Advertisement

மும்பை சிறையில் அடைக்கப்படுகிறார் மல்லையா

லண்டன்:வங்கிகளில் 9,600 கோடி ரூபாய் கடன் வாங்கி பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில் அவரை மும்பை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக செப்.12ல் பிரிட்டன் கோர்ட்இறுதி உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.


கர்நாடகாவைச் சேர்ந்த மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா. 'கிங்பிஷர்' விமான சேவை நிறுவனம் துவங்க பல்வேறு வங்கிகளில் 9,600 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார்.

நாடு கடத்த தீவிரம்மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இருதரப்பு இறுதி வாதங்களை செப்., 12க்குள் முடிக்க லண்டன் நீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.மல்லையாவை நாடு கடத்தினால் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும், போதிய வசதிகள் அங்கு உள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதி, எம்மா அர்புத்னாட் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த சிறையில், போதிய வசதிகள் இல்லை என்றும், காற்றோட்டம் இல்லை என்றும் மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமின் நீட்டிப்புமல்லையாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12ம் எண்ணுள்ள அறையை வீடியோ எடுத்து, மூன்று வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த வழக்கு செப்., 12க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மல்லையாவுக்கு ஜாமின் நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.நீதிமன்றத்துக்கு வெளியே மல்லையா கூறியதாவது:சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. வங்கி பணத்தை நான் திருடியதாக கூறப்படுவது முழு பொய். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

'மோசடி எண்ணம் கிடையாது'வங்கி மோசடி தொடர்பான வழக்கில் மல்லையா தரப்பு வழக்கறிஞர்கள் குழுவுக்கு கிளேர் மான்கோமெரி தலைமை வகிக்கிறார். இந்த குழு மல்லையாவுக்கு எதிராக இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வருகிறது.மும்பை ஆர்தர் சாலையில் மல்லையாவை அடைக்க உள்ளதாக கூறப்படும், 12ம் எண் அறையின் சில புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சிறைத் துறை நிபுணர் டாக்டர் ஆலன் மிச்செல் மூலம் ஆய்வு செய்து மல்லையா தரப்பு வழக்கறிஞர்கள் அறிக்கை பெற்றுள்ளனர்.அதன் அடிப்படையில், 'ஆர்தர் சாலை சிறையில் காற்றோட்டம் உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை' என வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர்.இதேபோல் பல நிபுணர்களின் அறிக்கைகளை சாட்சியங்களாக பெற்று அவற்றின் அடிப்படையில், 'மல்லையாவுக்கு மோசடி செய்யும் எண்ணம் இல்லை; இந்தியாவில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பில்லை' என நிரூபிக்கும் முயற்சியில் மல்லையா தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • spr - chennai,இந்தியா

  "மல்லையாவுக்கு மோசடி செய்யும் எண்ணம் இல்லை இந்தியாவில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பில்லை" அடைப்பு பாவிங்களா ஏண்டா இப்படிப் புளுகிறீங்க போபார்ஸ் கேசுலேர்ந்து 2Gவழக்கு,மாறன் மேக்ஸீஸ் லல்லு, எடியூரப்பா என பட்டியல் நீண்டுகிட்டே போவுதே ஏதிலானாச்சும் நாங்க குத்தவாளியை தண்டிச்சிருக்கோமா நாயைச் சுட்றதானாலும், சாட்சியம் வைச்சுத்தான் சுடுவோம் சாட்சியைக் கலைச்சுட்டு நாங்களே தகுந்த சாட்சியங்கள் இல்லேன்னு சொல்லி விடுதலையும் செய்வோம் என்ன மோடிக்கேத்த மூடியா இல்லயில்லயே திரிமூர்த்தி கிட்டே சரணடைஞ்சா எல்லாம் சரியாயிடும் இந்த நாட்டிலே தப்பிக்க முடியலேன்னா வேறெந்த நாட்லே முடியும்? மடப்பய மவன் சரீன்னுட்டு வந்து"காட்றதைக் காட்னா, பெத்துக்கறது சுலபம்னு" சொன்ன பெரியவங்க வாழ்ந்த நாடு புரியாம பேசறான் ஆனா எனக்கென்ன புரியலேன்னா நம்மளை பத்தி இவ்வளவு தூரம் நமக்கே தெரிஞ்சப்புறமும் இந்த ஆளைக் கொணாந்து என்னத்துக்கு செலவு. அதான் சொத்தைப்புடுங்கலாம்னு சட்டம் போட்டாச்லே வித்தாமா காசைப் பாத்தோமா அப்படினு முடிக்க வேண்டாமா விசாரணை அது இதுன்னா தப்பிச்சுடுவாங்களேடா. ஏதோ அந்தப் பொம்புளே மாட்டிக்கிட்டான்னா எல்லாருமா சிக்குவான்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  செப்டெம்பர் 12 ம் தேதி பாக்கலாம், என்ன நடக்குதுன்னு . அதுக்குள்ளே "மும்பை சிறையில் அடைக்கப்படுகிறார்" ன்னு குதிக்க வேண்டாமே.. இந்தியாவில் கார்ப்பரேட் கிரிமினல்களும், அரசியல் கொள்ளையர்களும் எப்படி காலம் தள்ளுகிறார்களான்னு ஆண்டாண்டுகாலமாக பார்த்த வெறுப்பில் சொல்கிறேன்.

 • bal - chennai,இந்தியா

  மால்யா சொல்கிறார்...மும்பை சிறையில் காற்று வசதி இல்லயாம்....இவருக்கு சிறையில் அடிக்கும்போது பங்களா கொடுங்கள்....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //sankar - trichy,இந்தியா:: நடந்தால் பிஜேபிக்கு ஒட்டு போடுவீர்களா// அதுக்கும் ஓட்டு போடறதுக்கும் என்ன சம்பந்தம்?? இங்கே உங்கள் கட்சி ஆட்களின் வார்த்தைகளே போதும், பீஜேபீகாரனே தன்னை பீஜேபீ என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிற அளவுக்கு எழுதறாங்களே

 • JothiLingam -

  vivasayi bankla panam vangunavana panam kattalana AC roumlaya poduringa Enna Intha sattam

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  லலித் மோடி புண்ணியம் செய்தவரா அவர் மேல் நடவடிக்கை எப்போ

 • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

  நடந்தால் உலக அதிசயம்தான் .

 • Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா

  இங்கு கருத்து கூறுபவர்கள் மல்லையாவுக்கு எதிராகவும், வங்கிகளுக்கு ஆதரவாகவும் கருத்து கூறுகிறார்கள். உண்மையில் இந்த வங்கிகள் உங்களை கேட்டுகொண்டா அவருக்கு கடன் கொடுத்தார்கள், இல்லை மல்லையா வங்கியில் திருடி கொண்டு ஓடினாரா. வங்கி அதிகாரிகள் கூடிய வரை கையூட்டு வாங்கிக்கொண்டு அவ்வளவு பெரிய தொகையை கொடுத்தார்கள். தற்போது ஒன்றும் தெரியாது போல் இருக்கிறார்கள் இதே உங்கள் மகனுக்கோ மகளுக்கோ கல்வி கடன் கொடுத்தால் என்னென்ன செய்யவார்கள் தெரியுமா. இவர்களுக்கு அனுதாப படுவதை விட மல்லையாவுக்கு அனுதாப படுவது நல்லது.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  உள்ளே தள்ளவேண்டியது மல்லையாவை அல்ல. மல்லையாவுக்கு கடன்கொடுத்த பேங்க் மேனேஜர்கள், பேங்க் நிர்வாக தலைமைகள் என்ற பெயரில் திரியும் கமிஷன் ஏஜன்ட்களை. கடன்கொடுங்கள் என்று ரெகமண்ட் செய்த அரசியல்வாதிகளை அதிகாரிகளை. விஜய் மல்லையா வாயை திறந்தால் பலபேருக்கு சங்கடம்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  என்ன கேட்டா இவரை UKல இருக்கற சிறைல அடைக்க முடியும்னா அதை பண்ணனும்... இங்க ஆட்சி மாறிச்சுன்னாலும் சரி, இல்ல உள்ள இருக்கற ஆட்கள் விலைக்கு போனாலும் சரி, இவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அடையமாட்டார்கள்... அங்கல்லாம் இந்த மாதிரி ஏமாத்த முடியாது...

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  நமது சிறையின் சௌகரியங்கள் மற்றும் குறைகளை கேட்க அவர்கள் யார்? காலனி ஆதிக்க எண்ணம் இன்னும் மாறவில்லையா? மல்லையா இந்தியாவின் குற்றவாளி. அவரை விசாரிக்க இந்திய நீதிமன்றங்களுக்கு அருகதை உண்டு. அதற்க்கு அவர் இங்கு வர வேண்டும். அத்துடன் இங்கிலாந்து நீதிமன்றங்களின் பணி முடிய வேண்டும். விட்டால் இந்திய சட்டங்களே மல்லையாவை பொறுத்தவரை செல்லாது என்பார்கள் போலிருக்கிறது. நமது நாட்டின் வசதிக்கேற்ப நமது சிறைச்சலைகள் இருக்கும். அதன் விவரங்களை கேட்பதற்கு இவர்கள் யார்? யார் இவர்களை உலகத்தின் காவல்காரராக நியமித்தது? இது அடுத்த நாட்டின் மாண்பை குறைப்பது ஆகாதா? மல்லையாவை அனுப்ப முடியாது என்று சொல்லட்டுமே பார்க்கலாம்? இந்த தீர்ப்பை எதிர்த்து உலக நீதிமன்றத்திற்கு செல்வதுதான் சரியாக இருக்கும்.

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  மதுரை கக்கூஸ் கொசு கடி ஜெயில்ல போடுங்க.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  திகார் ஜெயிலில் அடையுங்கள் அது தான் சரியான தீர்வு

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இதுபோல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தவறு செய்து பாஜகவுக்கு பயந்து ஓடி போன நீரவ் சுஷில்குமார் மோடியை இந்தியா கொண்டு வந்து தண்டிக்க வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மீண்டும் பாஜக ஆட்சி வருவது தான் நல்லது இல்லை என்றால் மல்லையா போன்றவர்களின் ஆட்டம் இன்னும் அதிகரிக்கும் இவர் எம்பீ ஆனது மத சர்ர்பற்ற ஜனதாதளம் சார்பில் தான் அதாவது கர்நாடக முதல்வர் குமாரசாமி கட்சி

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நல்ல கக்கூஸ் வேண்டுமாம் ,பிறகு இயற்கை வெளிச்சம் வேண்டுமாம் , கொடுத்து விடுங்கள் . பிறகு பார்க்கலாம்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  குற்றவாளிகளை விட அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞர்களே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணம்.

 • Jayanthi Srinivasan - chennai,இந்தியா

  ஜாமீன் கிடைத்துவிடுமோ??? வெளில வந்திடுவாரே

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  நீரவ் மோடியும் இவனும் பிடிபட்டு கம்பி எண்ண ஒரே வாய்ப்பு இந்த மோடி அரசால் மட்டுமே முடியும் ... அந்த திராணி இவர்களிடம் தான் உண்டு ... வேறு ஆட்சியில் இவர்கள் பிடிபட சாத்தியமே இல்லை ..இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் .....

