Advertisement

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு

திருவான்மியூர், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து பல்வேறு புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடையாறு மண்டலம், 181வது வார்டு, திருவான்மியூர், பிள்ளையார்கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பறை கட்டப்பட்டது.
நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்தனர்.
அதன் அருகே, வருவாய் துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க குட்டை உள்ளது.
கழிப்பறை மற்றும் குட்டை பகுதி என, மொத்தம், 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடம், 'எல்' வடிவில் உள்ளது.
இந்நிலையில், 2014ல், மாநகராட்சி இடத்தின் ஒரு பகுதி மற்றும் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கு, 2,000 சதுர அடி பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்காக துாண்கள் அமைக்கப்பட்டன.
இது குறித்த புகாரின்படி, ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிக்க, அடையாறு மண்டல அதிகாரி, 'நோட்டீஸ்' வழங்கினார்.இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர், இடத்தை ஆய்வு செய்து, அங்கு நுாலகம் கட்ட முடிவு செய்து, மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.
மேலும், நீர்த்தேக்க குட்டை உள்ள இடத்தை மீட்டெடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு
கடிதம் எழுதினார்.
சில மாதங்களில், துணை ஆணையர் பணியிட
மாற்றம் செய்யப்பட்ட
தால், அவருக்கு கீழ் நிலையில் இருந்த அதிகாரி
கள், நடவடிக்கையை அப்படியே கிடப்பில்
போட்டனர்.
இந்நிலையில் தற்போது, நுாலகம் கட்ட முடிவு செய்த பகுதி மற்றும் நீர்த்தேக்க குட்டை உள்ள இடத்தையும் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்
கள், மீண்டும் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நட
வடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    வித்த காசிலே பங்கு வரும்போது என்நையா பிரச்சினை என்று சொன்னார்களாம்.. ஆரசியல்வியாதிங்க செய்யதைடயா நாகா செய்யுறோம் என்று கோபத்துடன் சொன்னார்களாம். மேலே மந்திரி வரைக்கும் கட்டிங் போக்குதில்லே, அப்போ இதே எல்லாமே அரசுக்கு சொந்தம்தானே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement