Advertisement

ஆறடி அழகி - தேஜஸ்வினி

நான்கு திருடர்கள் ஒரு ஜமின்தார் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள்...ஜமின்தாரின் மனைவி 'பாலா'வுக்கும் திருடர்களில் ஒருவருக்கம் காதல் மலர்கிறது, 'ஆந்திரா மெஸ்' திறக்கிறது...'பாலா' கேரக்டரில் தன் நடிப்பால் 'அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ்' விழுந்து கொடுத்து அசத்திய ஆறடி அழகி தேஜஸ்வினி காரசாரமாக மனம் திறக்கிறார்...

* நடிகையாக 'லேட் என்ட்ரி' ஏன்?நான் சிவில் இன்ஜினியர், இன்டீரியராகவும் இருக்கிறேன். என் தமிழ் உச்சரிப்பு, குரல் நன்றாக இருந்ததால் டிவி தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின் இந்த லேட் என்ட்ரியை நானே எதிர்பார்க்கவில்லை.

* 'ஆந்திரா மெஸ்' க்கு வந்ததுஒரு முறை இயக்குனர் ஜெய்யை சந்தித்த போது, கதையை சொல்லி ஹீரோயினாக நடிக்க கேட்டார். உடனே நானும் ஓ.கே., சொன்னேன். நடிப்பு அனுபவம் இல்லாததால் நிறைய படங்களை பார்த்தேன், டயலாக் குகளை பேசிய பழகினேன். பின், போட்டோஷூட், ஆக்டிங் டிரையினிங் கொடுத்து நடிக்க வைத்தனர்.

* இது போல் நிறைய படங்கள் வந்துவிட்டதேஇதற்கு முன் வந்த படங்களில் இதே போல் காட்சிகள் வந்து இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் கதைக்களமே இது தான். பிரசாந்த் பிள்ளை இசையும், முகேஷின் ஒளிப்பதிவும் படத்தை காரசாரமாக காட்டி இருக்கிறது.

* படம் ஆண்களை வீக்கர் செக்ஸாக காட்டுகிறதே...ஆண்களை வீக்கர் சென்ஸாக காட்டவில்லை, ஆண்களுக்கு வல்லுணர்வு இருப்பதை தான் காட்டுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் வீக் இல்லை; ஸ்டிராங் தான். தமிழ் சினிமா மட்டும் தான் ஆண்களை சூப்பர் ஹீரோவாகவும், தப்பு செய்பவர்களாகவும் காட்டிக் கொண்டு இருக்கிறது.

* நிஜ வாழ்க்கையில் வாழும் பாலாக்கள்கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தீர்க்கவே முடியாத போது இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டு தனக்கான துணையை தேடிக் கொள்வதில் தப்பில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் ரகசியமாக துணையை தேடிக் கொள்வது தான் தவறு. நமக்கென்று ஆயிரம் ஆசைகள், உணர்வுகள் இருந்தாலும் எப்போதும் சமூகத்தின் விதிமுறையை மீறிவிடக்கூடாது.

* சமூகத்தில் பாலியல் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில் இந்த படம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறதேஇந்த சமூகத்தில் பாலியல் துன்புறுத்தல், கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் படத்தில் வன்முறை இல்லை, ரத்தம் இல்லை, பொறுப்பு உணர்வுடன் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்தி இருக்கிறதே தவிர எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றவில்லை.

* பிரபலங்களுக்கு இன்டீரியர் டிசைனிங்இயக்குனர் லிங்குசாமியின் வீடு, ஆபிஸ், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி வீடு, ஸ்டார் ஓட்டல்களுக்கு இன்டீரியர் செய்திருக்கிறேன்.

* ஜமீன்தாரின் மனைவி பாலா, இளைஞனின் காதலி பாலாநடிக்க அதிக வாய்ப்பு இருந்ததால் தான் இந்த பாலா கேரக்டரில் நடிக்க சம்மதித்தேன். எனக்கு இது ரொம்ப பிடித்து இருக்கிறது. ஜமீன்தாரின் மனைவி காரணம் இல்லாமல் இன்னொரு இளைஞனை காதலிக்கவில்லை. இந்த சமூகத்தில் மறைமுகமாக நடக்கும் நிகழ்வை தான் எங்கள் கேரக்டர்கள் பிரதிபலிக்கிறது.
facebook : Thejaswini S Rangan

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement