Advertisement

நீதித்துறையில் புரட்சி தேவை: சீர்திருத்தம் அல்ல: ரஞ்சன் கோகெய் 'சுளீர்'

புதுடில்லி: சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை, சீர்திருத்தம் தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக்மிஸ்ரா வரும் அக்டோர் 2-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு ரஞ்சன் கோகெய் அப்பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகெய் பேசியது,நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு. அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதியை காக்க ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து, எனவே சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தான் தேவை. சீர்திருத்தம் தேவையில்லை. என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இப்​போ​தெல்லாம் நாங்கள நீதிது​றை​யை நம்புவதில்​லை காரணம் சாமனியனுக்கு ஒரு நீதியும் பணம் ப​டைத்தவர்களுக்கும் ஆளும் வர்கத்தினருக்கும் ஒரு நீதி ​போய்​கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சாமனியனுக்கு தண்ட​னை என்றால் உட​னே நீதிமன்றம் தன்னு​டைய் தீர்ப்​​பை தாமதம்​செய்யாமல் வழங்குகிறது. அ​தே​நேரத்தில் உயர்பதவி மற்றும் அரசியல் அந்தஸ்தூ உள்ள்வர்களுக்கு சிலரு​டைய உத்த்ரவிற்காக காத்திருக்கிறது. ஆக நிச்சயம் நீதிது​றையில் உள்ளவர்கள் மனுநீதி ​சோழன் ​போன்றவர்கள் இருந்தால் மட்டு​மே இன்​றைய சூழலில் நியாயம் கி​டைக்கும்

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  எல்லாம் சரி. இந்த ஆளு சொந்த சொத்து கணக்கை வெளியிட்டுள்ளாரா ?? முதலில் அதை கவனிங்க. பாக்கியெல்லாம் அப்புறம்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  "பச்சைத்" திராவிடர்களுக்குப் பிடித்த வார்த்தை ஆயிற்றே ????

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  நிச்சயமாக நீதித்துறையில் புரட்சி தேவை. சாமானியனுக்கு தெரிந்த நீதியை சில நீதிபதிகள் சுத்தமாக மறைத்துவிட்டு வேறு பல காரணங்களுக்காக குற்றவாளிகளுக்கு சாதகமாக கொடுக்கும் தீர்ப்புகள் பின்னர் மேல்முறையீட்டில் திருத்தப்பட்டால் அப்படி தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கு ஏதேனும் ஒரு சிறிய தண்டனையாவது கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக குமாரசாமியின் தீர்ப்பு, 2G வழக்கில் சைனியின் தீர்ப்பு, சிதம்பரம் குடும்பத்திற்கு தொடர்ந்து எல்லா நீதிமன்றங்களிலும் ஜாமீன் போன்றவை. ஆனால் நான் சொல்லும் புரட்சியை இவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.

 • Mohan Kumar - chennai,இந்தியா

  'solvadhu yaarkkum elidhu, but do that is not easy at all. Here, they do not the difference between 'advice' and 'suggestion' all are advising without knowing the subject, even. So your JOB is over. Do the same i.e. beating the same .......... Neither puratchi is going to take place nor courts are going to change their attitude. Summer vacation, Christmas or New year vacation and so on. ENJOY

Advertisement