Advertisement

ராகுல் தலைமை கட்சியை காக்குமா?

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசும் கருத்துகள், திசை மாறிச் செல்கின்றன. மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளவேண்டும் என்பதும், பிரதமராவதும் அவர் ஆசையாகும்.அரசியல் எதிரியாக பிரதமரைக் கருதி, மோடியை வர்ணிப்பதை வழக்கமாக்கி விட்டார். அதனால், அவர் கட்சித் தலைவர்கள் பலரும் அதே பாணியில் பேசுவது, இந்தியாவையே பழிக்கும் அளவுக்கு மிஞ்சி விடுகிறது.அக்கட்சியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள குலாம் நபி ஆசாத், 'காஷ்மீருக்கு தன்னாட்சி வேண்டும்' என்று கூறிய கருத்து, அங்குள்ள பிரிவினைவாத சக்திகளை ஆதரிப்பதாகும். அதை நாசுக்காக மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க வைத்தனர்.அடுத்ததாக, ஐ.நா.,வின் மிகப்பெரும் பொறுப்பில் இருந்தவரும், திருவனந்தபுரம் காங்கிரஸ், எம்.பி.,யுமான சசி தரூர், பேசியது மிகவும் மோசமானதாகும். தேர்தலுக்காக, மோடி, 'இந்து பாகிஸ்தானை' உருவாக்குகிறார் என்ற கருத்து, ராகுலை திருப்திப்படுத்தி இருக்கலாம்.ராணுவத் தலைமையில் அடக்குமுறை கொண்ட பாகிஸ்தானுடன், இந்தியாவை ஒப்புமைப்படுத்தி பேசியதை, இங்குள்ள முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள். நமது பன்முக வாழ்வில் ஊறியவர்கள் அவர்கள்.அதைத் தொடர்ந்து ராகுலோ, 'முஸ்லிம் காங்கிரஸ்' என்று பேசி, ஒருபடி முன்னேறி நிற்கிறார். அதை இப்போது, 'கடைசியாக இருக்கும் அப்பாவிகளுடன் இருப்பது என் செயல்' என விளக்குகிறார்.ஆனால், 'இன்குலாப்' என்ற இஸ்லாமிய உருது இதழ் ஆசிரியர், ராகுல் பேசியது மெய் என்று விளக்கி விட்டதால், அவரது அவசரத்தனம் ெவளியாகி விட்டது.குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் ஈடுபட்ட போது, 50 கோவில்களுக்கு சென்றிருக்கிறார். சில இடங்களில் பூணுால் அணிந்து சென்று இருக்கிறார். ஆனால், அந்த பயணங்களில், அவர் ஒரு மசூதிக்கு கூட செல்ல வில்லை. எப்போதும் முஸ்லிம் ஆதரவுக் கருத்து மட்டும் பேசும், எம்.பி.,யான ஒவைசி, இக்கருத்தைக் கூறியதற்கு, இதுவரை பதில் காணோம்.மூத்த வழக்கறிஞரும், எம்.பி.,யுமான சிங்வி, 'எதையும் பேச பயமாய் இருக்கிறது; அந்த அளவுக்கு அடக்குமுறை ஆட்சி' என்று கூறுவது, யார் மீது எல்லாம் ஏதாவது வழக்கு அல்லது ஊழல் புகார் இருக்கிறதோ அத்தலைவர்கள் அனைவரும், அக்கட்சியில் நியாயம் பேசும் காலமாகி விட்டது என்பதை ெவளிக்காட்டுகிறது.மொத்தத்தில், இன்றுள்ள காங்கிரஸ், சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த நிலையிலிருந்து மாறி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதுவும், காங்கிரஸ் செயற்குழு என்பது தேர்வு செய்யப்பட்ட அமைப்பாக இருந்த காலம், பலருக்கு மறந்திருக்கும். சோனியா தலைமைப் பதவிக்கு வரும் போது, சீத்தாராம் கேசரி துாக்கி எறியப்பட்ட விதம் மோசமானது.சோனியாவுக்கு உதவிய, மறைந்த அர்ஜுன் சிங் மற்றும் மூத்த தலைவர் பிரணாப் ஆகியோர், அதைக் குடும்பக் கட்சியாக மாற்ற முதலடி எடுத்து வைக்க உதவினர். குறிப்பாக, மோடிக்கு முன்னதாக மன்மோகன் பிரதமராக இருந்த போது கூட, கட்சியை முறைப்படி வளர்க்கவில்லை.செயற்குழு என்பது தேர்வு பெற்ற நபர்களை கொண்டிருக்காமல், சோனியா முடிவு செய்யும் நபர்களைக் கொண்டதாக உருவெடுத்தது. பழைய தலைவர்கள், புது முகங்களை ராகுல் சேர்த்து செயற்குழுவை அமைத்திருக்கிறார். பல மாநிலங் களில் இரண்டு அல்லது மூன்றாம் இடத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்ட சூழ்நிலையில், கட்சியை வளர்க்க, இது தீர்வல்ல.உதாரணமாக, ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவரை விரும்பாத கெலாட், ம.பி.,யில் சிந்தியா ஒரு பக்கம், மறுபக்கம், வயதான கமல்நாத்; இப்படித் தலைவர்கள் முன்னணியில் இருப்பதை அடுக்கலாம்.சுதந்திரத்திற்கு முன், இந்துமகா சபா என்ற கட்சி இருந்தது. அதன் தலைவர்கள், காங்கிரஸ் மேடைகளை அலங்கரிப்பர். என்று, முஸ்லிம்கள் தனியாக ஓட்டளித்து , 'பாகிஸ்தான்' என்ற பெயருடன் நாடு உருவானதோ, அன்றே, இந்து மகாசபாவின் முக்கியத்துவத்தை குறைக்க, பண்டித நேருவுக்கு, வழி எளிதானது.இன்றுள்ள, பா.ஜ., தன்னை இந்துக்கள் கட்சி என்று கூறவில்லை. மாறாக திடமாக முடிவெடுக்கும் ஒருவரை பிரதமராகக் காட்டி வளர்ந்திருக்கிறது.காங்கிரஸ், கம்பெனி நிர்வாகத்திற்கு ஆள் எடுப்பது போல, தன் கட்சி தகவல் தொடர்பாளர்கள் பதவிக்காக, 65 பேருக்கு எழுத்துத் தேர்வு, நேரடித் தேர்வை, உ.பி.,யில் நடத்திருக்கிறது என்றால், அப்பெரிய கட்சியை, சோனியா - ராகுல் அணி எப்படி மாற்றி இருக்கிறது என்பது புரியும். வரும், 2019ல் ஆட்சியைப் பிடிக்க, இவை தான் வழிகளா என்பதே, இன்றுள்ள கேள்வி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • M.Vijayakumar - Coimbatore,இந்தியா

    எப்போது இந்திரா வின் கை அசைவுக்கு காங்கிரஸ் இரூந்ததோ அன்றே சுதந்திரம் பெற உதவிய கட்சி களில் ஒன்றான காங்கிரஸ் அழிந்து விட்டது இது ஊழல் ஜாமின் வண்டி காங்கிரஸ்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மாயாவதியும் அகிலேசும் இருக்கையில் ராகுல் எப்படி பிரதமர் கனவு காண்பது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement