Advertisement

தமிழக அணைகளின் நாயகன் கருணாநிதி

தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த, 21 ஆண்டுகளில், 36 அணைகளை கட்டி மக்களின் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்தார்.


கருணாநிதி முதல்வராக இருந்தபோது விவசாயத்தின் மீதும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார். தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள், 115. அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், கட்டப்பட்டவை 90.


சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே தான், காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.


முதல்வராக இருந்த கருணாநிதியின் விடாமுயற்சியால், அவர் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், உப்பாறு, மேல் ஆழியாறு, சோலையாறு, மணிமுக்தா நதி, சிற்றாறு, கீழ்கொடையாறு, மேல்கொடையாறு , கடனா, பரப்பலாறு, ஹைவேவிஸ், மணலாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, ஆனைக்குட்டம், அடவிநயினார் கோவில், செண்பகத்தோப்பு, இருக்கன்குடி உள்ளிட்ட, 36 அணைகள் கட்டப்பட்டு அவற்றை பாசனம், குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


தேனி மாவட்டத்தில், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகளை பார்வையிட்டும், திறந்தும் வைத்தார்.


-நமது சிறப்பு நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (55)

 • bala - chennai,இந்தியா

  தமிழ்நாட்டில் அணைகளின் நாயகன் என்றால் அது பெருந்தலைவர் அய்யா காமராஜ் அவர்கள் தான்

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  பிழையான பதிவு. வீராணம் திட்டம் என்று ஆரம்பித்து, காவேரி சிலையையும் சைதாபேட்டைளயில் திறந்து வைத்தார். பல கோடி செலவுக்கு பிறகு கை விடப்பட்டது. அதில் ராகவா வீரா என்னும் ஒப்பந்தக்காதர் ஏராளமான பணத்தை கமீஸுன் என்று திமுக அரசியல்வாதிகளுக்கு கொடுத்து விட்டு. துண்டை தலையில் போட்டுக்கொண்டு கம்பெனியை முடி விட்டு ஓடி விட்டனர். ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டார். இந்த லக்ஷணத்தில், கர்நாடகா எதனை அணைகள் வேண்டுமானாலும் காவிரியின் மீது கட்டி கொள்ளட்டும் என்று தாராளமாக தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டு கொடுத்த பெருந்தகை.

 • nanthuji,thailand -

  அணை கட்டினாரு.., கடல்ல திமிங்கலம் விட்டாரு, தன் சொத்துகளை தன் உடன் பிறப்புகளுக்கு அர்பணித்தார்.. கட்சி பதவிகளை தன் உடன்பிறப்புகளுக்கு கொடுத்து அழகு பார்த்தார்.. இன்னுமா இந்த நாடு கட்டுமரத்தை நம்புகிறது.. என்ன செய்ய விதி..

 • Thamilan -

  Alandhuvidungada Alandhuvidunga

 • Anand - chennai,இந்தியா

  இவர் புண்ணியத்தில் தான், கர்நாடகம், காவேரியின் துணை நதிகளான, ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, போன்றவற்றின் குறுக்கே மிகப்பெரிய அணைகளை கட்டி அவர்கள் வளமாகி தமிழ்நாட்டை பாலைவனமாக்கியது.

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  அணைகளால் காடுகளின் பரப்பளவு குறைகின்றது.வனவிலங்குகளின் இருப்பிடம் பாதிப்புக்குள்ளாகிறது.

 • kumar - Erode,இந்தியா

  67 க்கு பிறகு ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டதா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லை? இந்த அணைகளெல்லாம் இப்போது எங்கே? ஒரு கக்கூஸ் திறந்தாலும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கழகதலைவரும் தொண்டர்களும், இத்தனை மாபெரும் அணைகள் கட்டியிருந்தாள் விளம்பர படுத்தியிருக்க மாட்டார்களா? உண்மை என்ன வென்றால், தனக்கும், தன குடும்பத்துக்கும், தன கட்சிக்கும் (அந்த வரிசையில்) ஆதாயமில்லாத ஒன்றை கருணாநிதி செய்ததில்லை. அவர் மறைவின் நியாயமான வருத்தத்தினால் தொண்டர்களும் ஜாலராக்களும் இப்படி நடக்காத ஒன்றை சொல்லி அவரை புகழ்வதினால், உண்மையை மறைக்க முடியாது.

 • நக்கல் -

  தலீவர் ஏது கட்டினாலும் குறைந்தபட்சம் 3.... நான் பின்னாடிதான் சம்பதித்தார்னு நினைத்தேன்... முதல்லயே சம்பதிச்சுட்டார் போல இருக்கு...

 • Gopi - Chennai,இந்தியா

  கூடவே சாராய ஆற்றை திறந்து விட்டார் என்ற செய்தியையும் ஏன் நீங்கள்போடவில்லை.. அனைத்து தட்டு மக்களையும் தட்டு எந்த வைத்த விஷயம் அது. தான் தீட்டிய திட்டங்களுக்கு கான்டராக்டர்களை செட் செய்து 50 பைசா மதிப்புடைய ஒரு திட்டத்தை 1 ருபாய் கூட்டி 75 பைசாவில் முடித்த்தோம் என்று கூறி மீதி 25 பைசா அவர்களின் பாக்கெட்டிற்கு போன கதைகளை போட மறந்து விட்டீர். இதே ஜெயலலிதா செய்தால் தக்காளி சட்டினி கலைஞர் செய்தால் ரத்தமா ? ஊழல் ஊழல் தான். அதிலும் விஞ்ஞான ஊழல் ஊழல் தான். தமிழ நல்ல சிந்தனையாளனாக இருப்பதுதான் முக்கியம், வெறும் சிந்தனையாளன் தேவை இல்லை. அவன் குடும்ப நீதி சேர்க்கத்தான் லாயக்கு . இது ஊரறிந்த ரகசியம்

 • PRABAKARAN - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  தொடர் ஆட்சி இருந்திருந்தால் மேலும் பல சாதனை செய்துஇருப்பார் எம் ஜி யார் மற்றும் ஜெயாவினால் எல்லாம் தடைபட்டது

 • PRABAKARAN - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  மூடர்கள் கருத்தை மதிக்க வேண்டாம் தலைவர் புகழ் என்றும் நிலைக்கும்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  தினமலர் குறிப்பிட்டவை அணைகள் அல்ல தடுப்பு சுவர்கள் மட்டுமே.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இவ்வளவு அணைகளை கட்டியவர் காவிரியை எதற்காக தாரை வார்த்தார்?

 • bal - chennai,இந்தியா

  சுத்த பொய்....என்னென்ன பெயர்கள்... மதுராந்தகத்தை உடைத்தவர்கள் இவர்கள்...வீராணம் பேரை சொல்லி கொள்ளை அடித்தவர்கள்...அது அவர்களால் வரவில்லை...ஜெயாவால் வந்தது.

 • bal - chennai,இந்தியா

  பொய் சொல்வதிலும் ஒரு அளவு வேண்டும்...36 அணைகளாம்...தவறுதலாக வந்த வார்த்தை போல இருக்கு

 • Meenu - Chennai,இந்தியா

  ஹி ஹி ஹி ஹி ...... அணைகளா

 • KALAPPAL KV SENTHIL MUSCAT - muscat,இந்தியா

  சொல்வது தினமலர் அல்லவா முரசொலி இல்லையே முரசொலியாக இருந்தால் சரி ..............தினமலர் ........vs ............. கலைஞர்

 • christ - chennai,இந்தியா

  இப்படி அணைகளை கட்டி நல்ல விஷயங்களை செய்தவர்கள் அடுத்தவர் சொத்தையே அபகரித்த செய்திகள் பல வெளிவந்தன .

 • RR Iyengar - Bangalore,இந்தியா

  . அணைகள் எல்லாம் கோபாலபுரத்திலும் அண்ணா அறிவாலயத்திலும் இருக்கா ... ஒரு அருங்காட்சியகம் அமைத்தா, டோக்கன் போட்டு நல்லா கல்லா கட்டலாம் ... செய்யுங்களேன்

 • KALAPPAL KV SENTHIL MUSCAT - muscat,இந்தியா

  இப்படித்தான் காமராஜர் அண்ணா பெரியார் ராஜாஜி இவுங்க வாழ்ந்தப்ப ஊழல் ஊழல் னு சொல்லிருப்பாங்க செத்த பிறகு காமராஜர் சூப்பர் அண்ணா அருமை அப்படின்னு சொன்னாங்க அதே போல் கலைஞர் இருந்தப்ப ஊழல் ஊழல் னு சொன்னோம் இப்பதான் இவ்ளோ அணை கட்டி இருக்கார் என்ற விஷயம் தெரிந்தது உயிரோட இருக்கும்போது யாரும் சொல்லலை ....... ஆனால் இந்த நவீன உலகத்திலும் பாருங்க தன் இறப்பில் என்ன ஒரு கூட்டத்தை கூட்டிட்டார் கலைஞர் 1 கோடியோ இல்லை 2 கோடியோ இருக்கும்னு சொல்ராங்க கலைஞர் ஆட்சியில் எந்த நல்லதும் நடக்காமலாஇவ்ளோ கூட்டம் கூடினிச்சி ஏதோ ஒரு ஆளுமை இருந்துதானே உள்ளது நான் கலைஞரின் அவ்ளோ பெரிய விசுவாசி இல்லை ஆனால் நேற்றையா கூட்டம் அப்பப்பா ஒட்டு மொத்த தமிழ் உலகமும் கலங்கியதை நாம் பார்க்கமுடிந்தது அதுதான் கலைஞர் .................

 • Raja - mumbai,இந்தியா

  People are more concerned about the surplus water let into the sea. This concern definitely every goverment is but the topography did not permit to construct any dam beyond downstream of mettur. After the stanley dam mettur the Cavery is flowing in plain ground. Normally the dams are constructed in between two mountain. If dams are constructed in plain area large area of agriculture land or built-up areas will get submerged. More over the bed of the river coarse beyond mettur is sandy, if dams are constructed in sandy area the loss of water due to percolation will be more. However the successive Governments have constructed many dykes (under ground check dam) across the Cavery to prevent the moving of subsoil water towards sea in the down stream of mettur. Mostly the sub soil water is being tapped for many major drinking water supply schemes in this area, the dykes are helpful for these drinking water supply schemes.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த மழை. இந்திய அரசியல் சட்டம் மழைபொழிவை பதிய ஆரம்பித்த நாளிலிருந்து தமிழகம் நாட்டிலே மிக குறைந்த மலையை பெறுவதறக்கும் பகுத்தறிவு சிற்பிகளின் ஆக்கிரமிப்பே காரணம் என்று அரசித்தால் சட்ட மூடர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  காவேரியில் மனச்சாட்சிக்கு பயந்து நடந்திருந்தால் தமிழ்நாடு குறிப்பாக காவேரி என்றும் வளமாக சோழநாடு என்றும் சோறு உடைத்தாகவே இருந்திருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  21 ஆண்டுகளில், 36 அணைகளை கட்டி மக்களின் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்தார்...அப்பிடியா... அந்த அணைகள் எங்கே இருக்கிறது... விளம்பர பிரியரான மு க ஏன் இதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கவில்லை...

 • rajan. - kerala,இந்தியா

  அணைகளின் நாயகன் நாயகி என்ற வியாக்கியானமெல்லாம் சரிப்பா ஏன் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டி இத்தனை கால ஆட்சியில் கேஸ் போட்டு வாங்கிற நீரை சேமிக்க விவயாயிகள் நலனை காக்க திட்டம் வகுக்க வில்லை. காரணம் ரியல் எஸ்டேட் மணல் மாபியா உருவாக்கி காசு பார்க்கணுமில்ல அதனால தான். ஏன் நதி நீர் இணைப்பு திட்டம் போட வில்லை கபினி அணை ஏன் அனுமதி வழங்கினாய். எல்லாம் பெரிய புரட்டு அரசியல் தான்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கலைஞர் ஆட்சியின் வரலாற்றை விருப்பு வெறுப்பற்ற நிலையில் தெரிந்து கொண்டிருந்தால் நண்பர் ரகுராம் வெங்கட் கேட்பது போன்ற அறியாமைத்தனமான கேள்விகள் வந்திருக்காது. நான் திமுக காரன் என்றாலும் ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டம் மிகவும் பிடித்தது. நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வது நல்ல மனிதனாக வாழ உதவும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கலைஞர் குறிப்பிட்ட காலம் தொடர் ஆட்சியில் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக அணைகள் கட்டப்பட்டு வீணாக கடலில் கலக்கும் நீர் சேமிக்க முடிந்திருக்கும்.

 • Raja - mumbai,இந்தியா

  Karuthu. Methavigal karuthu sollavum

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  செய்ய வேண்டியவைகளும் செய்யப்பட்டது. நடக்க கூடாதவைகளும் நடந்தது மனதுக்கு தெரிந்தே .

 • சிவம் -

  நல்ல விஷயம்தான். ஆனால் மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சிறிதும் கடலில் கலக்காமல், மேட்டுரிலிருந்து ஒவ்வொரு 20 கி.மீ தொலைவிலும், பல தடுப்பணைகளை கட்டியிருக்கலாமே. கலைஞர் இதை செய்திருந்தால், அது பெரிய சாதனையாக இருந்திருக்கும்.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழல் செய்யாமல் கட்டப்பட்டவை எத்தனை என குறிப்பிடவும்

 • TamilArasan - Nellai,இந்தியா

  Kolam, kutta, kaalvaai vettoyathai ellaam dam ru ethukku alanthu viduringa...? Ivar saathanai ellaam theruvukku theru saaraaya kada theranthathuthaan micham...

 • Anandan - chennai,இந்தியா

  திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லைனு பொய் செய்தி பரப்பின மூடர்கள் எங்கே? ஜெயலலலிதா தான் சிறந்த முதல்வர் சொன்னவாங்க அவர் இதுபோல எத்தனை செய்துள்ளார் எத்தனை மின் திட்டங்களை செய்துள்ளார் என சொல்ல முடியுமா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அணைகளை ஒப்பிட்டால் இவைகளை அணை என்று சொல்லவே முடியாது... ஒப்பில்லா தேசியவாதியை ஒரு சாதாரண பிரிவினை வாதியிடம் ஒப்பிடுவது தவறு...

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  பெரியவர் போய்ச்சேர்ந்துவிட்டார் என்பதற்காக பொய் சொல்லுவதில் ஒரு அளவில்லையா? இதனை அணைகள் கட்டும் தொலைநோக்கு பார்வை உள்ளவரா காவேரி விஷயத்தில் கோட்டை விட்டார்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கப்பா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement