Advertisement

கறைபடிந்த வெற்றி: நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் பெற்ற வெற்றி கறைபடிந்தது என, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறி உள்ளார்.
பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆனால் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 63 இடங்களே பெற்று உள்ளது.
பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள, முன்னாள் பிரதமர் மந்திரி நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் திருடப்பட்ட, கறைபடிந்த , சந்தேகத்திற்குரிய முடிவுகள் நாட்டின் அரசியல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement