Advertisement

மக்களுக்கு அமிர்தம் - எனக்கு விஷம்: கதறியழுத கர்நாடக முதல்வர் குமாரசாமி

பெங்களூரு : ''மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மக்களுக்கு அமிர்தம் வழங்கி, நான் விஷம் குடிப்பேன். பதவி வேண்டாம் என முடிவு எடுத்தால், இரண்டு மணி நேரத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே பேசினார்.

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், குமாரசாமி தலைமையிலான, ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது.முதல்வர் குமாரசாமி மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு, அந்த கட்சி சார்பில், பெங்களூருவில், நேற்று முன்தினம் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


அமைச்சர்களுக்கு, முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, சால்வை அணிவித்து பாராட்டினார். முதல்வர் குமாரசாமி, பாராட்டை ஏற்க மறுத்து, அழுதபடி பேசியதாவது: பிரசாரத்தின் போது, நான் சென்ற இடமெல்லாம், மக்கள் கூட்டம் அலை மோதியது. தங்கள் வீட்டு பிள்ளை போல் அரவணைத்து, மக்கள் வரவேற்றனர்; ஆனால் தேர்தலில் என்னை கைவிட்டு விட்டனர்.

நானும், எங்கள் கட்சியும், எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும், மக்கள் ஓட்டு போடாதது வருத்தமாக உள்ளது. தற்போது கூட்டணி அரசில் முதல்வராக உள்ளேன். இதனால், மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை.

பூங்கொத்து அளித்து, எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ள உங்கள் அன்புக்கு நன்றி. எப்போது முழு பெரும்பான்மை வழங்குவீர்களோ அன்று தான் பாராட்டை ஏற்பேன். முதல்வர் பதவி கடவுள் கொடுத்தது. அதிகாரம் இருக்கும் வரை, மக்கள் சேவை ஆற்றுவேன். கூட்டணி அரசில், அனைத்தையும் விஷ கண்டனாக விழுங்கிக் கொண்டுள்ளேன். பணி செய்வதற்கு
வாய்ப்பளியுங்கள். என் மீது மக்களை துாண்டி விடாதீர்கள்.

மக்களுக்கு அமிர்தம் வழங்கி, நான் விஷம் குடிப்பேன். முடிவு செய்தால், இரண்டு மணி நேரத்தில், முதல்வர் பதவியிலிருந்து விலகுவேன். இவ்வாறு அவர் பேசினார். தன் பேச்சின்போது, குமாரசாமி கதறி அழுதது, மேடையிலிருந்த அனைவரையும் மவுனமாக்கியது.

''உடல் நிலை சரியில்லை என்றாலும், முதல்வர் குமாரசாமி, நாள் தோறும், 18 மணி நேரம் உழைக்கிறார். அவரை பார்க்கும் போது, மனது வலிக்கிறது. அவர் தைரியமாக இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக, நானே களத்தில் இறங்க உள்ளேன். கூட்டணி அரசு கவிழக்கூடாது'' -தேவகவுடா, முன்னாள் பிரதமர், ம.ஜ.த.,

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • bal - chennai,இந்தியா

  அட கிளிசரின் கொஞ்சம் கம்மியா கொடுத்துட்டாங்களே...

 • Thiyaga Rajan - erode,இந்தியா

  நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் ஓடிவிடுவது .மோடிக்கு மெஜாரிட்டி கொடுத்த மக்கள் நெஞ்சில் உதைத்தீர்களே ? அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  முதலை கண்ணீர்...பதவி வேண்டாமென்றால் ராஜினாமா செய்துவிட்டு ஓடவேண்டியதுதானே. கொள்ளுதிண்ண ஆசையிருந்தால் கடிவாளமும் மாட்டிக்கொள்ளத்தான் வேண்டும்...

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஏற்கனவே எடியூரப்பா கதறி அழுதார் , இபோது குமாரசாமி ???

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பெரும்பான்மை கிடைக்காத போது ஏன் முதலமைச்சர் பதவி ஏற்க வேண்டும் . ஒரிசாவில் நவீன் பட்நாயக் , தெலுங்கானாவில் சந்திரசேர ராவ மாதிரி ஏன் மக்களிடம் நம்பிக்கை வாங்கி முதல்வர் ஆக முடியவில்லை

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  நீங்கள் முதல்வர் என்று சட்டை போட்டிருக்கலாம் அனால் அது காங்கிரஸ் இந்திரா உடையது.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பதவி வேண்டும் என்றல் சில அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும், சிந்தியுங்கள், யாரும் முதல்வர் பதவியை சும்மா கொடுக்க மாட்டார்கள்,

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஹஹஹஹஹ நீறு என்னய்யா உங்கட்ச்சி அபிசாலியூட் மெஜாரிட்டி வாங்கிச்சா சோனியாக்கு பிஜேபின்னா பயம் தன் மதம் பரப்பமுடியலேன்னு வெறி உன்னை காவு வாங்கினா நீரு சி எம் போஸ்ட் லே உள்ளவெறியால் குரிசில் குந்தின்னே இப்போ குத்துது குடையுதுன்னா மக்கள் உங்களா எவால்யும் வோட்டுப்போடவே இல்லீங்க உங்கள் தோல்வியே போதுமே சி எம் போஸ்ட் என்ற kamarkattai போட்டுட்டு தான் ஆளவேண்டும் என்று பிளான் பண்ணா பலன் நீர் இப்போ ங்கேன்னு முழிக்குறீங்க நன்னாப்படுங்க அவஸ்த்தை

 • Santhosh -

  If the trailer of pappu led 2 partys coalition within 2 months is this then what will happen in centre of 20 party coalition?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சாருக்கு ஒரு ஆஸ்கார் பார்சல்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement