Advertisement

முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு

புதுடில்லி : மேற்குவங்க அரசில் வணிக வரித்துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் இம்தியாஜூர் ரஹ்மான். இவரும் இந்துவான இவரது மனைவி நிவேதிதா கட்டாக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் கலப்புத் திருமண சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்டவர்கள்.

இறுதிச் சடங்கு மறுப்பு:
இந்நிலையில் உடல் உறுப்புக்கள் பலவும் செயலிழந்ததால் நிவேதிதா கடந்த வாரம் உயிரிழந்தார். நிவேதிதாவின் கடைசி விருப்பப்படி அவரது இறுதி சடங்குகளை செய்ய நினைத்த ரஹ்மான், டில்லியில் பெங்காளிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள காளி கோயிலில் ஆக.12 அன்று இறுதிசடங்குகள் செய்ய ரூ.1300 பணம் செலுத்தி பதிவு செய்துள்ளார்.ஆனால், அவர் இறுதிச் சடங்கு செய்ய முடியாது என கூறி, கோயில் நிர்வாகம் அவரது முன்பதிவை ரத்து செய்தது. கோயில் நிர்வாக தலைவர் அஷிதவ் பவ்மிக்கிடம் கேட்ட போது, ரஹ்மானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் தான். அவர் தனது அடையாளத்தை மறைத்து, மகள் இஹினி அம்பிரீன் பெயரில் முன்பதிவு செய்துள்ளார். எங்களுக்கு சந்தேகம் எழுந்ததால் அப்பெண்ணின் கோத்திரம் பற்றி கேட்டோம்.

அது குறித்து இவர்களால் பதில் சொல்ல தெரியவில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் கோத்திர முறையை கடைப்பிடிப்பதில்லை. இறந்த பெண், இந்து கலாச்சாரத்தை கடைப்பிடித்திருந்தாலும், முஸ்லிமை மணந்து கொண்டதால் அவரை இந்துவாக கருத முடியாது. அவரது இறுதிச்சடங்குகளை கோயிலில் செய்ய அனுமதிக்க முடியாது.

ஆனால், மனைவியின் விருப்பப்படியே இறுதி சடங்கை செய்ய தான் விரும்புவதாக கூறும் ரஹ்மான், இன்னமும் இறுதிச்சடங்களை செய்யாமல் இருந்து வருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (68)

 • varun - ,

  என்னோட தாத்தா கடைசி ஆசையா அப்போது பிரதமராக இருந்த ராஜீவை பாக்கனும்னாரு முடியலையே.....

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  முட்டாள் தனமான வாதம். சனாதன தர்மத்தில் அனைவரும் சமம். இந்து என்பது சட்டத்தில் தவிர சமூகத்தில் இல்லை. உருவம் அற்ற வழிபாடான இஸ்லாம் சனாதன தர்மத்திலும் இருக்கிறது. இறந்தபிறகு மதத்தை பற்றி நினைக்காமல் செய்ய வேண்டியதை செய்வோம். ஒரு நல்ல தமிழ் ப்ரோஹிதரை டெல்லியில் வைத்து செய்யுங்கள். திதி திவசம் எது ஆகினும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மதம் என்றால் அசிங்கம் என்பது இங்கு பட்டவர்த்தனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஏன் தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்களோ? குரங்கு கை பூமாலையாய் இந்தியா சின்னா பின்னப்படுகிறது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  எந்த மதத்தவராயினும், நாம் சுவாசிக்கும் காற்று மண்டலம் ஒன்றே ஒன்றுதானே?. ஒவ்வொரு மதத்தினருக்கு என்று ஒரு காற்று மண்டலம் இருக்கா என்ன?. அப்பறம் ஏன் இப்படி?. இறந்தவரின் ஆசைப்படி கிரியை செய்தால்தான, அந்த ஆத்மா சாந்தி அடையும்?. அட யோசியுங்க எல்லோரும், நன்றாக.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  மனைவியின் விருப்பப்படியே இறுதி சடங்கை செய்ய விரும்பும் ரஹ்மான் பாராட்டுக்குரியவர்...... அவரது கோரிக்கையை ஏற்கும் வேறு கோவில்கள் எதிலாவது சடங்கை செய்யலாம்......

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அந்த பெண் இந்து முறைப்படி எரிக்கப்பட்டு விட்டார்.அத்துடன் கதை முடிந்துவிட்டது.மற்ற சடங்குகளை பற்றி பேசுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.

 • Ramachandran - India,இந்தியா

  இப்படி மதம் மாறி திருமணம் செய்பவர்களின் திருமணத்துக்கு ஐயர் வர மறுத்தால், திட்டுகிறார்கள். பணம் கொடுத்தால் வர வேண்டியது தானே என்கிறார்கள். மந்திரம் பொதுவாக தான் சொல்ல முடியும். அதனால், சிலர் வர் மறுக்கிறார்கள். வேதம், சாஸ்திரத்தை கொஞ்சமும் மதிப்பதில்லை. ஆனால், ஏதோ சடங்காக இப்படி வைதீக முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 • jagan - Chennai,இந்தியா

  கோவில் செய்தது சரியே. கோத்திரம் இல்லாமல் ஒன்னும் செய்ய முடியாது மேலும் அவர் தான் தாய் மதம் வேண்டாம் என்று உதறிவிட்டாரே அப்புறம் ஏன் இந்த ஷோ ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நிராகரிப்பது அந்தக்கோவிலில் உரிமை... வேறு கோவிலில் உண்மையையான கோத்திரத்தை சொல்லி தாராளாமாக செய்யலாம்... இதில் தவறு ஒன்றும் இல்லை...

 • kurinjikilan - Madurai,இந்தியா

  இது ஒரு தவறான முன்னுதாரணம்.. இஸ்லாமியரை மணந்திருந்தாலும் இந்துவாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அவரது மத சம்பந்தமான விருப்பு வெறுப்பு களில் அவரது கணவர் தலையிடாமல் இருந்தது அவர்களிடையே நிலவிய புனிதமான அன்பையே குறிக்கின்றது..சுரதானி எனும் இஸ்லாமிய அரச குடும்பத்து பெண்ணுக்கு திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தனியாக கோவில் எழுப்பப்பட்டு அதற்குண்டான மரியாதையும் செலுத்தப்பட்டு துலுக்க நாச்சியார் என்று கொண்டாடப்படுகிறார்..மதம் என்பது மாறாதவரை பிறப்பினைப் பொறுத்துதான் அமையவேண்டும்..திருமணம் செய்வதால் மட்டும் வேற்றுமதத்தை சேர்ந்தவராக கருதக்கூடாது..இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது.. நிச்சயம் மதத்தை விட மனிதநேயம் பெரிது..இந்து மதத்தில் மட்டும்தான் நாத்திகமும் பொறுத்துக் கொள்ளப்படுகிறது..

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Probably he could not do the last rites as per his religion. So he may have tried Hindu temple.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  நடுநிலை நக்கிகள் நன்றாக பொங்குகிறார்கள். இந்து மதத்தில் மத மாற்றம் என்பது கிடையாது. மன மாற்றம் மட்டுமே. அது போல கணவனின் வாழ்க்கை முறையையே அவர் கடைபிடிக்க வேண்டும். இதில் அவரது விருப்பம் என்பது ஏதும் இல்லை. இது தான் இந்து தர்மம். உங்கள் இஷ்டத்திர்க்கு சட்டங்களை வளைக்க இது ஒன்றும் மரினா கடற்கரை இல்லை. அவர் விருப்பபடி நடக்க வாய்ப்பில்லை. நீங்கள் அப்படித்தான் நடத்த வேண்டும் என்றால் வேறு வழிகள் உள்ளன. அதற்காக கோவில்களில் உங்கள் நியதிகளை புகுத்த முடியாது. உங்கள் மன ஓட்டத்திற்கு ஏற்றவாறு கோவில் நியதிகள் கிடையாது. அங்குள்ள கட்டுப்பாடுடன் தான் அவர் நடந்து கொள்ள வேண்டும். இந்து தர்ம முறைப்படி திருமணம் வேண்டாம் என்று தானே வெளியேறினார். மீண்டும் என்ன இந்து தர்மம் வேண்டியிருக்கு ? கம்மி, காங்கி, உபிகள் அமைதியை கடைபிடிக்கவும். உங்களின் ஏரியா அல்ல. உங்களின் அட்வைசை சுடாலின் வீட்டிற்கு பெட்டி பெட்டியாக அனுப்பி வையுங்கள். முன்னால் முதல்வருக்கு எதற்கு கடற்கரையில் ? ஆனால் ஜெவுக்கு சமாதி கிடையாது ? இரவோடு இரவாக கேசுகள் வாபஸ். புதைத்த பிறகு அங்கே இருக்கும் கிரானைட்டுகளுக்கு பாலாபிசேகம். பழ நைவேத்யம். இதற்க்கு உங்களின் ஆலோசனைகளை அனுப்பி வைத்து, அறிவியல் முறையில் கொள்ளையடித்த கும்பலின் தலைவனுக்கு பாரத ரத்னா விருது வழங்க கடுமையாக போராடுங்கள். கூடவே முள்ளி வாய்க்காலில் சண்டை நடந்து கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று வேட்டையாடி பிரபாகரனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று இலங்கை அந்த போரில் வென்றது. அதற்கு இலங்கையிடம் இலங்கை ரத்னா என்ற பட்டத்தை கொடுப்பதற்கு இலங்கை பிரதமரிடம், குடியரசு தலைவரிடம் வேண்டுகோள் விடுங்கள். கொடுப்பார்கள்.

 • ஆப்பு -

  பலே...பலே... பாஷாண்டி இந்துமதம்....ஜாதிகள் பிறப்பால் வருதுன்னு முழக்கியவர்கள் இப்போ மதமே கல்யாணம் பண்ணிக் கொண்டதால் மாறிவிட்டது என்கிறார்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்துதர்மத்தை பின்பற்றுபவர் எதற்காக வேற்று மதத்தவரை மணக்கவேண்டும். அப்படி அவருக்கு இந்து தர்மத்தில் பிடிப்பிருந்தால் கணவரை மதமாற்றம் செய்ய வேண்டியது தானே. அதென்ன கிறித்துவ , முஸ்லீம் பெண்கள் மட்டும் இந்து ஆண்களை மதமாற்றம் செய்து தான் திருமணம் செய்கிறார்கள் , ஆனால் இந்து பெண்கள் உடனடியாக மதமாற்றம் ஆகி விடுகிறார்கள்.

 • abdul rajak - trichy,இந்தியா

  அது என்ன ? இறுதி சடங்கு ? முஸ்லீம் ஒருவர் இறந்து விட்டால் ( தற்கொலையாக இருக்க கூடாது ) கடைசியில் அவருக்காக ,இறந்தவர் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோர அனைவரும் சேர்ந்து இறைவனிடம் சிறப்பு பிராத்தனை செய்வதாகும் . இதில் எந்த சடங்கும் , சம்பிரதாயமும் இல்லை .அந்த அயோக்கிய பயல் முஸ்லிமாகவும் வாழாமல், இந்துவாகவும் வாழாமல் ரெண்டு பக்கமும் அடித்து விரட்டப்பட்டுள்ளான் .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மொதல்ல அந்தப் பச்சை ஏன் பொண்டாட்டிக்கு ஹிந்து முறைப்படி செய்ய விரும்பியிருக்கான் ?? அதாவது அவனுக்கே தெரியும் ..... பச்சை முறைப்படி பண்ண அனுமதி கெடைக்காது -ன்னு ..... அல்லது தனக்கும் மேல அந்த 72 கெடைக்காது -ன்னு பயந்திருப்பான் .... இன்னொன்னு கவனிச்சீங்கன்னா, அந்தம்மாவுக்கு இறுதிச்சடங்கு இன்னும் அவன் செய்யலை ..... ஹிந்து வழக்கப்படி தற்கொலை செய்து கொண்டவர்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இறுதிச்சடங்கு கண்டிப்பாக காலாகாலத்தில் செய்யவேண்டும் .... இல்லாவிட்டால் ஜீவாத்மா அமைதி இழந்து வாடும் (என்னென்ன துன்பங்கள் என்று ஒரு பட்டியலே இருக்கிறது) ..... இது எப்படி அவனுக்குத் தெரியாமப் போச்சு (ஒரு ஹிந்துவுடன் வாழ்ந்தும்) ?? இதை பத்தியெல்லாம் பேசிக்க, புருஷன் பொஞ்சாதிக்கு சந்தர்ப்பமே வாழ்க்கையில வரலையா ?? இவளுகளுக்கு என்ன நெனப்பு ??

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இந்துக்கள் இருந்தால் உடலை கோவிலுக்கு எடுத்து செல்வதில்லை. வீட்டிலோ ஏதாவது மண்டபத்திலோ வைத்து அதற்க்கான கிரியைகளை செய்து சுடுகாட்டில் தகனம் செய்வார்கள். இவர் ஏன் காளி கோவிலுக்கு சென்றார்?

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  காசியில் கங்கை கரையில் இந்த சகோதரிக்கு இறப்பிற்கு பிறகான வைதீக சடங்குகளை செய்து வைக்க நிறைய பேர் இருக்கிறார்கள் ... கோவை ஈஸா மையத்தில் பணம் கட்டினால் அவர்கள் இறந்தவருக்கு ஸாந்திபூஜை செய்து வைக்கிறார்கள் .

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  இந்துவான ஒரு பெண் தன் இறுதிச்சடங்குகள் இந்துமுறைப்படி நடக்க விழைந்ததும், அவரது இஸ்லாமிய கணவர் மனைவியின் விருப்பத்தை நடத்த விழைந்ததும் போற்றத்தகுந்த செயல்களே. மனத்தால் நினைத்ததே சடங்குகள் இந்துமுறைப்படி நடந்ததாக மனநிறைவு பெறமுடியும். தடைபோடுபவர்களை நினைத்து வெட்கப்படுவதை தவிர வேறென்ன செய்யமுடியும்?

 • நக்கல் -

  பேய்க்கு வாழ்க்கைபட்டால் முருங்கமரம் ஏறித்தான் ஆகணும்... காதலித்து கல்யாணம் பண்ணும்போது எல்லாம் கண்ணை மறைக்கும்... பின்னாடி வந்து புலம்பி என்ன பண்ணுவது... மதத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கொண்ட சிலரே கஷ்டப்படுகிறார்கள்... சில விஷயங்கள் மாறவே மாறாது...

 • TechT - Bangalore,இந்தியா

  இறுதி சடங்கை அந்த கோவிலில் செய்யாமல் மற்றொரு முறையில் செய்யவும், ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மதங்கள் மனிதனை மீண்டும் கொடூர மிருகங்கள் ஆக்குகிறது .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கடைசி வரை இந்துவாக தான் வாழ்ந்து உள்ளார் அப்புறேன் ஏன்? ராமர் கிருஷ்ணர் ஆண்ட உலகங்கள் பல லட்ச கோடி உயிர் இனங்களை படைத்தாரென்றால் முஸ்லீம் கிறிஸ்தவனை படைத்தவர் அவர் தானே அப்புறம் ஏன் தீட்டு என்று ஒதுக்க வேண்டும் ?

 • Thiyagarajan S - karaikal,இந்தியா

  ஹிந்துக்கள் விழிப்படையத் துவங்கி

 • Arasu - Ballary,இந்தியா

  மிக சரியான முடிவு, கோயில் கோட்பாடுகள் தனி மனித விருப்பு வெறுப்புகளை விட உயர்ந்தது. அவருடைய கணவருக்கு ஒரு கேள்வி இதே நிலைமை வேறாக இருந்தால் அவர்கள் கபரிஸ்தானில் அனுமதிப்பார்களா

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  பிரியங்கா சோப்ராவின் பாட்டிக்கு அவர் விருப்பப்படி அவர் அளித்த அன்பளிப்பை வைத்து கட்டிய தேவாலயம் அவரது ஆசை படி அவரது இறுதி சடங்கை செய்ய மறுத்த பொழுது கொதிக்காத நெஞ்சங்கள் இன்று கொதிக்கப்போகிறது. தனது இறுதி சடங்கு ஹிந்து முறைப்படியே இருக்கவேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவர் மனதளவில் கடைசிவரை ஹிந்துவாகவே வாழ்ந்து வந்ததாகவே தோன்றுகிறது. பல தருணங்களில் விடாபுடித்தனத்தை களைந்து காலத்திற்கு ஏற்றவாறு ஹிந்து மதம் தனது பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது. மத மாற்றம் செய்யாமல் கடைசி வரை ஹிந்துவாக இருந்த நிவேதிதாவின் இறுதி சடங்கை கோயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

 • Nanjil sampath - Chennai,இந்தியா

  Jj

 • Nanjil sampath - Chennai,இந்தியா

  அறிவு கெட்டவனே.. மக்களை பிரிப்பதற்கு உன்னை மாதிரி பத்திரிக்கையாளன் போதும்... அது என்ன தலைப்பில் இந்து பெண்ணுக்கு....

 • MANI DELHI - Delhi,இந்தியா

  முன்னால் யோசிக்காமல் பின்னால் வருத்தப்பட்டு என்ன பயன். வாழ்க்கையில் விபரீத விளையாட்டுகளை தேர்வுசெய்வது இன்று அனைவருக்கும் ஒரு பொழுது போக்காகி விட்டது. அப்புறம் என்ன விருப்பம் .... கடவுளை ப்ரார்த்திக் கொள்ளுங்கள் ..ஆன்மா சாந்திக்கு ....

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  உங்களுக்குத்தான் ஆடு இருக்குல்ல ...அப்புறம் ஏன் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement