Advertisement

சத்துணவுக்கு முட்டை சப்ளை பாதிப்பு?

சென்னை : முட்டை சப்ளைக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு டெண்டர் கோருவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த மாதம் முதல், சத்துணவு திட்டத்திற்கு, முட்டை சப்ளை செய்வது சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், அங்கன்வாடிகள், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மதிய உணவு வழங்கும் சத்துணவுத்திட்டம், செயல்பாட்டில் உள்ளது. சத்துணவுடன் தற்போது, முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்ட அளவில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. 2012 முதல், மாநில அளவில் முட்டை கொள்முதல் செய்யும் வகையில், டெண்டர் கோரப்பட்டது.

இந்த ஆண்டு, ஆக., 1 முதல், 2019 ஜூலை, 31 வரை, தினமும், 50 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் திறப்பு, சமூக நலத்துறை சார்பில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறு நிறுவனங்களும் நிராகரிக்கப்பட்டு, டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இவற்றில், மூன்று நிறுவனங்கள், சமீபத்தில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய, கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்தவை. கிறிஸ்டி நிறுவனம்தான் தற்போது, முட்டை சப்ளை செய்து வருகிறது. இந்த நிறுவனம், இம்மாதம், 30ம் தேதி வரை மட்டுமே, முட்டை சப்ளை செய்யும்.

சிக்கல் :டெண்டர் ரத்தானதால், மறு டெண்டர் விட தாமதமாகும். இதனால், சத்துணவு திட்டத்திற்கான முட்டை சப்ளை செய்வது, கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து, சமூக நலத்துறை அமைச்சர், சரோஜாவை சந்தித்து கேட்பதற்காக, தலைமை செயலகத்தில் உள்ள, அவரது அறைக்கு சென்றனர். 'சற்று நேரம் காத்திருங்கள்' எனக்கூறிய அமைச்சரின் உதவியாளர்கள், பின், 'இன்று அமைச்சர் பிசியாக உள்ளார்; சந்திக்க முடியாது' என்றனர்.

சமூக நலத்துறை செயலர் விடுப்பில் உள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, 'இயக்குனர் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறார்; இப்போது தொடர்பு கொள்ள முடியாது' என, அலுவலக பணியாளர்கள் கூறினர்.

கீழ்மட்ட அதிகாரிகள் கூறுகையில், 'அவசரத்திற்காக குறுகிய கால டெண்டர் கோரப்பட்டு, முட்டை கொள்முதல் செய்ய வழி உள்ளது. அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என, தெரியவில்லை' என்றனர்.

பெண் ஐ.ஏ.எஸ்., சஸ்பெண்ட்:தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான முட்டை, பருப்பு போன்றவற்றை சப்ளை செய்த, கிறிஸ்டி குழுமத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, முட்டை, பருப்பு கொள்முதலில், முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இந்த சோதனையின் ஒரு பகுதியாக, சென்னை, நெற்குன்றத்தில் உள்ள, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதாதேவி வீட்டிலும், சோதனை நடந்தது. இவரது சொந்த ஊர், நாமக்கல். 2002ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, இமாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், தமிழகப் பணிக்கு வந்த இவர், 2017 ஆக., 26 முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனராக உள்ளார். இவரது வீட்டிலும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, நேற்று தகவல்கள் பரவின. இந்த தகவல் தவறானது என, அதிகாரிகள் கூறினர். சுதாதேவி நேற்று, வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தார். சோதனை தொடர்பாக, வருமான வரித்துறையிடமிருந்து அறிக்கை வந்தபின், சுதாதேவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, அரசு ஆலோசிக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • rajan. - kerala,இந்தியா

  ஊழல் நாயகிகளின் கூட்டு கும்மியாட்டம். தமிழ் நாட்டில ஊழல் அரங்கேறாமல் எந்த திட்டம் உள்ளது?

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  ஒன்னும் பண்ண முடியாது , தமிழ் நாடு லஞ்சத்தில் மூழ்கிவிட்டது . அரசுக்கு கட்டிடவேண்டிய பணத்தை கட்டுவதற்கு கூட லஞ்சம் கொடுத்தால்தான் கட்டமுடிகிறது .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  டெண்டரை ரத்து செய்தாலே விலை பாதியாகி விடும்... அதனால் பொதுமக்கள் எல்லோரும் வாங்கி பயன் பெறுவார்கள்... என்ன உங்களுக்கு கிடைக்கும் கமிஷன் கிடைக்காமல் போகும்...

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  தமிழ் நாட்டை ஆள தகுதியே இதுதான். டிவி .மிக்ஸி ,கிரைண்டர்,பேன் ,செருப்பு , பேக்.சைக்கிள்,தாலிக்கு தங்கம்,ஆடு அரிசி .இவற்றுடன் முட்டை இத்தனையும் மக்களின் பார்வையில் இலவசமே ஆனால் அரசியல் வாதிகளின் பார்வையில் கமிசன் இவ்வளவு இலவசம் கொடுத்தால் வோட்டுக்கு 1000 வரை தரலாம். இது போக டாஸ்மாக் வருமானம் இந்த வருமானத்தில் வோட்டுக்கு 2000 வரை கொடுக்கலாம் ஆக வோட்டுக்கு 5000 வரை தர முடியும். இப்படி ஏமாற்றி இலவசம் என்ற பெயரில் வறுமையை உண்டாக்கி வோட்டுக்கு பயன் படுத்தி கொள்கிறார்கள்.தமிழனை போல் ஏமாளியும் இல்லை ஏமாற்றுபவனும் உலகில் இல்லை.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மேலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல்... அதிகாரிகளும் உடந்தை... பிறகு எப்படி மாநிலத்தை திருத்த முடியும்?

Advertisement