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  அவன் லண்டன் ஓடிப்போனப்ப எத்தனை வாய்கள் மோடியை திட்டியது? என்னமோ மோடிதான் டிக்கெட் எடுத்து அனுப்பிச்சமாதிரி.. அவன் கடன் வாங்கியது காங்கிரஸ் ஆண்ட போது.. வங்கிகள் கடனை வசூலிக்க வழக்கு பதிந்தது. சட்டப்படி அவன் பாஸ்போர்ட் வைத்திருந்தான்.. கோர்ட்டில் 420 வழக்கு நிலுவை. எந்த பயண கட்டுப்படும் இல்லை.. அந்த நிலையில் சமயம் பார்த்து கம்பி நீட்டிவிட்டான்.. அதற்கு மோடி என்ன செய்யமுடியும்? ஒவ்வொரு கோர்ட் மற்றும் ஏர்போர்ட் வாசலில் காவலுக்கா மோடி நிற்க முடியும். எல்லாவற்றிக்கும் சட்டப்படி நடைமுறை உள்ளது. அதன்படி மோடி அரசு செயல்படுகிறது.. மோடி அரசின் நோக்கம் நல்ல நோக்கம். எல்லா முயற்சிகளும் வெற்றி ஆக முடியாது. சில சமயம் தோற்கலாம். ஆனால் அரசின் நோக்கம் நல்லதாக நாட்டைப்பற்றியதாக இருக்க வேண்டும்.. கான் + கிராஸ் அரசின் நோக்கம் பற்றி கேக்க தேவையே இல்லை.. நமது டூமில்காவலருக்கு மோடியை திட்டவேண்டும். சிறுபான்மை ஓட்டு கிடைக்கும்.. செய்ங்கடா.. மோடியின் நோக்கம் நல்ல நோக்கம் ஆண்டவன் நிச்சயம் அவர் பக்கம் நின்று உதவுவார். ஜைஹிந்.. அன்னக்கி மோடியை திட்டின வாயெல்லாம் எங்கயோ ஈரோட்டுப்பக்கம் தூத்துக்குடிப்பக்கம் ஓடி போயிருச்சிக்க போலருக்கு.. அந்த பயம் இருக்கோணும்

 • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

  2019 election Agenda

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  டேய் போங்கடா காமெடி பண்ணாதீங்க....அவரு என்ன விவசாயா? கூலி தொழிலாளியா?...

 • இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காற்றோட்டமான சிறை பிக் பாஸ் வீட்டில இருக்கு போறியா, சமைத்து போட மும்தாஜ் சைட் அடிக்க ஐஸ்வர்யா, யாஷிகா அட்வைஸ் பண்ண கமல். களவாணி பயலுக்கு நட்சத்திர ஓட்டல் வேணுமா???

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  உலகில் வாங்கி கடன் வர நாட்டில் இரண்டாவது நாடு இந்திய..வளர்ந்த நாடுகளில் வாங்கி நடைமுறை செயல்பாடுகள் கட்டுப்பாட்டிலுள்ளது..அந்த நாடுகளின் வராத, கடன் 0.8 % தான்..ஆனால் இந்திய 14 .3 %..அதாவது இந்திய பணக்காரர்கள் பொது மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுகமாக வெளி நாடு சென்று விடுகிறார்கள்..இது எப்படி சாத்தியமும்..?. இதெல்லாம் அரசியல் ஆதரவால் நடக்கிறது.அரசியல்வாதிகள் ஊழல் செய்வதால் இது நடக்கிறது ..இது பகைவர்கள் வெளி நடுரோட்டி விட்டால் அவர்களைவிட்டு வர கோடிகோடியாக செலவு செய்ய வேண்டும்..பணம் போனதோடு அரசு நேரம், பணமும் விரையம் ஆகிறது..இதை தலையை விட்டு வலை பிடிப்பதுபோலுள்ளது..இதனால் மக்களுக்கும் நாட்டிற்கு எந்த நமமையும் இல்லை..மல்லையா கணடகாவிலிருந்த்து ராஜ்யசபாயம்.பி ஆனார்..எப்படி ஆனார்..?. கர்நாடக எம்.எல் ஏ ஒவ்வொருவருக்கும் 5 கோடி கொடுத்து ஜெயித்தார்..பின் இவர் அரசின் பேங்க் கமிட்டியில் உட்கார்ந்தார்..பின் என்ன ..வங்கிகளை தன் இஷ்ட்டம் போல் ஆட்டிவைத்தார்..இப்படி பட்ட சிஸ்ட்டத்தை வைத்து என்ன பண்ண முடியும்..?. மக்கள் விழியுணர்வு பெற வேண்டும்.. நாட்டி ஆளும் எம்.எல் ஏ க்களே பணம் வாங்கி ஒட்டு போட்டால் நாடு என்னாகும்..?. இதுதான் நடக்கும்...

 • tamil - coonoor,இந்தியா

  அவர் இங்கேயே இருந்துகொண்டு வழக்குகளை சந்தித்து இருக்க வேண்டும், வியாபாரத்தில் லாபம் நஷ்டம் சகஜம், இது அவருக்கு தெரியாத விஷயம் இல்லை, இவரை விட அதிக நஷ்டத்தை சந்தித்து வருகிறார் அணில் அம்பானி, அதை பல்வேறு வழிகளில் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், வங்கிகளின் உதவி இல்லாமல் எந்த ஒரு தொழில் அதிபரும் ஜெயித்து விடமுடியாது, இவர் வங்கிகளை முழுமையாக நம்பி தனது கடனை அடைக்க முயற்சி செய்திருக்க வேண்டும், இவர் நாட்டை விட்டு ஓடியது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகிவிட்டது,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்போ அவரை அடைக்கும் சிறை ஐந்து நட்சித்திர ஹோட்டல் அந்தஸ்த்தில் இருக்கும்...

 • Susainathan -

  jail also he have all speciality like his own house then whats the use mallaiya great

 • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

  ஹி ஹி ஹி .. பார்க்கலாம் செப் 12 ம் தேதி..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நல்ல படம்... பக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் ஒரு வெடிச்சிரிப்பை வெளியிட்டு திகிலூட்டுகிறார்.... களி தின்றே ஆகவேண்டும் போல....

 • SaiBaba - Chennai,இந்தியா

  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை பயம் இருந்தாலன்றி தவறுகள் குறைய வாய்ப்பில்லை. இன்று ஏமாற்றி பிழைப்பது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது. நல்லவர்கள், நேர்மையானவர்களுடைய வட்டம் சுருங்கிக்கொண்டே போகிறது. இந்த Vijay மல்லையா ஒரு காலத்தில் எப்படி Deepika படுகோனேவுடன் ஆட்டம் போட்டார். நாட்டின் vvip யாக வளம் வந்தார். திருட்டுப்பட்டம் சுமத்தியும் இவர் அசிங்கப்பட்டதாக தெரியவில்லை. எங்கள் ஊரில் ஒரு பெண்மணி, சிறு வயதில் கணவனை இழந்தவர். அந்த ஒன்றை காரணமாக வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான ஆண்களுடன் வாழ்ந்தார். பணம் நிறைய வைத்துள்ளார். எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் அவருக்கு கிடையாது. ஊரே போற்றுகிறது. இவர்கள் எல்லாம் வருங்கால இளைஞர்களுக்கு கற்பிப்பது என்ன?

 • VSM Ali - anna nagar,இந்தியா

  காற்றோட்ட வசதிகள் செய்து கொடுப்பதற்கு இவன் என்ன தியாகியா ?

 • Kunjumani - Chennai.,இந்தியா

  மல்லையா என்ற பெயரை மாலிக் கான் என்று மாற்றி வைத்துக்கொண்டால் தரமான பிரியாணி, ஐந்து நட்சத்திர விடுதியின் சொகுசு கிடைக்கும். வேண்டாம், வேண்டாம் காவி ஆட்சியில் அது வேண்டாம் என்று சிலர் கூறுவார் அதனால் சின்ன அம்மா சசிகலாவை அணுகவும், ஐந்து நட்சத்திர விடுதி வசதி கிடைக்கும், ஷாப்பிங் போகலாம், சந்தில் சிந்துவும் பாடலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement