Advertisement

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வரும் 16ம் தேதி துவங்க இருந்த தனியார் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.


'நீட்' தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும், மருத்துவ சேர்க்கைகான புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவுக்கு சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவின் படியே தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மருத்துவ தேர்வுகுழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடத்தப்பட இருந்த தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. கவுன்சிலிங் குறித்த மறுதேதி இணையளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அதேபோல் இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் இம்மாதம் 10, 11ம் தேதிகளில் ஆன்லைன் வழியே நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முடிவுகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குழப்பம்:தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இதில் 3,500க்கும் மேற்பட்டோர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மேலும் அந்தந்த மருத்துவ கல்லுாரிகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது. இதற்கு மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளும் சரியான பதிலளிக்காமல் இருப்பதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யார் செய்த தவறோ மாணாக்கர்களை பந்தாடுகிறது...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லா அறிவியல் சொற்களையும் தமிழ் வழிக்கல்வியில் பயிற்றுவிக்கும்போது அதற்கான ஆங்கிலச்சொல்லையும் சேர்த்தே பயிற்றுவிக்கவேண்டும் ஜப்பான் போன்ற நாடுகளில் அதுபோலத்தான் செய்கிறார்கள் .அபப்டி செய்திருந்தால் கேள்வி மொழிபெயர்ப்பில் ஐயமிருப்பவர்கள் ஆங்கில கேள்வித்தாளை பார்த்து புரிந்து பதிலெழுதியிருப்பார்கள் . எப்படியும் எம் பி பி எஸ் ஆங்கில வழியிலேயே படிக்கப்போவதால் அறிவியற்சொற்களை ஆங்கிலத்திலும் கூடுதாகப் பயிற்றுவிப்பதே சரியான முறை. ஏனெனில் எம் பி பி எஸ் முதலாண்டில் இந்த மொழிப் பிரச்சனையால் பாதிபேர் பெயிலாகிவிடுகிறார்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  கேள்வித்தாள்களை மொழிபெயர்த்து தமிழகப் பள்ளிகளில் தமிழ்வழியில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்தான் . அவர்களது மொழிபெயர்ப்பின் ஒரிஜினல் லையெழுத்துப்பிரதி நீட் தேர்வு நடத்திய அலுவலகத்தில் இருக்கும். அதனைக் கோர்ட்டில் காட்டினால் மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு செல்லாது என அறிவித்துவிடும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே தவறான மொழிபெயர்ப்பு செய்த்தாக அநியாயமாகப் பேசுபவர்கள்மீது அரசு குண்டர்சட்டத்தில் நடவடிக்கையெடுக்கவேண்டும். அவர்கள் பின்னால் மாவோயிஸ்டுகள் இருக்கும் சாத்தியமுள்ளது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஊழல் ஜெயாவின் ஆதரவால் எம்பியான மஹாத்மா ரங்கராஜன் அதே கட்சி ஆட்சிமீது வழக்குப்போடுகிறார் .பாதிக்கப்பட்ட மாணவர் எவராவது வழக்குப்போடலாம் . சம்பந்தமில்லாமல் ஆஜராகும் ரங்கராஜனை கோர்ட் தண்டிக்கவேண்டும் .

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  // தூத்துக்குடி மாவட்டம் மக்களின் வாழ்க்கையை கெடுத்தாச்சு. அடுத்து மாணவர்கள். இத்தனை நாளாக இந்த ரங்கராஜன் எங்க போயிருந்தார்??? // ஜெயா கொடுத்த ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக வாலை சுருட்டிக் கொண்டு மூலையில முக்காடு போட்டுக் கொண்டு குந்திக் கொண்டிருந்தார்

Advertisement