Advertisement

பள்ளி பேட்மின்டன் போட்டி : இரு பிரிவில் எம்.சி.சி., முதலிடம்

சேத்துப்பட்டு: சென்னையில் நடந்து வரும், பள்ளிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டியில், இரு பிரிவில், எம்.சி.சி., பள்ளி மாணவியர் வெற்றிபெற்றுள்ளனர்.சேத்துப்பட்டு, எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட், பேட்மின்டன், கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றன. இதில், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவு களில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, பல்வேறு தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.மாணவியருக்கான, 19 வயதிற்கு உட்பட்டோர் தனி நபர் போட்டியில், எம்.சி.சி., பள்ளியைச் சேர்ந்த, ரூபிலட்சுமி முதலிடத்தையும், செயின்ட் மேரிஸ் பள்ளியைச் சேர்ந்த, லாவண்யா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.இரட்டையர் பிரிவில், எம்.சி.சி., பள்ளி மாணவியர், ரூபி லட்சுமி, பிரீத்தி அணி, முதலிடத்தை பிடித்தது. 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் இரட்டையர் பிரிவில், எம்.சி.சி., பள்ளி, வர்ஷா மற்றும் பிரதிக்க்ஷா அணியினர் வெற்றி பெற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement