Advertisement

மூணாறில் நிலச்சரிவு: 69 பேர் தவிப்பு

மூணாறு: தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால், ரிசார்ட்டில் தங்கியுள்ள 69 சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு பின்இடுக்கி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் அணை நேற்று திறக்கப்பட்டது. 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று (ஆக.,10) நண்பகல் 12 மணியளவின்படி அணைக்கு வினாடிக்கு 521 கன அடி தண்ணீர்வந்து கொண்டுள்ளது. மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு பின், அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன.

வெள்ளப் பெருக்குதொடர் மழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை, பக்தர்கள் தங்கும் இடம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. ஆலுவா சிவன் கோயிலும் மழை நீரில் மூழ்கியுள்ளது.

உஷார் நிலை:இடுக்கி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் அதிகபட்ச உஷார்நிலை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் உதவிஇடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிக்கப்பட்டதால், ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Narayan - chennai,இந்தியா

    மத்த மாநில மக்கள் இயற்க்கை பேரழிவில் கஷ்டப்படும்போது அனுதாபம் காட்டுங்கள் உதவுங்கள் நக்கல் அடிக்காதீர்கள் நம்மக்கு கூட இந்தமாதிரி கஷ்டங்கள் எப்போ வருமோ ஆண்டவக்குத்தான் வெளிச்சம் மனித நேயம் வளர்த்துக்கொள்ளுங்கள்

  • mindum vasantham - madurai,இந்தியா

    மூணாறில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு எஸ்டேட் ஆக்க பட்டுள்ளது ,சபரிமலையை iruppathe அடைந்த கட்டு பகுதியை தான் , அங்கு நான் 2001 இல் கடைசியாக போனேன் இப்போ எப்படி இருக்குனு தெரியலை , அதனால் தான் மண்டலா பூஜையின் பொது மட்டும் கோயிலுக்கு போக வேண்டும் என்ற கட்டுப்பாடு , நன் சென்று 15 வருடம் ஆகிறது அப்போ யானை எல்லாம் பார்த்தோம் , மேற்கு தொடர்ச் மலை காடுகளைய் பாதுகாக்க வேண்டும் , இல்லை என்றால் தென்னிந்திய குடிகளின் நீராதாரம் பாதிக்க படும் என்று உச்ச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது சமீபத்தில் நதிகளின் நீரோட்டம் 30 % காடுகள் அளிப்பாள் குறைந்துள்ளது , இயற்க்கை வழிபாடு கொண்ட இந்தியர்கள் காடுகளைய் பாதுகாப்பதில் தான் நம் எதிர்காலம் அமைந்துள்ளது , மேலும் ஒவ்வொரு ஊரிலும் சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடை நீர் கலந்துள்ளது இதை முதலில் தடுக்க வேண்டும்

Advertisement