Advertisement

இறகுப்பந்து: 'எலைட்' வீரர் வெற்றி

பொள்ளாச்சி, கோவை மாவட்ட இறகுப்பந்து போட்டியில், பொள்ளாச்சி எலைட் வீரர் வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட இறகுப்பந்து அசோசியேஷன் சார்பில், மாவட்ட இறகுப்பந்து போட்டி காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள், ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு போட்டிகள் நடந்தன.போட்டியில், 450 வீரர்கள் பங்கேற்றனர். அதில், பொள்ளாச்சி எலைட் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் பாலசுப்ரமணியம், 55 வயது, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவுகளில் வெற்றி பெற்று பரிசுகோப்பையை வென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கே.ஜி.ஐ.எஸ்.எல்., இயக்குனர் சந்தோஷ், மின்வாரிய தலைமை பொறியாளர் இசக்கிமுத்து, குணா ஸ்போர்ட்ஸ் நிர்வாகி குணசேகரன் ஆகியோர் வழங்கினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement