Advertisement

எனக்கு கிளாமர் பிடிக்காது : மனசோடு மதுமிதா

ஆசை நூறு, வாழ்க்கை, பிறவி-2, ரூட் ஆகிய சினிமாக்களின் கதாநாயகி மதுமிதாவின் மனம்திறந்த பேட்டி :
* நீங்கள்சொந்த ஊர் புதுக்கோட்டை. பிழைப்புக்காக சென்னை வேளச்சேரியில் குடியமர்ந்தோம்.அப்பா பிசினஸ்மேன். அம்மா இல்லத்தரசி. எனது வளர்ப்பு, பி.காம்., படிப்பு எல்லாமே சென்னைதான்.

* சினிமாவில்சென்னையில் ஆடியோ விஷன் 2017 க்கு நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதில் தேர்வானேன். மாடலிங்க்கில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். பல பேன்சி டிரஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.

* 'டிவி' எப்படிகுலதெய்வம் தொடரில் வடிவுக்கரசிக்கு பேத்தியாக நடித்தேன். கடல் கடந்த உத்யோகம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.

* நடிப்பு ஆசைவிஜயகாந்த் ரசிகை நான். அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன். அது முடியாமல் போனதால், அவரது மகன் சண்முகப்பாண்டியுடன் நடிக்க உள்ளேன். தந்தையுடன் முடியாதது, தனயனுடன் முடிகிறது. இதுவும் மகிழ்ச்சிதான்.

* மேக்அப் குறித்துமேக்-அப் இல்லாத உடலும், வாழ்க்கையும்தான் எனக்கு பிடிக்கும். இயற்கை அழகை ரசிப்பேன். கேமராவுக்காக சில நேரங்களில் 'மேக் அப்' தேவைப்படும். அது தொழில் அல்லவா?

* முன்னணி நடிகர்கள்ரஜினியின் மகளாக நடிக்க ஆசை. வேறு நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் வாய்ப்பு கிடைத்தால் விடுவதாகவும் இல்லை.

* பொழுது போக்குஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். அவர் இசைத்த தேசிய கீதம் பாடல் ரெம்பவே பிடிக்கும்.

* நடனம் தெரியுமாசிறுவயதில் இருந்தே நடனங்கள் கற்றேன். நடனம் ஒரு உடல்பயிற்சிதான். டென்னிஸ்சும் விளையாடுவேன், என்றார்.

* கிளாமர் பற்றி...கிளமார் எனக்கு பிடிக்காது. குடும்ப பாங்காக நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம்.

* சினிமா, 'டிவி' வித்தியாசம்சினிமாவில் ஒரு கதையைதான் மட்டும் சொல்ல முடியும். ஆனால் சீரியலில் 10 ஆண்டுகள் கூட கதையை நீட்டிக்க முடியும். தினமும் பல புதிர்களை கொடுக்க முடியும்.

* பிடித்த கேரக்டர் நான் பாசிடிவ் சிந்தனையுடன் உள்ளவள். 'நெகட்டிவ்' ரோலில் நடிக்க ஆசைப்பட மாட்டேன்.

* பெண்கள் பற்றிஎல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி, முத்திரை பதிக்கின்றனர். தடைகளை உடைத்து வருகின்றனர். பெண்கள் விளம்பரங்களை கண்டு ஏமாறக் கூடாது.

* ரோல் மாடல்நடிகர் நஸ்ரியா, விஜய்சேதுபதி நடிப்பு பிடிக்கும். அவர்களையே ரோல் மாடலாகவும் ஏற்றுள்ளேன்.

* பிடித்த உணவுசைவம்தான் அதிகம் பிடிக்கும்.
actrssmadhumithagmail.comல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement