Advertisement

காவேரியும் கண்ணீரும்...


நீண்ட வருடம் கழித்து காவேரியில் கரைபுரண்டு ஒடும் தண்ணீரின் அழகை பார்க்க ஒரு பயணம் மேற்கொண்டேன்.

மேட்டூர் அணையில் இருந்து சீறிவரும் தண்ணீரை முக்கொம்புதான் ஆற்றுப்படுத்தி கொள்ளிடமாகவும்,காவேரியாகவும் மாற்றி பிரித்து அனுப்புகிறது.

அதன்பிறகு கரிகாலன் கட்டிவைத்த பெருமை மிகு கல்லனை அனைத்து தண்ணீரையும் வாங்கிக்கொண்டு சிறு சிறு ஆறுகளாகவும் கால்வாய்களாகவும் பிரித்து அனுப்புகிறது.

இங்கு இருந்து கடலில் கலப்பதற்குள் எத்தனை குளம் குட்டைகள் ஏரிகள் உண்டோ அத்தனையும் நிரப்பிவிட்டு பின்னரே கடலுக்கு செல்லவேண்டும் ஆனால் அப்படியில்லை என்பதுதான் வேதனை.

பெரும்பாலான கால்வாய்கள் துார்வாரப்படவில்லை ஆனால் துார் வாரியதாக ‛அரசாங்க ஆவணங்கள்' சொல்லுகிறது. கான்ட்ராக்ட் எடுத்த அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள் வாரியது துார் அல்ல அதற்கான பணத்தை மட்டுமே என்பது தெளிவாகிறது.

கண்ணுக்கு எட்டிய துாரத்தில் கரைபுரண்டு ஒடும் காவிரி்க்கும் கள்ள பெரம்பூர் ஏரிக்கும் உண்டான இடைப்பட்ட துாரத்தை துார் வாரியிருந்தால் ஏரி நிரம்பியிருக்கும். ஒரு முறை இந்த ஏரி நிரம்பிவிட்டால் பிறகு ஓரு வருடத்திற்கு சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு விவசாயத்திற்கோ குடிநீருக்கோ பஞ்சம் கிடையாது இருந்தும் அந்த சிறு கால்வாயை துார்வாரவில்லை.

கள்ள பெரம்பூர் ஏரி ஒரு உதாரணம்தான் இது போல நுாற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் குட்டைகளும் கால்வாய்களும் புதர்மண்டிப்போய் பக்கத்தில் தண்ணீர் இருந்தும் தங்களுக்கு அது வரவிடாமல் செய்துவிட்டார்களே என்ற கண்ணீருடன் காணப்படுகிறது.

இயற்கை அன்னை தன்னை இந்த மனிதர்கள் எவ்வளவு அவமதித்த போதும் அது அத்தனையையும் தாங்கிக்கொண்டு தனது கடமையான மழையைக் கொடுத்து ஆற்றை நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறது ஆனால் மனிதர்கள்தான் எங்கே இங்கேயேல்லாம் தண்ணீர் வரப்போகிறது என்று அலட்சியம் கொண்டதன் விளைவே கால்வாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் செல்லாத நிலை.

எத்தனை எத்தனை குப்பைகள் உண்டோ? அத்தனை குப்பைகளையும் கொட்டுமிடம் காவேரி ஆறு என்றாகிவிட்டது.குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி ஆற்றை கழிப்பறையாகவும் மாற்றும் மனசாட்சியே இல்லாத மாமனிதர்களும் நிறைய பேர் இருக்கின்றனர் என்பதை காவேரி கரையோர பயணம் எடுத்துக்காட்டியது.

காவிரித்தாய் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை தான் தடையின்றி வாரி வழங்கும் அன்பை பாசத்தை ஈடில்லா நீரை வாங்கி வைத்துக்கொள்ளும் ஏரி குளங்களை இப்போதாவது துார்வாரி சேமித்து பழகுங்கள் என்பதுதான்.

எல்.முருகராஜ்

-murugaraj@dnamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • nicolethomson - bengalooru,இந்தியா

  வீராணம் ஏரியாவது நிரம்புமா? நிரம்பவில்லை என்றால் வரும் கோடையில் சென்னைக்கு அல்வா என்று கூறி பாருங்க,

 • Mohamed Wahid - Salem,இந்தியா

  அரசாங்கம் என்பது வெறும் பத்து சதவிகிதம்தான், மக்களாகிய நாம் மீதி தொண்ணுறு சதவிகிதம். ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, ஒருநாள் போதும் ஏறி சுத்தம். குற்றம் சொல்லுவதை விட்டு விட்டு நம் வீட்டை எப்படி தூய்மை யாயி வைத்துள்ளோமோ, அதே போல் தெருவையும் நாட்டையும் சுத்தமாக வைப்போம்.

 • bal - chennai,இந்தியா

  கிணறு வெட்டியாச்சு என்று கையெழுத்து கொடுத்தார்கள்...கிணறே இல்லை...அதுதான் உண்மை.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //நுாற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் குட்டைகளும் கால்வாய்களும் புதர்மண்டிப்போய் பக்கத்தில் தண்ணீர் இருந்தும் தங்களுக்கு அது வரவிடாமல் செய்துவிட்டார்களே// அதுக்கென்ன, இதையெல்லாம் தூர் வார ஒரு 400 கோடி திட்டம் போட்டு, நாளைக்கே கொள்ளையடிச்சிடுவோம்... அப்புறம் எங்கே என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க.. அதுக்கும் போட்டு வழிச்சிடுவோம்.

 • Darmavan - Chennai,இந்தியா

  இதை படித்து யார் திருந்த போகிறார்கள்.எல்லாவற்றுக்கும் காரணம் உணர்ச்சிவசப்பட்ட இந்த தமிழ் கூட்டம் போடும் தவறான ஓட்டுகள்தாம் என்பது அறிவுள்ள எவனுக்கும் புரியும் .என்று இந்த கூட்டம் ஜாதி மதம் பார்த்து திராவிடக்கட்சிகளுக்கு ஒட்டு போட்டதோ அன்று பிடித்த இந்த சனி இன்னும் விடவியலை.இதனால் இந்த திராவிடத்தை ஆதரிக்காதவனும் பாதிக்கப்படுகிறான்.இந்த கூட்டம் திருந்தாத வரை இந்த புலம்பல் தொடரவேண்டியதுதான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement