Advertisement

எலியட்சில் மாரத்தான் ஓட்டம்

சென்னை: உலக கோப்பை கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் வரும், 15ம் தேதி, மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.ரஷ்யாவில், 32 அணிகள் பங்கேற்கும், 'பிபா' உலக கோப்பை கால்பந்து விளையாட்டு தொடர் நடந்து வருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில், 'தி சென்னை ஸ்போர்ட்ஸ் மிஷன் டிரஸ்ட்' சார்பில், மாரத்தான் ஓட்டம், கடந்த, 8ம் தேதி, மெரினாவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பல்வேறு காரணங்களால், அந்த ஓட்டம் நடக்கவில்லை. தற்போது, வரும், 15ம் தேதி, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில், நடக்க உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். ஏராளமானோர் ஓடும் வகையில், இந்த ஓட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement