Advertisement

காற்றை முற்றுகையிடும் கார்பன்!

பூமியை சுற்றிப் படர்ந்துள்ள வாயு மண்டலத்தில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு அபாய அளவை எட்டியிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் இந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலந்திருக்க வில்லை என்கிறது அந்த ஆய்வு.
காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை, பி.பி.எம் என்ற அளவை மூலம் அளப்பர். அதாவது, 'பார்ட்ஸ் பெர் மில்லியன்'. இதன்படி, 2017ல் எடுக்கப்பட்ட அளவு, 405 பி.பி.எம்.,இருந்தது.
இதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உறைந்த பனிப் பாறைகளுக்கு இடையே இருக்கும் குமிழிகளில் சிக்கிய காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.
அதன்படி, 2017ல் தான் கரியமில வாயுவின் அளவு மிக அதிகமாக இருந்தாகத் தெரிய வந்துள்ளது.
அதேபோல, 2017ல் தான் பூமி காணாத அளவுக்கு வெப்பமாக இருந்ததாகவும் வேறு சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம், காற்றில் கார்பனின் அளவைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்தி இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • v A Selvi - Dhanbad,இந்தியா

    இந்தியாவும் இதில் புதிய ஆராய்ச்சியில் கார்பன் அளவை கட்டுப்படுத்த முயற்சி செய்ய vendum

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement