Advertisement

தமிழக மாநில சதுரங்கம் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, மாநில சதுரங்க போட்டியில் பங்கேற்க, சவிதா பொறியியல் கல்லுாரி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் மாவட்ட சதுரங்க சங்கம் ஆதரவுடன், தண்டலம் பகுதியில் உள்ள சவீதா பொறியியல் கல்லுாரி சார்பில், தமிழக அளவிலான மாநில சதுரங்க போட்டி, கல்லுாரி வளாகத்தில் உள்ள நெல்லை அரங்கத்தில், ஜூலை, 21ல் துவங்க உள்ளது.இதில், 8, 10, 12, 14 மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், போட்டிகள் நடக்க உள்ளன. சவீதா பொறியியல் கல்லுாரி சார்பில், தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள், ஜூலை, 19ம் தேதிக்குள், www.paychessentry.com, www.pay4chess.com என்ற இணையதள முகவரி அல்லது 94446- 70020, 98431 90075 ஆகிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement