகம் சுற்றும் நாயகர் ஆட்சியின் தலைவர் திரு . மோடி அவர்களின் தவறான சிந்தனைகளை செயல்படுத்த விழைந்ததின் பாதிப்புகள் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பில் பரிதவித்தது ஏழைகள் மட்டுமல்ல , அவர்களில் பலரின் உயிர் இழப்புகளும் என்பதை ஒப்பு கொண்டே ஆக வேண்டும் , பசியால் துடித்த ஏழையின் குழந்தைக்கு இட்லி வாங்க ஓடினாள் தாய் , வாங்கியதற்கு உரிய தொகையை செலுத்த முற்பட்டால் ஜிஎஸ்டி வரி உண்டு என கையில் இருந்த அற்பத்தையும் பிடிங்கினார்களாம் , அதுமட்டுமா இன்னும் இருக்கின்றதாம் மக்கள் படும் வேதனைகளை எழுத்தில் எழுதி மாளாதாம் , ஒன்று மட்டும் நிச்சியமாம் இன்றைய ஆட்சியாளர்களால் , மக்கள் படும் வேதனைகள் வரிசை கட்டி நிற்பதால் இருப்பதோ சில மாதங்களே, வைப்போம் ஆப்பு என தேர்தலை எதிர்பார்த்து காத்து உள்ளார்களாம் , பா ஜ வுக்கும் பாடை காட்டி காத்து இருப்பதுதான் உண்மையாம் .

 • விஜய் ஆனந்த் - சென்னை

  இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு, இது வள்ளுவர் வாக்கு. அரசு என்பது மக்களை அரணாக காக்க வேண்டும், அதை விடுத்து லாப நோக்கத்தில் இயங்கும் நிறுவனம் போல் பதிலளிக்க கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளின் ஏற்படும் மாற்றங்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் வகையில் இன்றளவும் உள்ளது வேதனை.

 • J.Isaac - bangalore,இந்தியா

  அடுத்தவங்களை குறை சொல்லியே பழகி போச்சு . டிரம்ப் மோசமானவருனு தெரிஞ்ச பிறகு எதற்கு அமெரிக்காவிற்கு படையெடுக்கணும்.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  அப்போ ..எல்லாமே அமெரிக்கா கொள்கையினால் தான் என்றால் நீங்க என்னதான் செய்கிறீர்கள்..வெத்து வேட்டுத்தானா

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அமெரிக்காவின் தவறான கொள்கையா? அவர்கள் அவ்வளவு அறிவில்லாதவர்களா? நமது கொள்கைகள் எல்லாம் என்ன ஆச்சு? சரியான கொள்கைகளா?

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  கண்டிப்பா இதுல பாதி உண்மை பாதி பொய் (இது தானே fraud அரசியல்வாதிகள்)

 • Kounder Bell - Kodambakkam

  என்னடா சொல்றிங்க ஒருபக்கம் பொருளாதாரம் வளர்ச்சினு கூவுறிங்க இன்னொரு பக்கம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது சொல்றிங்க ஒன்னுமே புரியலையே

 • abdul rajak - trichy,இந்தியா

  detail எப்படி இருக்கு பாரு ? நூறு பொய்யான காரணம் கண்டுபிடிச்சி கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்கலாமே ? உண்மை ஒரே காரணம் வட்டி .

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  இல்லாட்டி - இதுக்கு முன்னால மட்டும் பெட்ரோலை கம்மியா வித்த மாதிரி சொல்றீங்க. வாஜ்பாய்க்கு அப்புறம் வந்தவங்க எல்லாரும் பெட்ரோல் விலைல தான் கை வைக்கிறாங்க.

 • MurugeshsivanBjpOddanchatram -

  வரும் தேர்தலில் பிஜேபி தோற்றால் அது பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் காரணமாக இருக்கும்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  MMS. பானா சீயன்னா ஃ பார்முலாதான் பெஸ்ட். கடன்வாங்கி அதில் மானியவிலைக்கு பெட்ரோல் கொடுங்கள். .மக்களை  சந்தோஷப்படுத்துங்கள். அந்த கடனையும் வட்டியையும் தாம்தான் அடைக்கவேண்டியிருக்கும் என்பது ஆட்டுமூளைகளுக்குக் கிடையாது.

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  டிரம்ப் செய்வதெற்கெல்லாம் தலையாட்டி செய்யும் மோடியின் தவறான கொள்கையால்தான் பெட்ரோல் விலை இருக்கிறது,டாலர் அதிகம் கொடுத்து எண்ணெய் வாங்குவதால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு விழுகிறது. ஈரான் நமது ரூபாய் மதிப்பிலேயே பெற்றுக்கொள்வதாகவும் தன்னிடம் பெட்ரோல் வாங்கக்கூறியும் சீனா, ரஷ்யா போல் முதுகெலும்பில்லாமல் டிரம்ப் கூறிய நாடுகளிடம் மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்குவதால்தான் இந்நிலை. ஈரானில் வாங்கினால் கையிருப்பு டாலர் வீணாவதில்லை.கொள்முதல் விலையும் பீப்பாய்க்கு மிக மலிவு.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  தோபார்ரா... இவ்ளோ பொலம்பனதுனால துறை சார்ந்த மேட்டர்ல அந்த துறை அமிச்சரே விளக்கம் குடுத்திருக்காருன்னு சந்தோஷமாக படித்தால் வழக்கம் போல அடுத்தவனை குத்தம் சொலராப்ல.... இவருக்கிட்டே இன்னிக்கு வயிறு உப்புசமா இருக்கேன்னு என்ன பண்ணனும்னு யோசனை கேட்கலாமான்னு பார்த்தால்.... நேத்து டிரம்ப் பர்கர் சாப்பிடதாலன்னு சொல்லிடுவாரோன்னு பயமாயிருக்கு... இவரை தெறமையான அமிச்சர்ன்னு நம்ம தல பகோடாஸ் சர்டிபிகேட் வேற குடுத்தாய்ங்க.... என்ன பண்ண... எல்லாம் ஒரே டிசைன்...

 • Ram Prakash - Coimbatore,இந்தியா

  ஆட தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்கிறான்

 • krishnamurthy -

  BJP government cheated middle class families...nothing they did for middle class..they will be punished in coming election.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  நீங்க சொல்லுற காரணங்கள் சரியாக இருந்தாலும் நாங்க ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு சிந்திக்கும் திறன் அறவே இல்லை. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் மோடி ஒயிக, காவி ஒயிக, ஆர் எஸ் எஸ் ஒயிக ,ஐ எஸ் ஐ எஸ் வால்க.

 • mindum vasantham - madurai,இந்தியா

  ithu unmai தான் விலைய ஏற்றவில்லை என்றால் ஒரு நாளைக்கு 1000 கோடி வீதம் நாட்டுக்கு நஷ்டம் மற்றும் நாடு திவாலாகி விடும் , இந்தியா ரூபாயின் மதிப்பு மட்டும் இல்லை சீனா ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது , டிரம்ப் எதோ காட்டு தனமாக செய்து வருகிறான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement