Advertisement

கலைவாணர் ஒரு பொக்கிஷம்

பல நாள் பசியோடு ஒரு பையன் தெருவில் வந்தான் அவன் கண்ணில் ஒரு வீட்டின் கதவில் பெரிய பித்தளை பூட்டு ஒன்று சாவியோடு தொங்கிக்கொண்டு இருந்தது.

அதை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது விற்றால் ஒரு இரண்டு ரூபாய் கிடைக்குமே அதை வைத்து சாப்பிட்டு பசியாறிக் கொள்ளாலாமே என நினைத்தான், பசி கண்ணை மறைக்க முதல் முறையாக பூட்டை திருடினான்.


@1br@@திருடிவிட்டு திரும்பியவன் அந்த வழியாக வந்த கலைவாணர் என்.எஸ்.கே.,கண்ணில் பட்டுவிட்டான், ஒட முற்பட்டான் கலைவாணர் எட்டிப்பிடித்துவிட்டார்.பசி பொறுக்காமல் தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும் மன்னிக்கும்படியாகவும் கெஞ்சினான்.சரி என் கூடவா என்று சிறுவனை கையோடு அழைத்துக் கொண்டு பூட்டுக்கு சொந்தக்காரரான வீட்டின் உரிமையாளரை அழைத்தார். அவரும் வெளியில் வந்தார்என்ன ஒய்...இது உம்ம வீட்டு பூட்டு சாவிதானே? என சிறுவனிடம் இருந்த பெற்ற பூட்டு சாவியை காட்டினார்


ஐயோ ஆமாம் என்னுடையதுதான் விலை உயர்ந்தது என்று பூட்டை வாங்கி வைத்துக்கொண்டார்.

நீர் பாட்டுக்கு கதவில் பூட்டோடு சாவியை தொங்கவிட்டுவிட்டீர் அதை ஒரு திருடன் எடுத்துக்கொண்டு ஒடினான் இந்தச் சிறுவன்தான் அந்த திருடனை விரட்டிப்பிடித்து உம்ம பூட்டையும் சாவியையும் மீட்டு வந்தான் என்று சொல்லி அப்படியே கதையை திருப்பினார்.காட்டிக்கொடுக்கப் போகிறார் செம அடிவாங்கப் போகிறோம் என்று நினைத்த பையன் கண்களில் கரகரவென்று கண்ணீர்,கையெடுத்து கலைவாணரை கும்பிட்டான்.வீட்டு ஒனர் பையனை அரவணைத்து நன்றி தம்பி என்றார்.அப்போது கலைவாணர் நன்றி சோறு போடாது பசி போக்காது முதல்ல பையன் கையில் ஒரு இரண்டு ரூபாய் கொடும் என்றார்.அவரும் கொடுத்தார் பையன் நினைத்ததும் நடந்தது ஆனால் சந்தோஷமாக..இப்படி ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தில் எத்தனையோ நல்லதை நடத்திக்காட்டியவர்தான் கலைவாணர், மனம் நிறைய நல்லதை மட்டுமே நினைத்தவர், சம்பாதிப்பதே பிறருக்கு உதவுவதற்கு என்று வாழ்ந்தவர் என்று தமிழ் நதி ஆதவன் பேசியபோது அரங்கில் ஒரே கைதட்டல்.சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் மாதந்திர கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நதி தொலைக்காட்சியின் இயக்குனர் ஆதவன் அழைக்கப்பட்டு இருந்தார்.அவர்தான் கலைவாணர் பற்றியும் வாரியார் பற்றியும் நாகேஷ் பற்றியும் காமெடி வீரப்பன் பற்றியும் பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டுக் காட்டினார்.வாழைப்பழ காமெடி எழுதிய காமெடி வீரப்பன் நிஜ வாழ்க்கை சோகமானது கொடுமையானது வறுமையானது ஆனால் அதில் இருந்துதான் அவர் தனக்கான நகைச்சுவையை எடுத்துக் கொண்டார்.நான் கூட காமெடி வீரப்பனிடம் பேசுகையில் செந்தில் ஏன் அந்த இன்னோரு வாழைப்பழம் பற்றி சொல்லவே இல்லை ? என்று கேட்டேன் அதற்கு அவர் மாற்றி மாற்றி அந்த இன்னோரு வாழைப்பழம் எங்கே என்று கேட்டார்களே தவிர கடையில் இருந்து வாங்கிய இரண்டு வாழைப்பழமும் என்னாச்சு என்று யாருகே கேட்கவில்லை கேட்டு இருந்தால் அவர் தக்க பதில் சொல்லியிருப்பார் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.நகைச்சுவை என்பது பிறர் மனதை புண்படுத்துவதாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது பண்படுத்துவதாகத்தான் இருக்கவேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் பேசியவர்களில் அடுத்து பலரது மனதையும் கவர்ந்தவர் அம்பத்துார் நாகேஷ் என்றழைக்கபடும் எண்பத்தாறு வயது பெரியவர் நாராயணன்.பத்திரிககைளில் வரும் நாள் பலனையும் பல்லிவிழும் பலனையும் கொஞ்சமும் நம்பாதீர்கள், தலையில் பல்லி விழுந்தால் மரணம்னு சொல்வாங்க என் தலையில ஒரு முறை பல்லி விழுந்த போது அப்பாடா போதும்டா இந்த வாழ்க்கை போய்ச் சேரலாம்னு நினைச்சேன், சொந்த பந்தத்திற்கெல்லாம் கூட சொல்லிவச்சேன், ஆனா மேலே போக விசா கிடைக்கலை அதற்கப்புறம் நாலைஞ்சு முறை பல்லி தலையில விழுந்துச்சு, நானே சில சமயம் பல்லிய புடிச்சு தலையில விட்டுக்கிட்டேன் ம்ஹூம் எமதர்மராஜன் மனசு வைக்கிறமாதிரியே இல்லை என்று பலன் தராத பலன்களைப்பற்றி நகைச்சுவையாக பேசினார்.நல்லதோர் இந்த நகைச்சுவை விழாவினை நடத்தியவர் திநகர் ஹூயூமர் கிளப் தலைவர் சேகர் அவரது அடுத்த நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ள அவரது எண்ணை தொடர்பு கொள்ளவும் எண்:9790775571


-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement