Advertisement

தனியார் பள்ளியில் பேட்மின்டன் அகாடமி

திருவள்ளூர்:திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் பள்ளியின் பேட்மின்டன் அகாடமி திறப்பு விழா நேற்று நடந்தது.

திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் பள்ளியின், பேட்மின்டன் அகாடமியினை, மூத்த வழக்கறிஞரும்,
இறகு பந்து விளை யாட்டு வீரருமான சீனிவாசன் திறந்து வைத்தார்.பள்ளியின் கவுரவ தாளாளர், என்.சி.ஸ்ரீதரன் வரவேற்று பேசியதாவது:அகாடமியில் மாணவர்களும், பெற்றோரும் பயிற்சி பெரும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய விளையாட்டு மையத்தால், அங்கீாரம் பெற்ற பயிற்சியாளர் சதீஷ், இங்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் தர்மசெல்வன், திருவள்ளூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரைஆற்றினர்.
விழாவில், பள்ளி அறங்காவலர்கள், முதல்வர்கள், ஆசிரியர் மற்றும் மாணவ - மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement