Advertisement

சிறை செல்வதை தவிர்க்க மல்லையா புதிய திட்டம்

லண்டன் : வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை இந்தியா அழைத்து வர அமலாக்கத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்தியா திரும்பி வர மறுத்ததுடன், தேர்தல் நெருங்குவதாலேயே தன்னை இந்தியா அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.


இந்நிலையில் தற்போது, இந்தியா திரும்ப விரும்புவதாகவும் கடன்களை அடைப்பதற்கான திட்டம் வகுக்கத் தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விஜய் மல்லையா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டன் கோர்ட்டில் நடந்து வரும் விஜய் மல்லையா மீதான வழக்கின் விசாரணையில், இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இது மல்லையாவுக்கு எதிராக அமையும் பட்சத்தில், அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


இதனைத் தவிர்ப்பதற்காகவே விஜய் மல்லையா இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தால் லண்டனை விட்டு வெளியேற்றப்பட்டு, விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட்டால் அவர் சிறையில் அதிக நாட்கள் இருக்க வேண்டியிருக்கும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறை செல்வதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (38)

 • Ganthi - chennai,இந்தியா

  திருட்டு பய அவன் , இதுல வேற பேச்சு வார்த்தை . இவனுக்கு மட்டும் சட்டம் வளைகிறது . சாமான்யனுக்கு சட்டம் வேகமாக பாய்கிறது......

 • ராமையா -

  தெய்வமே! நீ உள்ள இருந்தாலும் வெளிய இருந்தாலும் 2019 கேலண்டர் ரிலீஸ் பண்ணிடு உணக்கு புன்னியமா பூடும்

 • bal - chennai,இந்தியா

  என்ன திட்டம்?? காங்கிரஸ் அல்லது திமுக வில் சேர்வதா?? கண்டிப்பாக தப்பித்துக்கொள்ளலாம்.

 • bal - chennai,இந்தியா

  இந்தியாவுக்கு வந்தால் நிச்சயம் இது சாத்தியம்...சிறை செல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்...அறிவுரை வேண்டும் என்றால் சிதம்பரம் மற்றும் கட்டுமர குடும்பத்தை அணுகவும்.

 • bal - chennai,இந்தியா

  இந்தியாவுக்கு வந்து விட்டால் சிறைக்கே செல்ல வேண்டாம்...எப்படி சிதம்பரம் ஜாமின் வாங்குகிறாரு எப்படி கட்டுமரம் குடும்பம் டபாய்கிறது...அது மாதிரி டபாய்க்கலாம்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  இந்தியர்கள் தலையில் எவரும் இலகுவாக மிளகாய் அரைக்கலாம் ..டாஸ்மாக் நாட்டு குடி மக்கள் ..கபாலத்தில் இன்னும் விரைவாக எந்த மாநிலத்தவனும் மிளகாய் அரைக்கலாம் ....எங்கள் உயிர்... குவார்ட்டர் ....பிரியாணி ..ரூபா 20

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நல்லவர்கள்... அவர்கள் மோடிக்கு எதிராக பேசுவதற்கு காரணம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் விதைத்த நமிபிக்கையின்மை... சட்டம் தன் கடமையை செய்யும், அரசியல்வாதிகள் நியாயமாக மக்களுக்காக நடப்பார்கள் என்ற நம்பிக்கை விதைக்கப்படவேண்டும்... அதை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது... தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் எல்லார் மனத்திலும் தோன்ற ஆரமித்துவிட்டது... இது அடுத்த 5 வருட மோடி ஆட்சியில் நன்றாகவே தெரியும்... அப்பொழுது பெரும்பான்மையானோர், தேசவிரோதிகள் தவிர்த்து, எல்லோரும் பிஜேபியை ஆதரிப்பார்கள்...

 • பாரதன். - ,

  இந்திய வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீரழிக்க முயன்ற முதல் தேச விரோதி இவர்தான்.

 • Anand - chennai,இந்தியா

  சிறை தண்டனைக்கு மாற்றாக தூக்கு தண்டனை தான் இவனை போன்றவர்களுக்கு உகந்தது.

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  விதி வலியது. காங்கிரஸிடம் முறைகேடாக பலன் அனுபவித்த மல்லையா நம் பாரத பிரதமர் மோதியிடம் மண்டியிட்டே ஆகவேண்டும். - இது மல்லையாவின் விதி...

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  மல்லையா சொத்துக்களை அரசுடமையாக்கினால் அவர் கடன் போக மீதம் இருப்பது கருணாநிதி மற்றும் சிதம்பரத்தின் சொத்துக்களே அவைகளை அரசுடமையாக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். மேலும் உங்களிள் கோபம் நியாயமானதாக தென்படுகிறது மோடி அவர்களிடம் நியாயமான அதிகாரிகள் இருந்தால் கலைஞர் டி.வி க்கு வந்த வங்கி பணம் கூட சரியா என்பதுதான் எனது கேள்வி

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  லண்டன் கோர்ட்டு தீர்ப்பு சொல்வதற்கு முன் கடன் தொகைக்கு சமமாக உங்களிடம் உள்ள அசையும் அசையா சொத்துக்களை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். பிறகு வழக்கை வாபஸ் பெறுவார்கள்.

 • HSR - Chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சிக்கு வரவில்லையென்றால் இவனும் இன்னும் எத்தனை பேரோ , கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்திருப்பார்கள்.. மோடி வந்ததால் ஓடிவிட்டான். விடுவாரா எங்கள் மோடி.அது எப்படிடா எல்லா திருடர்களும் பிஜேபி ஆட்சியில் மட்டும் மாட்டுறானுங்களோ ? யாராவது யோசித்தீர்களா?

 • Dhar G S - Chennai,இந்தியா

  எவ்வளவு பணம் இருந்தாலும் சொந்த பிறந்த மண்ணில் இறப்பதற்கு கொடுத்து வைக்க வில்லை என்றால் அவன் பிறந்தும் சம்பாதித்ததும் உபயோகமில்லை. ஒருவன் ஏழையாக பிறந்தாலும் சொந்த மண்ணில் உயிர் துறந்தால் அவன் உயர் பதவியை அடைந்தவன் ஆகிறான். இது மக்களுக்கு எங்கே புரியப்போகிறது. இந்த மண்ணில் ஏமாற்றி அடுத்த நாட்டில் ஓடிப்போய் இறப்பவன் ஒரு அனாதை. அவன் வாழந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  மொள்ளமாரிகளையும் முடிச்சவுக்கிகளையும் அவன் சுருட்டினதை கொடுத்துட்டா நல்லவன் என்று விட்டு விடலாமா? தண்டனை எவ்வளவு சுருட்டினாய் என்பதற்கு அல்ல. ஏன் சுருட்டினாய் என்பதற்கு தான். பணத்தையும் கட்டி களியும் கொஞ்சம் தின்னால் தான் உனக்கு அதப்பு கொஞ்சம் அடங்கும். அப்படியே நிக்க வச்சு காட்டு காட்டுனு காட்டும்போது தான் பாவத்திற்கு கிடைக்கும் பரிசு எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  வாடி வா...அப்படி வா வழிக்கு....பெரிய யோக்கிய கணக்கா சவடால் பேசின.....வாடி வா...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தொடர்ந்து மோடிஜி ஆட்சியில் வந்தால் கருப்பு பணம் வைக்க நினைப்பவர்களுக்கு திண்டாட்டமாய் போய் விடும் அதனால் எப்பாடுபட்டாவது மோடிஜியை தோற்கடிப்ப நினைப்பார்கள் மக்கள் தான் இதை முறியடிக்க வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இவரை போல் பாஜகவுக்கு பயந்து ஓடிய நீரவ், சுசில் மோடிகளையும் இந்தியா கொண்டு வந்து சட்டத்தில் முன் நிப்பாட்ட வேண்டும்.

 • Murugan - Mumbai

  கருப்பட்டி கடன் கொடுத்தவன் காங்கிரசுகாரன் தப்பிக்கவிட்டது பாசக கட்சிக்காரன் இரண்டுமே திருடர்கள் கூட்டம் தான் சரிதானே

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  மல்லையா பற்றிய இதுபோன்ற செய்திகள் இனிமேல் அடுத்து ஆறு ஏழு மாதங்களுக்கு மாதம் இரண்டு முறை அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கும்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  மல்லையா போன்ற இவர்கள் கடைந்தெடுத்த வர்த்தக பண முதலைகள். சட்டத்தில் எங்கு எல்லாம் ஓட்டை இருக்கிறதோ அதை எல்லாம் நன்கு ஆராய்ந்து அதை பயன் படுத்தி வாழ்நாள் முழுவதும் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். நம் நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் எல்லாம் பண பலம் அதிகார பலம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது மாறாக மக்களுக்காக அல்ல.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மல்லையா பணமோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிவிட்டார், என்ற முதல் வரி மட்டுமே தமிழ்நாட்டில் பிரபலமாக ஒலித்த, இன்றும் ஒலிக்கும் வார்த்தை.... அதை தொடர்ந்து மல்லையா பற்றிய வழக்குகளோ மல்லையாவின் நிலமையோ, அல்லது சமீபத்தில் மல்லையாவின் லண்டன் கைது & அவருடைய அப்பீல் நிராகரிப்பு என முழுவதையும் அறிந்தால் நிச்சயம் நீங்கள் மோதியை பாராட்டாமல் இருக்க முடியாது.... கடனை கட்டிவிடுகிறோம் தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள். தினமும் ஏராளமான வருமானத்தை இழந்து வருகிறோம். என நிரவ்வின் நிறுவனம் கெஞ்சுகிறது.... மோதி தரப்பு : ம்ஹூம்...ஓடிப்போன உங்க மொதலாளியை வரச்சொல்லுங்க மிச்சத்தை அப்றமா பேசிக்கலாம் என்கிறது.... மல்லையாவோ லண்டன் நீதிமன்றத்தில் கெஞ்சுகிறார்... கட்டவேண்டியதில் இன்னும் ஓரளவுதான் பாக்கி இருக்கு, இதுக்காக உலகம் முழுக்க உள்ள என் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கிறது பாரத அரசு, அதை விலக்கிட வேண்டி செய்த மேல்முறையீட்டையும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்.... மோடி அரசின் அழுத்தம் காரணமாக நோக்கியா நிறுவனம் சொத்துக்களை விற்று 1600 கோடிகளை கட்டிவிட்டது, என்பதையும் நினைவு படுத்துகிறேன்.... கூடுதலாக இன்னொரு செய்தி இந்திய வரலாற்றில் மோடி மட்டுமே அம்பானிக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதித்து வசூலித்திறுக்கிறார்.... அப்பறம் மோடிதான் அவர்களுக்கு கடன் கொடுத்தார்னு ஊளையிட்டு கொண்டு தறுதலைகளுக்கு சொல்றேன், அவர்களோடு பலரும் 6.5 லட்சம் கோடி அளவில் கடன் பெற்றதெல்லாம் மன்மோகன், சிதம்பரம், ரகுராம்ராஜன் கூட்டனியிடம் அதாவது காங்கிரஸ் ஆட்சியில்..... மோடி கறாராக வசூல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்.... ஏன் பாஜக 23வது மாநிலமாக தொடர்ந்து ஜெயிச்சிட்டு இருக்குனு இன்னமும் உங்களுக்கு தெரியாதுல்ல..... மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களை வடநாட்டு மக்கள் அறிந்து கொண்டதனால்... நீங்க இன்னும் திராவிட அரசியல் வியாபாரிகளின் ஊளைகளையே நம்பி கொண்டிருங்க ... வெளங்கிரும் தமிழ்நாடு

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கடன் குடுத்த காங்கிரெஸ்க்காரன் ராகுல் நல்லவன்னு முட்டுகுடுக்கறான் டுமிலன்,....மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப செய்த மோடி கார்ப்பரேட் கைக்கூலியாம்.. மூளையை யூஸ் பண்ணுங்கடே

 • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

  மல்லையாவை சிறைக்கு அனுப்புவதைவிட அவர் திருப்பி செலுத்த வேண்டிய கடனை வசூலிப்பது மிகவும் முக்கியம்.

 • jeeva - ,

  உன்னோட கம்பேனி பீரை குடிச்சதற்காக நான் வேனா நூறு ரூபாய் தாரேன்...

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  என்ன தாராளமான பேச்சு . அத்தனை வங்கிகளையும் கடன் என்றபேரில் கொள்ளையடித்துவிட்டு இப்போது பேச்சுவார்தை நடத்துகிறாராம் . கட்சி அலுவலகம் கட்ட காசு கொடுத்தால் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து அப்புறம் பேச்சுவார்த்தை. அதான் ராகுல் கிழிச்சி தொங்கபோட்டுட்டுப் போயிட்டார் . இன்னும் ஒத்தடம் போட்டுக்கிட்டு கிடக்குது காவிக்கூட்டம். ஆட்சிமாறினால் காவிக்கூட்டம் எல்லாம் சிறைக்குள்தான் போகும்போலிருக்கு. சிறை பத்துமா என்றுதான் சங்கடப்பட வேண்டியுள்ளது. கிரிமினல் ஆட்சியில் கிரிமினல்கள் பேச்சுவார்தைதான் நடத்துவார்கள்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  காங்கிரஸ் மற்றும் தி.மு.க விற்கு அதிர்ச்சி சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் சந்தித்து தங்களின் குடும்ப சொத்துக்களை பாதுகாக்க வேறு நபரை நியமிக்க திட்டமிட்டார். சிதம்பரம் குடும்பம் அவர்களின் சொத்துக்களையும் மாற்ற மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டது. மல்லையா இந்தியாவிற்கு கொண்டு வந்தால் உரிய விசாரணையில் உண்மை தெரியும் என நம்மலாமா மோடி அரசே அல்லது தேர்தல் நிதி பெற்றுக்கொண்டு. 2G Aircell போலதானா??

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement