Advertisement

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கனகம்மாசத்திரம்:மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவாலங்காடு ஒன்றியம்,முத்துக்கொண்டாபுரம் பகுதியில், செல்லும் கொற்றலை ஆற்றில் இருந்து, அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, கனகம்மாசத்திரம் போலீசார் மேற்கண்ட ஆற்றில் திடீர் சோதனைநடத்தினர்.
அப்போது, பதிவெண் இல்லாத ஒருடிராக்டர் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை, போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.போலீசாரை கண்டதும்,அதன் ஓட்டுனர் தப்பி ஓடினார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement