Advertisement

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின்படி, காதலனை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, ஜிப்மர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முகேஷ், 25; லேப் டெக்னிஷியன் படிப்பு முடித்து வேலையின்றி உள்ளார். இவர், பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததால், மாணவி மற்றும் வாலிபரை எச்சரித்து, பிரித்து வைத்தனர்.பின், மாணவியை வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். இதை அறிந்த முகேஷ், அங்கு சென்று மாணவியுடன் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில், மாணவியை முகேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம், மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, முகேஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    மாணவியும் தப்பு செய்துருக்கா அவ எப்படி அவனுடன் திரியலாம் அவளுக்கும் தண்டனை கட்டாயம் தேவை தவறுன்னா இருவரும் உடந்தை என்றால் தண்டனையும் இருவருக்கும் தரவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement