Advertisement

திருமண செலவுகளை தெரிவிப்பதை கட்டாயமாக்க சுப்ரீம் கோர்ட் யோசனை

புதுடில்லி : 'திருமண செலவுகளை, இருதரப்பினரும் வெளிப்படையாக தெரிவிப்பதை கட்டாயமாக்கினால், வரதட்சணை கொடுமை குறைய வாய்ப்புள்ளது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், விவாகரத்து வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு, என்னை கொடுமைப்படுத்துகின்றனர்' என, தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணின் கணவர் வீட்டார், இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது: திருமணம் தொடர்பான பிரச்னைகளில், வரதட்சணை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. வரதட்சணை கொடுமையை குறைப்பதற்கான வழிகளை, நாம் தேட வேண்டும். திருமணச் செலவுகளை, இரு தரப்பினரும், திருமண பதிவு அதிகாரியிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகளால், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சம்பவங்கள், எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. மேலும், திருமண செலவில் ஒரு பகுதியை, பெண்ணின் பெயரில், வங்கியில், 'டிபாசிட்' செய்வதை கட்டாயமாக்க வேண்டும். பிற்காலத்தில், பிரச்னைகள் ஏற்பட்டால், அதை சமாளிக்க, அந்த பெண்ணிற்கு, அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இது தொடர்பாக, மத்திய அரசு, தன் கருத்தை தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவி செய்யும்படி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • sampath, k - HOSUR,இந்தியா

  Courts should pass orders only based on the majority of public opinion and the views of individual should not be passed as rules and regulations

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  படித்து வேலையில் இருப்பவர்கள் சிலர் காதல் திருமணம்செய்து கொள்கிறார்கள்.இதை திருமண செலவு ஏற்படுவதில்லை வரதட்சணை பிறர்ச்சனையும் இல்லை.

 • abdul rajak - trichy,இந்தியா

  திருமணத்தில் பெண் மற்றும் அவரது வீட்டார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . எனவே மாப்பிள்ளை தான் பிற வீட்டு மண பெண் தன் வீட்டுக்கு வர , தச்சனை (மகர் ) குடுக்க வேண்டும் .

 • Kailash - Chennai,இந்தியா

  இப்போதெல்லாம் படித்த சமூகத்தில் வரதட்சிணை கேட்பதில்லை ஆண்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று விட்டு விடுகிறார்கள் வரதட்சிணை வேண்டாம் என்றால் எதோ பிரச்னை உள்ளதோ என்று நினைக்கின்றனர், ஆனால் நடுத்தர குடும்பத்து பெண்கள் பையனுக்கு மாதம் இவ்வளவு சம்பளம் வேண்டும் , சொந்த வீடு சொத்துக்கள் தேவை என்று வியாபாரம் பேசுகிறார்கள் பெண்ணின் பெற்றோர். வேலைக்கு போகும் பெண் இதெல்லாம் சம்பாதிக்க துப்புஇல்லாமல் வரப்போகிறவனிடம் எதிர்பார்க்கிறார்கள். அதுபோக பெண்ணின் பெற்றோர் பெண்ணின் சம்பாத்தியம் வேறு வீட்டுக்கு போகுமே என்று பெற்றோர் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க யோசிக்கிறார்கள் அதனால் இவ்வளவு கண்டிஷன் போட்டு தள்ளி வைத்து முடிந்தளவு லாபம் பார்க்கிறார்கள். திருமண வயதில் இருக்கும் ஆண்களின் பெற்றோரிடம் நடைமுறையில் இப்படி இருக்கிறதா என்று விசாரித்து கொள்ளவும்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  மனைவியாக தன்வாழ்நாள் பூராவும்,புகுந்தவீட்டில் வாழபோகிறவள். குடும்பத்தையே, பாதுகாப்பவள்,குடும்பத்தாரிடம் அனுசரனையாக இருப்பவள், பிறந்த இடத்தில் சுமார் 22 ஆண்டுகள் வரைதான் வாழ்வாள், மீதிகாலத்தை புகுந்தவீட்டில் வாழபோகிறவள்.தாயாக, சேய்யாக,வேலைக்காரியாக, எஜமானியாக, வயதானகாலத்தில் உறுதுணையாக,வாழபோகிறவள். அவளிடம் வரதட்சணை கேட்கும் ஆண் மிருகஜாதியை சார்ந்தவர்கள்.

" "
Advertisement