Advertisement

மின் மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திம்மராஜம்பேட்டை:நுாலகம் அருகே, மின் மாற்றி அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மின் வாரிய அதிகாரிகள், பணியை தற்காலிகமாக நிறுத்தினர்.
வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை ஊராட்சியில், சீயமங்கலம்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு, தனி நபர் ஒருவருக்கு, வர்த்தக மின் இணைப்பு கொடுப்பதற்கு, 100 கே.வி., திறன் மின் மாற்றி அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.இதற்கு, இப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், மின்வாரிய அதிகாரிகள், மின் மாற்றி அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இப்பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சீயமங்கலம்பேட்டை கிராம மக்கள் கூறியதாவது:மின்மாற்றி அமைக்க தேர்வு செய்த இடத்தை விட்டு, வேறு இடத்தில் போடுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியை நிறுத்தி உள்ளோம். அதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, வேறு இடத்தில், இடம் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement