Advertisement

ரூ.1,500 கோடி முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்

சென்னை : 'மின் வாரியத்தில், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சட்டசபை தொடரின், இறுதி நாளில் வைக்கப்பட்ட, மத்திய தணிக்கை அறிக்கையில், தமிழக அரசின் ஒட்டுமொத்த தோல்விகளும் அணிவகுத்து நிற்கின்றன. தமிழ்நாடு மின் வாரியம், 2013 அக்., முதல், 2016 பிப்., வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும், 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததால், இந்த மோசமான இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது என, மத்திய தணிக்கை
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. தரமில்லாத நிலக்கரி இறக்குமதியில் மட்டும், 607 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுஇருக்கிறது. சென்னை, மக்களை பேரிடரில் சிக்க வைத்த வெள்ளம் பற்றிய தணிக்கை அறிக்கை, அ.தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விக்கு சான்று.

'பந்தோபஸ்து' பணிக்கான கட்டணங்களை உரிய காலத்தில், டி.ஜி.பி., மாற்றி அமைக்காததால், அரசுக்கு, 98 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசின் மெத்தனத்தால், 1,120 கோடி ரூபாய் வணிக வரி இழப்பு; 25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், 2016- - 17ல், 9,366 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தணிக்கை அறிக்கை, அ.தி.மு.க., அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது.

இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு கஜானாவை, அ.தி.மு.க., அரசு காலி செய்திருப்பது தெரிகிறது. மின் வாரியத்தில், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், தி.மு.க., சார்பில், வழக்கு தொடரப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், 'தமிழக அரசு தாக்கல் செய்துள்ள லோக்ஆயுக்தா சட்ட மசோதாவை தி.மு.க., எதிர்க்கவில்லை; ஆனால், அது, பல் இல்லாத பொக்கை வாயாக, வெட்ட பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது.

'உண்மையாக, ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும். வலிமையான பற்களை உடைய, லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, அடி முதல் நுனி வரை விரும்பி சுவைக்கும் கரும்பாக, சட்டத்தை மக்கள் வரவேற்கும் காலம், ஜனநாயக ரீதியாக விரைவில் அமையும்' எனக் கூறிஉள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Manian - Chennai,இந்தியா

  ஒருவேளை ஒங்க குடும்பமே இதே நிலக்கரியை விற்று கொள்ளை அடிதரித்துத்தால், இப்படி அறிக்கை விடுவீரா? ஒரு அரசியல் தலைவனுக்கு இருக்க வேண்டிய சிந்தனை திறனே இல்லாமல் கோவில் கோவிலாக போனாலும், கடவுளுக்கு சிரிப்புதான் வரும். ஆனால் அவருக்கு வை விட்டு சிரிக்கதான் நேரமில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோமாளி வேண்டும், இல்லாவிட்டால் வாய் விட்டு சிரிக்க முடியாது என்று ஓரூ அறிஞ்ர் சொன்னதாகா ஞாபகம். உமது தினசரி அறிக்கை சிலருக்காவது சிரிப்பை தருகிறதே என்பதால், பெற்ராளே பெற்ராலே பிறரை சிரிக்க வைக்க பெற்ராலே என்று தயாளு அம்மாவை போற்றத்தான் வேண்டும். திருடர்கள் கழக தலைவரும் "என தவம் செய்தாயோ," என்று பாடவும் செய்யவேண்டும்.

 • sridhar - Chennai,இந்தியா

  தினமும் ஒரு அறிக்கை. ஒவ்வொரு அறிக்கையும் உன் பெயரைத்தான் கெடுக்கிறது. உன் கட்சிக்கு உன் அறிக்கைகள் தான் சவப்பெட்டி.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா 12-ஜூலை-2018 08:05 இளங்கோவன் கொடுத்த புகார் சரி. காங்கிரஸ் மேல் மொத்த ஊழல் புகார்களுக்கு யாரிடம் மனு கொடுத்தார் இவர். மீது குஷ்பு கணவன் கொடுத்த புகார் என்னாச்சு///// - அட, கூவத்தை விட, தொள பதி விசயம் நாறுதையா?.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  என்னது லண்டனலிருந்து கூட அறிக்கை விடுவீர்களா ஓயவே மாட்டிங்களா

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, பித்தளையை பார்த்து இளித்ததாம் ஈயம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நிலக்கரி ஊழலை கண்டு பிடிக்க எழுபதுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்...அப்பொழுதுதான் உண்மையான நிலவரம் தெரியும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அடையாறு ஆறே ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் வெள்ள நீர் வேகமாக வடியவில்லை என CAGஅறிக்கை சொல்கிறது அந்த ஆற்றை அதிகம் ஆக்கிரமித்துள்ளது உங்ககட்சியாட்கள். எனவே .அவர்கள்தான் முக்கிய கொலைகாரர்கள். உஙகள் கை சுத்தமென்றால் வெள்ளத்திற்குப்பின்பும் அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் போராடவில்லை ? 176000000000000000 கொள்ளையன் ஜுஜுபி 1500கோடியை பத்தி பேசலாமா ?

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  இளங்கோவன் கொடுத்த புகார் சரி. காங்கிரஸ் மேல் மொத்த ஊழல் புகார்களுக்கு யாரிடம் மனு கொடுத்தார் இவர். மீது குஷ்பு கணவன் கொடுத்த புகார் என்னாச்சு

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  CAN அறிக்கை யுகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது என்று 2 G நடந்தது என்ன விளக்க கூட்டத்தில உங்க கட்சி சொல்லுச்சு . இப்ப CHA அறிக்கை சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் சொன்னால் அப்போ சொன்னது பொய் என்று நீங்கள் ஒத்துக்கொண்டால் உங்களின் ஊழல் உண்மையே. இப்படி நீங்களே வாயை திறந்து மாட்டீங்கறீங்களே. உங்களுக்கு எழுதிகொடுக்கற ஆள் உங்களுக்கு துரோகம் செய்யறது மாதிரி தெரியுது..

 • sathish - Chennai,இந்தியா

  ஆட்சி யை கலைக்குனும்னா திமுக சப்பாணி என்னவெய்னுன செய் வாறு.... இந்த பொழப்புக்கு பொய் புதுசா நடிகர் னு சொல்லு ஒரு கிறுக்கன் இருக்கா பாரு உன்னோட மகன் ஆவணனோடு பொய் காமெடி ரோல் ல நடி... டெய்லி நியூஸ் பேப்பர் படிக்கலாம் னு நெனைச்சா உன்னோட இம்சை தங்களடா....

 • RajaSekaran -

  conforma veanum

 • Ivan -

  Ivaru ellathukum cbi enquiry ketparu, cbi ivaru veetu maid nu nenachi kitu irukaru. Apparam police, cbcid lam close panni da vendi thane.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  லண்டன் போனார்னு சொன்னாங்க ..இந்த சுடலையும் அந்த சுடலையும் வேறு வேறா

 • HSR - Chennai,இந்தியா

  இவர் இன்னும் லண்டன் போகலியா

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  போன தேர்தலின் போது காங். இளங்கோவன் கொடுத்த ஊழல் புகார் பட்டியலில் இவையெல்லாம் பட்டியல் இடப்பட்டிருந்தன.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //தமிழ்நாடு மின் வாரியம், 2013 அக்., முதல், 2016 பிப்., வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும், 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது// CAG அறிக்கை தான் சொல்லியுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்வு ஆணையம் நிலக்கரி ஏற்றுமதியாளர்களிடம் தானாகவே முன்சென்று நிலக்கரி விலையை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று ஆணை கொடுத்த விபரீதமும் அதில் சொல்லப்பட்டுள்ளது..

 • Baskar - Paris,பிரான்ஸ்

  இவரும் இவர் குடும்பமும் செய்யாத ஊழல்களா. இவர்கள் செய்த ஊழல்களுக்கு எல்லாம் சி.பி.ஐ விசாரணை வைத்தால் நாடு தாங்காது. எல்லாம் உங்கள் நேரம் ஆனால் ஒன்று இப்படியே பேசி கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் ஆப்பு தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement