Advertisement

" கடனை அடைக்க தயார் "- கருணை எனக்கு தேவையில்லை; மல்லையா

லண்டன்: பல கோடி வங்கியில் கடன் வாங்கி செலுத்தாமல் இருந்து வரும் தொழிலதிபர் விஜயமல்லையா இன்று லண்டன் கோர்ட்டில் ஆஜரானார்.


இவரை ஒப்படைக்க கோரும் இந்தியா தரப்பில் தாக்கல் ஆன மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; நான் ஒன்றும் வாங்கிய கடனை மறைக்கவில்லை. பணத்தை சுரண்டவும் இல்லை. கடந்த 2015 முதல் திருப்பி செலுத்த போதிய முயற்சிகள் எடுத்து வருகிறேன். அனைத்து மீடியாக்களும் என்னை தவறாக சித்தரிக்கின்றன. கோர்ட் எதனை முடிவு செய்கிறதோ அதனை ஏற்று கொள்கிறேன். வழக்கு விசாரணையால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். வழக்குகள் ஏறக்குறைய முடிந்து விட்டன. நான் யாரிடமும் கருணை மனு விண்ணப்பிக்கவில்லை என்றார்.


மேலும் இந்த வழக்கு வரும் செப்12 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மல்லையாவுக்கு 6 வார கால அவகாசம் வழங்கியது.இந்தியாவின் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள சிறை தொடர்பான வீடியோ மற்றும் புகைபபடங்களை ஒப்படைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  யோக்கியன்போல் ப்பேசும் உலகமகா மோசடிப் பேர்வழி இருக்கிறவனெல்லாம் கேனயன் நீமட்டும் கெட்டிக்காரன்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஏலம் விட்டு எல்லா கடன் தொகையும் வந்த பின் சவால் விடலாம்...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட சூப்பர் தல, அதோடு கோர்ட்டில் அப்ரூவராகி, யார் யாருக்கு எவ்வளவு கட்டிங் அமௌன்ட், கடன் வாங்கும் போது ஒதுக்கினீர் என்பதையும் கூறினால், உமக்கு புண்ணியமா போகும் தல. நீயும் ஒரு ரோசக்கார இந்திய மகன்தான் என நிரூபி தல. வங்கிகளுக்கும், ஃபுரோக்கர்களுக்கும் ஒரு பாடமா அமையும் தல. யோசிச்சு சொல்லுங்க தல, உண்மைகளை கோர்ட்டில்.

 • விஜி -

  இந்தியா ல கடனை வாங்கிட்டு அங்க ஓடி போய்டீங்க.. லண்டன் கோர்ட் இந்தியாக்கு ஆர்டர் போடுது.. சட்டத்தை மாத்தனும்..

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  //அனைத்து மீடியாக்களும் என்னை தவறாக சித்தரிக்கின்றன. கோர்ட் எதனை முடிவு செய்கிறதோ அதனை ஏற்று கொள்கிறேன்// அடேங்கப்பா அவ்வளவு யோக்கியமானவராக இருந்தால் உங்களைப்பற்றி தவறானதாக ஒருவார்த்தை வெளிவந்தபோதே அப்படி இல்லை என்பதை நிரூபிக்க இங்கேயே இருந்து கடனை அடைக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து வெளிநாட்டிற்குபோய் தப்பித்து விடலாம் என எண்ணி அது முடியாமல் அரசாங்க நடவடிக்கை எடுத்து வருவதால்தான் இப்போது இப்படி சொல்கின்றிர்கள் உங்களைபோன்றவர்களின் செயல்பாடுகளால் அரசாங்கமே மக்களால் கழுவி ஊற்றப்படுகிறது.

 • Azhagan Azhagan - Chennai,இந்தியா

  அட ரோசம் பொத்துக்கிட்டு வந்துரிச்சிபா. கடனை வசூல் பண்ணிட்டு நல்லா கவனிங்கப்பா

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  இப்போ காங்கிரஸ்காரர்கள் என்ன சொல்லுறார்கள்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  அப்படி போடு தல.... உனக்கு நிகர் நீதான்... உன்னை போல ஆட்கள் தான் இவிங்களுக்கு தேவை.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement