Advertisement

தி.மு.க.,வுக்கு சாதகமில்லை!

தி.மு.க.,வின் செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக பதவியேற்றிருப்பது வரவேற்க தக்கது. ஏனெனில், பல கட்சிகளை, அதுவும் ஜெயிக்கும் கட்சிகளின் தலைவர் ஒருவர், நீண்ட நாள் கட்சியைக் காத்துவிட்டு, மறைந்ததும் ஏற்படும் இடைவெளி மிகப்பெரியது.மாநிலங்களில், 10 சீட்டுகளுக்கு குறைவாக, எம்.எல்.ஏ.,க்களை கொண்ட கட்சித் தலைவர்கள் பலர், அவ்வப்போது தோன்றி, கால சூழ்நிலைகளில் சிறுத்துப் போவது வழக்கம். அகில இந்திய அளவில், தேவகவுடா கட்சி என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், கன்ஷிராம் தலைமையில் அடைந்த பெருமையை, இனி அடைய முடியுமா என்பது சந்தேகம்.இன்று, தி.மு,க., தலைவர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர். அவர், கடந்த, 50 ஆண்டுகளாக, தன் தந்தையின் அரசியலை நேரடியாக பார்த்தவர்; சிறிது காலம் துணை முதல்வராக இருந்தவர். ஆனாலும், மற்ற மாநில அல்லது தேசிய தலைவர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.அவர், 50 வயதைக் கடந்த போதும், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக, அப்போது இருப்பதில் ஆர்வம் காட்டியது உண்டு. மேலும், இன்று அவர், தன் தலைமை உரையில், 'என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் உடன் பிறப்புகளே...' என்று அழைத்தது, அவரது கட்சிப் பற்றுக்கு ஒரு சான்று.இது, மதுரைத் தலைவர் அழகிரிக்கு வராத குணம் என்றே கூறலாம். அதைவிட ஒருபடி மேலாக, 'அவர் போல பேசத் தெரியாது; அவர் போல மொழியை ஆளத் தெரியாது; எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவைக் கொண்டவனாக நிற்கிறேன்' என்ற, ஸ்டாலினின் கருத்து மூலம், கருணாநிதியின் சிறப்பை, தி.மு.க., தொண்டனுக்கு உணர்த்தியுள்ளார்.தமிழகத்தில் இனி தேர்தல், எந்த நேரத்திலும் வரலாம் என்ற அவரது கணிப்பும், அதற்காக அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சித் தொண்டர்களை சந்தித்ததும், ஒருவிதத்தில் கட்சியின் பலத்தை தக்க வைத்த முயற்சியாகும். அத்துடன், அவர் தான் இது காறும் கட்சியில் வகித்த பொருளாளர் பதவியை, துரைமுருகனுக்கு அளித்த பாங்கு சிறப்பானது. கட்சியில் பேராசிரியர் என்று அழைக்கப்படும் அன்பழகன், மிகவும் மூத்தவர். அவர், இவரது கன்னத்தை தடவி ஆசி வழங்கியது, கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியம் இவருக்கு வரவேண்டும் என்ற ஆசை என்று நினைத்தால், தவறில்லை.அதை விட, 'சொற்பொழிவாளர்' என்ற பெருமையை விரும்பும் துரைமுருகன், 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்' என்ற தமிழ்ப் பாடலை நினைவாக்கி, நகைச்சுவையாக பேசியது, முக்கியத்துவம் வாய்ந்தது. தன் பொறுப்பில் அதிக நிதி சேர்க்கும் ஆர்வத்துடன் தயாநிதி மாறனிடம், அவர் அதிகமாக பணம் பண்ணிய திறமையை, சாமர்த்திய வார்த்தைகளில் கூறி, 'ஸ்டாலினிடம் தந்ததைப் போல பலமடங்கு என்னிடம் தாருங்கள்' என்ற நகைச்சுவை, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் நிச்சயமாக பதிந்து இருக்கும்.அதைவிட, கட்சி உறுப்பினர்கள் பலர் பணவசதி இல்லை என்று கூறியது கவனிக்கத் தக்கது.சில அடிகள் பின்னுக்கு வைத்தாலும், அது முன்னேற்றத்தின் அடையாளம் என்ற ஸ்டாலின் தலைமைப் பேச்சு, 'மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்' என்று, அவர் கூறினாலும், 'சுயமரியாதை, சமத்துவ கொள்கைகளை பின்பற்றுவோம்' என்கிறார். இது, மதங்களைத் தாண்டி, மாநிலங்களைத் தாண்டி வாழும் தமிழ் இளைஞர்களை எந்த அளவு கவரும் என்பதை, வரும்காலம் தான் முடிவு செய்யும்.நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி, அக்கட்சிக்கு, 22 மாநில ஆட்சிகளை வைத்திருப்பவர். காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி என்பதை பிரகடனப்படுத்தி இருந்தால் கூட தவறில்லை. காங்கிரஸ் கட்சிக்கும், சமீபத்தில் தான் தலைவரானார் ராகுல்.இன்றைய சூழ்நிலையில், ஜெயலலிதா இல்லாத தமிழகம் என்பதால், அது, தி.மு.க.,விற்கு சாதகம் அல்ல. பெண்கள் அதிகமாக கோவில் செல்பவர்கள், அவர்களுக்கு, 50 ஆண்டுகளாக நடந்த சாமி சிலை திருட்டுகள், அரசு அலுவலகங்களில், கோலோச்சும் லஞ்சம் ஏன் என்று ஆலோசனை செய்ய, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் பயன் தந்திருக்கின்றன.மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் செயல்படும் காலம் வந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, தலைமை உரையில், மோடியை விமர்சித்தது சரியா என்பதை, ஸ்டாலின், 'பெரியப்பா'வான அன்பழகன் ஆதரிக்கிறாரா என்பது தெரியாது. இவரை விட பல மூத்த தலைவர்கள், தேர்தல் நேரத்தில் அவர்களது ஆதரவாளர்களுக்கு, 'சீட்' கேட்டால், அதை முடிவு செய்வது சாதாரணமல்ல.ஆனால், துணிவுடன் கட்சித் தலைமையை சந்திக்க தயாரான ஸ்டாலின், 'வாரிசு அரசியலுக்கு முன்னோடி' என்று ராகுல் முன்பு கூறியதை மறந்திருக்க வாய்ப்பில்லை என்பதும், தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    அப்பா property யை தன பெயருக்கு ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் இக்கு செல்லாமலேயே மாற்றிக்கொண்டாச்சு .இருந்தாலும் குடும்ப சொத்து பிரிவினையில் மூத்த சகோதரன் கையெழுத்திட வில்லை இது செல்லுமா?-விட்னஸ்? பாவம் திமுக தொண்டர்களே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement