Advertisement

"அமோக வெற்றியை தாருங்கள்"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்

கராச்சி: நடக்கவிருக்கும் பார்லி., தேர்தலில் எனக்கு மக்கள் ஓட்டளித்து அபார வெற்றியை தாருங்கள் என ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கேட்டு கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் நாளை 25 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.இதற்கிடையில் ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெ ரீப் உரையாற்றும் வீடியோ ஒன்றை அவரது மகளான மரியம்நவாஸ்சும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில்; 25 ம் தேதி முடிவு கட்டும் நாளாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இது வரை இல்லாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை மக்களாகிய நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நீதி தோற்று விட்டது. நீதியை காப்பாற்ற எனது சிங்கம் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீதிபதி அதிருப்திபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட் நீதிபதி சுக்கூர் சித்திக் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்; பாக்., ஐ.எஸ்.ஐ., நீதி துறையில் தலையிடுகிறது. பத்திரிகை சுதந்திரம் இல்லை. நவாஸ் ஷெ ரீப்பை தேர்தல் முடியும் வரை வெளியில் விடக்கூடாது என நிர்பந்தம் வருகிறது என்றும் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "அமோக வெற்றியை தாருங்கள்" அப்பொழுது தான் நான் மீண்டும் நாட்டை சுரண்ட முடியும்: இப்படிக்கு நவாஸ்

 • vnatarajan - chennai,இந்தியா

  ஜனநாயகம் என்ற போர்வைக்குள் ஊழல் என்ற முதலைகள்தான் மறைந்திருக்கின்றன. நவாஸ் கட்சியோ பெரும்பான்மையில் ஜெயித்துவிட்டால் நான் ஊழல் வாதியல்ல என்று மக்கள் எனக்கு சேட்டிபிகேட் கொடுத்துவிட்டதாக நவாஸ் பறை சாத்தலாம்

 • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

  இந்த தடவை இம்ரான் கான் தான் PM . நோ டவுட் .

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  அடச்சே.. யோவ் நீயா..? 'அமோக வெற்றியை தாருங்கள்னு' கூவலை கேட்டுட்டு, நான் எங்க பிரதமர் தான் கூவுறாரோன்னு ஓடோடி வந்தேன்.. அவரு தான் தேர்தல்ன உடனே எந்த நாட்டில இருந்தாலும் ஓடோடி வந்து இப்படி கூவிட்டு பிரச்சாரம் முடிஞ்சதும் கப்புசிப்புனு வேற நாட்டுக்கு ஓடிடுவாரு. .தேர்தலை தவிர வேற எதுக்கும் அவரு எங்ககிட்ட பேசவே மாட்டாரு..

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இன்னொரு சசிகலா

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ம்ம்ம்ம் ..... மரியம் நவாஸ் மாதிரி ஹாட் -டான பெண்மணியை சிறையில் போட்டு வாட்ட எப்படி மனம் வருகிறது ????

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  அங்கு ஜனநாயகம் என்பது வெறும் எழுத்தளவில் பேச்சில் மட்டும் தான் யார், ஆட்சிக்கு வந்தாலும்.... அந்நாட்டு தீவீரவாத ராணுவத்திற்கு அடிப்படியனும்... எப்படி இங்கே நம்ம தேசத்தில் மத்தியரசுகள் ஏவல்துறையை வைத்து மிரட்டுவார்களோ அப்படி....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்தியாஉடன் பிணக்கு இல்லை என்றால் உங்களுக்கு வெற்றி உண்டாகும்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பேச்செல்லாம் ஜெயிலுக்குப் போன இந்திய அரசியல்வாதி மாதிரியே பேசுறாரே ..... இந்தியத் துணைக்கண்ட அரசியல்வாதிகள் அத்தன பெரும் ஒரே ரகம்தான் போலிருக்குது .....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஊழல் குற்றவாளி என்று நாவசை தண்டித்து இருக்கிறது பாகிஸ்தான் கோர்ட் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்க போகிறார்கள் ? தேர்தல் முடிவுகள் வந்தால் தெரியும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பெனாசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இருக்கிறதா இல்லியா ? அதன் பெயரை கூட காணவில்லையெ ??

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement