Advertisement

கிருமிகளை நேசிக்கும் கிருமி நாசினிகள்!

மருத்துவமனைகளில் நோய்க் கிருமிகளுக்கு பஞ்சமிருக்காது. கிருமிகளிடமிருந்து நோயாளிகளையும் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள,
ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளை மருத்துவர்களும் செவிலியரும் பயன்படுத்துவர்.
மருத்துவமனையில் நுழையும்போதும், வெளியேறும்போதும் கைகளை சுத்தப்படுத்தப் பயன்படும் கிருமிநாசினிகளால் உண்மையில் எந்த அளவுக்கு கிருமிகளை அகற்ற முடிகிறது?
'சயன்ஸ் டிரான்ஸ்லேசனல் மெடிசின்' இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு, கைச் சுத்தத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கிருமிநாசினிகளுக்கு, 'டிமிக்கி' கொடுக்க பேக்டீரியாக்கள் கற்றுக்கொண்டுவிட்டதாக தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில், 1997 முதல், 2015 வரை சேகரிக்கப்பட்ட ஒருவகை பேக்டீரியாவை, ஆய்வுக்குட்படுத்தினர் விஞ்ஞானிகள்.
சோதனைக்கு எடுக்கப்பட்ட, 139 கிருமி மாதிரிகளில், 2010ம் ஆண்டுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட பேக்டீரியாக்கள், ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகளை சகித்துக்கொண்டு பிழைக்கப் பழகிவிட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நோயாளிகளின் வயிற்றில் காலனிகளை அமைத்து, ரத்தத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய அக்கிருமிகள், தற்போது புழக்கத்திலுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாவற்றையுமே எதிர்க்கும் திறன் உடையவை.
இப்படியிருக்க, 'சாதாரண ஆல்கஹாலை அவற்றால் எதிர்க்க முடிவதில் ஆச்சரியமில்லை' என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்போது என்ன வகை கிருமி நாசினிகளை பயன்படுத்துவது என்று மருத்துவர்கள் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sathyasundaram Lakshminarayanan - Mumbai,இந்தியா

    அதுதான் இயற்கை. அதீத சுத்தம் கிருமிகளின் மரபணுவில் மாற்றம் செய்து புதிய சக்தியுள்ள கிருமியாக மாறும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement