Advertisement

35 கிராம திரவுபதி அம்மன் பக்தர்கள் உலக நன்மை வேண்டி கிரிவலம்

திருவண்ணாமலை: உலக நன்மை வேண்டி, 35 கிராம திரவுபதி அம்மன் பக்தர்கள், கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மழை வேண்டி, உலக நன்மை வேண்டி, அக்னி வசந்த விழா கொண்டாடப்படுகிறது. இதில், பக்தர்கள் விரதமிருந்து, தீ மிதி விழா நடத்தி வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில், போளூர், கேட்டரம்பாளையம், பாச்சல் உள்ளிட்ட, 35 கிராமங்களை சேர்ந்த திரவுபதி அம்மன் கோவில் பக்தர்கள் உலக நன்மை, மழை வேண்டி கிரிவலம் சென்றனர். அப்போது மேளதாளம் முழங்க, கையில் திரிசூலம் ஏந்தியவாறு நுாற்றுக்கணக்கானோர் சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement