Advertisement

போலீஸ் செய்திகள்

நால்வர் மீது வழக்கு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை திரைப்படம், மின்னனு ஊடகவியல் துறை தலைவர் பேராசிரியர் கர்ணமகாராஜன். இத்துறையின் மூன்றாமாண்டு மாணவர் சிலர் பேராசிரியர் குறித்து மின்னஞ்சல், அலைபேசி வாயிலாக அவதுாறு பரப்பினர். பேராசிரியர் புகார்படி மூன்று மாணவர்கள்,நாகமலை கவிக்குயில் தெருவை சேர்ந்தராஜ்குமார்,48, ஆகியோர் மீது நாகமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுவர் இருவர் பலி
மதுரை: வண்டியூரை சேர்ந்தவர் முத்துவீர கணபதி, 16. அனுப்பானடியை சேர்ந்தவர் அருண்குமார்,16. இவர்கள் பிளஸ் 1 மாணவர்கள். நேற்று மதியம் 12:45 மணிக்கு நண்பர்கள் பத்து பேருடன்ஆண்டார் கொட்டாரம் குவாரியில் தேங்கிய மழை நீரில் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாத முத்துவீர கணபதி, அருண்குமார் குவாரிக்குள் இறங்கி குளித்தபோது பள்ளத்தில் சிக்கி பலியாகினர். அனுப்பானடி தீயணைப்பு குழுவினர் அவர்களது உடல்களை மீட்டனர்.
தலைமறைவு கைதி கைதுகொட்டாம்பட்டி : வஞ்சிநகரம் பழனிச்சாமி மகன் குழந்தைவேலு, 45. கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக 1987 முதல் மதுரை சிறையில்தண்டனை அனுபவித்து வந்தார். 1998 தங்கை திருமனத்திற்காக பரோலில் வந்தவர் சிறைக்கு திரும்பவில்லை. போலீசார் தேடினர். கொட்டாம்பட்டியில்பதுங்கி இருந்தவரை தனிப்படை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, எஸ்.ஐ., க்கள் சேதுராமன், அழகர்சாமி கைது செய்தனர். தலைமறைவாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைவேலு சிக்கினார்.
7 பவுன் நகைகள் திருட்டுதிருமங்கலம்: காமராஜபுரம் சுப்பையா, 45. பலசரக்கு கடையில் பணிபுரியும் இவர், குடும்பத்துடன் சாத்தங்குடி புள்ளமுத்துார் கோயிலுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சென்ற இவர் நேற்று மாலை வீடு திரும்பினார். பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த ஏழு பவுன் நகைகள், 700 ரூபாய் திருடு போனது தெரிந்தது. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2வது திருமணம்: தந்தை, மகன் மீது வழக்குதிருமங்கலம் : குறிஞ்சிநகர் செல்வமீனா, 26. இவருக்கும் பரவை ஓய்வு பெற்ற எஸ்.ஐ., சந்திரன் மகன் பாண்டிமுருகனுக்கும், 30, 2015ல் திருமணம் நடந்தது. சிறிது காலம் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பாண்டிமுருகன் மனைவிக்கு தெரியாமல் குருலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதுகுறித்து செல்வமீனா திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து பாண்டிமுருகன், தந்தை சந்திரன், தாயார் வசந்தி, சகோதரி முத்துலட்சுமி, குருலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
விபத்தில் மூதாட்டி பலிதிருமங்கலம் : அண்ணாநகர் மூதாட்டி வெள்ளைத்தாய், 80. பிற வீடுகளில் வேலை செய்து வந்த இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பணிக்கு சென்றார். சோழவந்தான் ரோட்டை கடந்த போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலிஅலங்காநல்லுார் : மதுரை தத்தனேரி கூலித்தொழிலாளி அருண்குமார், 24. இவர் நேற்று முன் தினம் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) அலங்காநல்லுார் - பாலமேடு ரோட்டில் சென்றார். சின்னஊர்சேரி அருகில் எதிரே மற்றொரு டூவீலரில் வந்த வினோத்குமார்(ெஹல்மெட் அணியவில்லை) அருண்குமார் டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி சீட்டு: ஒருவர் கைதுஉசிலம்பட்டி: இங்கு அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின்படி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். நந்தவனத்தெருவில் லாட்டரி சீட்டுகளை விற்ற ஞானமுருகனை, 49, கைது செய்தனர். இவரிடமிருந்து 15 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை கைப்பற்றினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement