Advertisement

ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 40வது முறையாக நிரம்பியுள்ளது.


4 ஆண்டுகளுக்கு பின்மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டிஎம்சி. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. இதனால், அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஜூலை 23ம் தேதி மேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது.


பாசனத்திற்காக, தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் 116 அடியாக சரிந்தது. கர்நாடக பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், காவிரியில் 1.43 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஒரே ஆண்டில் 2வது முறையாக இன்று (ஆக.,11) பிற்பகல் 1.30 மணியளவில் மேட்டூர் அணை நிரம்பியது.


எச்சரிக்கைஅணைக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின், அணையிலிருந்து அதிகபட்சமாக 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்க வேண்டாம் என காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கு முன் மேட்டூர் அணை, 2004ல் 4 முறையும், 2005ல் 5 முறையும் நிரம்பியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  கேட்க்கும் போது மனது ஆனந்தம் அடைகிறது...

 • Srinivasan Krishnamoorthi - Tiruchirappalli,இந்தியா

  மிகுந்த முயற்சி எடுக்காமல் காவிரி தமிழகத்தில் பாயும் நிலை மகிழ்ச்சியானது. அதே சமயம் தண்ணீர் அதிகம் வரும் பொது அதை எப்படி கடல் சேராமல் நம் மண்ணில் ஈர்த்துக்கொள்ளும் வழியை எப்போது செய்ய போகிறோம் என்பது கவலை மிக செய்கிறது. எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அந்த வல்லமை தர என் பிரார்த்தனைகள்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது// இதையா நல்லது நடக்க ஆரம்பித்தது என்று சொல்கிறார்கள்?? வாழைத் தோப்பு களும், மரவள்ளி கிழங்கு களும் அடித்து செல்லப்பட்டு விவசாயிகள் பலர் அம்போ என்றிருப்பது வருணபகவானின் கருணையா ??

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  வெறும் பத்து நாள் வடிகால் தண்ணீருக்கே ஆணை நிரம்பி விட்டது. பின்பு ஓரிரு நாள் வடிகால் தண்ணீருக்கு மறுபடியும் நிரம்பிவிட்டது. அறுபது ஆண்டு காலமாக தமிழகமே போராடியது வீண் இல்லையா?. அரசியல் மற்றும் அரசியல் சட்ட வீண் விரயங்களில் இதுவும் ஒன்று.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, இப்ப கூட, தஞ்சை டெல்டாவில், கடைமடை கிராம விவசாய நிலங்களுக்கு, காவிரி நீர் வந்து சேரலைன்னு, பல விவசாயிகள் புலம்புரதா செய்திகள் வருதுங்க. சில பல நீர் வழி தடங்கள், ஆக்கிரமிப்பாலோ, தானாக இடிந்தோ மறைந்து போயிருக்குமுங்க. அவைகளை கண்டறிந்து, அந்தந்த தாலுக்கா அதிகாரிகளிடம் எடுத்து கூறி, மனு செய்து, போராடி, சரி செய்ய வேண்டுகோள் விடுக்க வேண்டியவர்கள், அந்த அந்த, வட்டார வாழ் மக்கள் தானுங்களே?. இதை எல்லாம், அந்த மக்கள் செய்தார்களா?. அட, தியாகமின்றி, எந்த ஒரு சாதனையையும் நிறைவேற்ற முடியாதுங்க, பொதுவாக கூறினால்.

 • P RAMESH KUMAR - balasore,இந்தியா

  போன நாலு வருசமும் உங்க ஆட்சி தான்டா இருந்தது

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  அமரர் ஜெயாவின்ஆட்சிக்கு வருண பகவான் ஆசி என்றுமே உண்டு. நாத்திகம் பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் வருணபகவான் திரும்பியும் பார்பதில்லை

 • karupanasamy - chennai,இந்தியா

  என்னடா இது ஜூலையிலிருந்தே எல்லோரும் விரும்பின நல்லது நடக்க ஆரம்பிச்சுடுச்சு.வாழ்த்துக்கள் பொது மக்களே,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement