Advertisement

பலாத்கார வழக்கு: எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிக்கை

புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துளளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர்,கடந்த 2017- ஜூன் 4-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் புகார் அளித்தார்.
நடவடிக்கை இல்லை
இதையடுத்து, தனக்கு நியாயம் வேண்டியும், நடந்த கொடுமைக்கு தீர்வு கிடைக்காததை கண்டித்து, இளம் பெண் முதல்வர் வீடு முன், தீக்குளிக்க முயன்றார்.பின்னர் .இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள், , லக்னோவிற்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கை கைது செய்யும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர் மீது 19 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்த குற்றசாட்டு உண்மை எனில். கடும் தண்டனை இவருக்கு உண்டு.

 • மாயா -

  இவர்(ன்) எல்லாவிதமான போதைக்கும் அடிமை. விரைவில் தண்டனை தரவேண்டும்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, ஒழுக்கமில்லா ஆட்கள் சிலர், எல்லா இடங்களிலும், எல்லா கட்சிகளிலும் உண்டுதானே?. இப்படிப்பட்ட ஒழக்கமில்லாதவர்களை, அந்தந்த கட்சியின் தலமைகள்தான் களையெடுக்கனும்ங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பதவிக்கு ஏற்ற செய்கை இல்லை... பி ஜெ பி என்றாலே பயங்கர ஜொள்ளு பார்ட்டி என்று அர்த்தம் போல

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  மோடியின் ஆட்சியில் ஒரு துணை முதல்வரை பதவி விலக சொன்னார், ஒரு MLA சிறைக்கு சென்று உள்ளார் அவரது கட்சியில் இருந்தே. .. இதே நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்ததா ? சசி தரூர் தான் அவரது மனைவியை கொன்றார் என்று ஒரு கான்ஸ்டாப்பிலே சொல்லுவார் ஆனால் ஒரே இரவில் அத்தனை தடயங்களையும் அழிக்க உதவியது காங்கிரஸ் ஆட்சியே தவிர மோடி ஆட்சி இல்லை. 2G வழக்கில் எத்தினை மர்மமான முறையில் எத்தினை பேர் தூக்கில் இட பட்டனர். தவறு செய்தவர் தந்தை தாய் ஆனாலும் தட்டி கேட்க கூடிய துணிவு உள்ளவரே தலைவர் ஆக முடியும். மோடியின் குடும்பம் இன்னுமும் ஆட்டோவில் பயணம் செய்வதே சிறந்த உதாரணம்.

 • Darmavan - Chennai,இந்தியா

  ivanMLA பதவி பறிக்கப்படவேண்டும்.கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. // தவறான தகவல் . மாநில போலீஸ் ஒன்றும் நடவடிக்கவில்லை , மாறாக பெண்ணின் தந்தையை போலீஸ்ஸ்டேஷனில் அடித்து கொலை செய்து விட்டார்கள் . கோர்ட் தானே வழக்கை எடுத்து FIR file செய்ய உத்தரவு இட்டு CBI இந்த வழக்கை நடத்த சொன்னது . கோர்ட் தான் கைது செய்தது , பிஜேபி போலீஸ் அல்ல .

 • Anandan - chennai,இந்தியா

  இது போன்ற கயவர்களுக்கு கொடி ஏந்தி ஆதரவு ஊர்வலம் செல்லும் அளவுக்கு கேவலமாக இருக்கிறது பிஜேபி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement