Advertisement

காலியாகியுள்ள தி.மு.க., தலைவர் பதவியில் யார்

கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க.,வில் அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடை காண விரைவில் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொதுக்குழு கூட்டப்படுகிறது. காலியாகியுள்ள கட்சி தலைவர் பதவி ஸ்டாலினுக்கு என்பதில் பெரிய அளவில் சர்ச்சை எழப் போவதில்லை என தெரிகிறது.


அதேநேரத்தில் அழகிரிக்கும், கனிமொழிக்கும், கட்சியில் என்ன பதவி தரப் போகிறார் ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


கருணாநிதியின் உடலை நேற்று முன்தினம் மெரினாவில் நல்லடக்கம் செய்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றிய பணிகள் :கருணாநிதியின் அயராத உழைப்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் சமூக வலைதள பிரசாரமாகி இருக்கிறது. இதன் வாயிலாக தி.மு.க.,வின் சாதனைகள், கருணாநிதியின் மறைவால் இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.


கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமி தரப்பினரிடம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. பின் ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஒன்றாக சென்று முதல்வர் பழனிசாமியிடம் இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினாவில் இடம் தர அரசு மறுத்தது. ஸ்டாலின், இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றார்.


கருணாநிதி மறைவுக்கு குடும்ப ரீதியாக செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்த பின் தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திமுடித்துள்ளார்.


இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவியை கனிமொழிக்கும், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை மீண்டும் அழகிரிக்கு வழங்குவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.


ஸ்டாலினுக்கு போட்டியாளராக இருக்க கனிமொழி விரும்பவில்லை. எந்த ஒரு காரியத்தையும் ஸ்டாலின் அனுமதி பெற்று தான் செய்கிறார். அதேசமயம், கட்சி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே, அவருக்கு பொருளாளர் பதவி வழங்குவதால், தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார் என ஸ்டாலின் கருதுகிறார். அதேபோல அழகிரி விரும்பினால் தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை அவருக்கு வழங்கவும் ஸ்டாலின் தயாராக இருப்பதாக தெரிகிறது.

பொதுக்குழு :'கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என அழகிரி கருதினால், அவரது மகன் துரை தயாநிதிக்கு, கட்சி பதவியும், முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் வழங்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவிக்கு தற்போது அன்பழகனே தேர்வு செய்யப்படுகிறார். அவர் முன்மொழிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (114)

 • SARAVANAN G - TRICHY,இந்தியா

  உன் வயித்தெரிச்சலை என்னால் உணர முடிகிறது.......நீ மெரினா எப்போதாவது வந்தால் முதலில் உன் கோமளவள்ளியை பார்த்து விட்டு, மனமிருந்தால் , அப்படியே அங்கு ஓய்வெடுக்கும் இரட்டை சூரியர்களையும் பார்த்து விட்டு, மெரினாவில் விற்கும் கரும்பு சாற்றையும் அருந்தி விட்டு வா..... உன் மனசூடு குறையும்.......நன்றி....

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சாவுக்கு வந்த கூலிப்படையில் செத்துப்போன நாலுபேர் குடும்பத்தில் யாருக்கும் எந்த பதவியும் கிடையாதா? Atleast கனிமொளி வீட்டிலாவது "ஏதாவது" வேலை தரலாமே

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  பொருளாளர் பதவி மட்டும் வெளி ஆள் யாருக்கும் தர மாட்டோம்.,

 • Natarajan - Hyderabad,இந்தியா

  இந்த கேடு கெட்ட கட்சிக்கு பிஜேபியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது. இன்று இந்தியா வில் அனேஹமாக ஊழல் இல்லா கட்சி அது ஒன்று தான்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஆற்காடு வீராச்சாமியை பத்திவிட்ட மாதிரி அன்பழகனை பத்திவிட்டுட்டு அழகிரிக்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தால் பிரச்சினையை ஓவர். பிறகு தலைவர் ஸ்டாலின், பொதுசெயலாளர் அழகிரி, பொருளாளர் கனிமொழி, மகளிர் அணி தலைவியாக செல்வி, இளைஞர் அணி தலைவர் உதயநிதி, துரைதயாநிதிக்கு முரசொலி அறக்கட்டளை பதவி, சபரிசனுக்கு துணை தலைவர் பதவி, தயாநிதிமாறனுக்கு துணை செயலாளர் பதவி கொடுத்தால் போகிறது. எவன் கேட்கப்போறான். காவடி தூக்கிகளுக்கு சாரி, தொண்டர்களுக்கு காவடி தூக்கவேண்டும் அவ்ளோதான். யாரை தூங்குகிறோம் என்பது முக்கியமில்லை.

Advertisement