Advertisement

ஆன்மிக குரு வாஸ்வானி காலமானார்

புனே:மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக குருவும், 'சாது வாஸ்வானி மிஷன்' அமைப்பின் நிறுவனருமான, ஜே.பி.வாஸ்வானி, 99, உடல்நலக் குறைவால், நேற்று காலமானார்.
ஜே.பி.வாஸ்வானி, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில், சாது வாஸ்வானி மிஷன் என்ற தன்னார்வ அமைப்பை துவக்கினார்.இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பு சார்பில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன.
வயோதிகத்தால் ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக, புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாஸ்வானி, நேற்று முன் தினம் இரவு, மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். நேற்று காலை, அவரது உயிர் பிரிந்தது.அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை, புனேயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக குரு, வாஸ்வானியின் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement