Advertisement

'நீட்' தேர்வு விவகாரம்; 'அப்பீல்' செய்ய முடிவு

புதுடில்லி : மருத்துவ மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட், எம்.பி., - டி.கே.ரங்கராஜன், நீட் தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு: தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறான வினாக்களுக்கு, தலா, 4 மதிப்பெண் வீதம், 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், புதிய தரவரிசை பட்டியலை, சி.பி.எஸ்.இ., இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும். அதுவரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய, சி.பி.எஸ்.ஐ., முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், சி.பி.எஸ்.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட், எம்.பி., ரங்கராஜன், ஏற்கனவே, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  If the students could not understand even the question paper in English,how will they face and study their Medical syllabus and get through successfully in their semester examinations???How they are going to study and complete their tenure, how can they understand the lessons and the complicate medical terms,it is really pathetic and it is very very difficult for them to pass out the MBBS degree. g.s.rajan, Chennai.

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  இந்த தீர்ப்பு மூலம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்வுக்கு வரவேண்டும். இந்தியாவில் மருத்துவ படிப்பு ஆங்கிலத்தில் உள்ளதால் அதில் சேர்வற்கான தகுதி தேர்வும் இனி ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறவேண்டும் என முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் வரும் வருடங்களில் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி மற்ற மாநிலத்திலும் இதே குளறுபடிகள் நடக்கும், இந்தியாவில் மருத்துவ படியுப்பு என்பது கேலிக்கூத்தாகிவிடும்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Plus two Students could not understand the Questions in English ,where we are ???Very pathetic and illogical.It is almost wrong guidance by the political parties in Tamil nadu and the state Government ,who is to blamed??? whether we are going back to the stone age. g.s.rajan, Chennai.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  It is totally Upsurd that a plus two students are not understanding English after tenth and plus two nowadays even LKG ,UKG students are understanding and have thorough knowledge and fluency,those who are weak at English and could not understand the questions properly ,how will they study for MBBS if ed how will they study and pass the semester examination,who is to be blamed???our education tem ???,our policies???wrong guidance of political leaders???Our Negligence ??? fearsome to face the competitions???will these policies can be worked out in International sports, those who perform will win and could get gold medal others have to perish,our politicians here after could focus on International sports events and fight for relaxation in all categories so that India could get more medals right from the Olympics. g.s.rajan, Chennai.

 • Jaya Ram - madurai,இந்தியா

  நாங்க தான் ஏற்கனவே சொல்லிட்டோம்ல உங்களுக்கு அதிக சீட்டா விட்ருவோமா உங்களைக்கீழே தள்ளத்தான் இந்த நீட்ட நாங்க கொண்டுவந்தோம் நாங்க cbse சிலபஸ் ல எவ்வளவு பேர் படித்துவிட்டு மெடிக்கல் சீட்டுக்காக காத்திருக்கிறோம் நீங்க காவேரின்ட்மென்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து எங்க கூட போட்டி போடறீங்களா விற்றுவோமா, மந்திரிகள் எல்லாம் யாரு எங்காளுங்க எங்களை விட்டுருவங்களா? பாரு அப்பீல் எங்க பக்கம் தான் தீர்ப்பு வரும் அங்கேயும் எங்களுக்கு செல்வாக்குதான் இல்லைனா உங்களுக்கு விலக்கு தர மறுப்பாங்களா பார்த்திருவோம் ஒரு கை

Advertisement