Advertisement

சென்னை மெட்ரோ ரயில் புகைப்பட கண்காட்சி


உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையமும்,போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பும் இணைந்து சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சியினை நடத்திவருகின்றனர்.

இது குறித்து அமைப்பின் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில் வருடாவருடம் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பெரிய அளவில் கண்காட்சி நடத்துவது வழக்கம்.

இந்த வருடம் அதற்கான திட்டமிடல் நடந்து கொண்டு இருக்கையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எங்களுடன் இணைந்து கண்காட்சியினை நடத்த விரும்பினர்.

அவர்களது அழைப்பினை ஏற்றோம் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவது,ரயில்கள் இயங்குவது,ரயிலின் வசதிகள் போன்ற பல விஷயங்களை நாங்கள் மட்டுமே படம் எடுக்க அனுமதிக்கப்பட்டோம்.

38 புகைப்படக்கலைஞர்கள் மெட்ரோ ரயிலின் சேவைகளை இரவு பகலாக படம் எடுத்தோம் இந்த இடங்களும் சரி படங்களும் சரி இதுவரை பொதுமக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை இனியும் பார்க்க வாய்ப்பில்லை.
எங்களது படங்களை பார்ப்பதன் மூலமாகத்தான் மெட்ரோ ரயிலின் சேவை மக்களுக்கு புரியும்.

பூமிக்கு கிழே பல அடி ஆழத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மூச்சுக்காற்றுக்கு என்ன செய்கிறார்கள்,ராட்சத மண் தோண்டும் எந்திரம் எப்படி செயல்படுகிறது என்பது போன்ற பல விஷயங்கள் எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது என்றார்.

தேர்வு செய்யப்பட்ட நுாறு படங்கள் சென்ன வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.கண்காட்சி வருகின்ற 29ந்தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சிக்கான நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.அனுமதி இலவசம்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement