Advertisement

திருமலையில் வித்தியாசமான கும்பாபிேஷகம்

வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய பிரம்மோற்சவ விழாவினையே மிகவும் வண்ண மயமாக பிரம்மாண்டமாக நடத்தக்கூடிய திருமலைக் கோயில் நிர்வாகம் பனிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய கும்பாபிேஷகத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்துவார்கள் என எண்ணிச் சென்றால் அங்கே விஷயம் நேர்மாறாக இருந்தது.

மிக மிக எளிமையாக கும்பாபிேஷகம் நடைபெற்றது.கும்பாபிேஷக வேலைகள் நடைபெறுவதால் கோவிலுக்குள் எந்நேரமும் பக்தர்களை அனுமதிக்க முடியாது. மிகக்குறைவாக அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மட்டுமே அனுப்பமுடியும் என்று ஒரு மாதமாக அறிவிப்பு செய்துவிட்டதால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

வரவேற்பு தோரணங்கள் வண்ண விளக்குகள் அவ்வளவு ஏன் கும்பாபிேஷக பத்திரிகை கூட அடிக்கவில்லை.மொத்தமே எட்டு நிமிட நேரம்தான், மூலவான சீனிவாசப்பெருமாள் குடிகொண்டிருக்கும் தங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி ஆரத்திகாட்டியதோடு கும்பாபிேஷகம் நிறைவுற்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement